முதல் பக்கத்தில் titanicன் பயண ஆரம்பத்தையும், அதன் ஆடம்பர அழகையும் பார்த்தோம், இந்த பகுதியில் titanic எப்படி விபத்தில் சிக்கியது அதன் பின் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
பனிப்பாறைப்பற்றிய Warning Message:
மாலை ஆறு மணி, இப்போது பாதுகாப்பான பகுதியில் கப்பல் செல்வதாக கேப்டன் நம்பினார், மீண்டும் ஒரு ice warning message, இந்த முறை அனுப்பியது SS Californian என்ற கப்பல்,பிலிப்ஸ் அடுத்த கேபினில் ஓய்வெடுத்து கொண்டிருக்க அவரது assistant, bride வேறு வேலையில் அவசரமாக இருந்ததால் SS Californian அனுப்பிய warning மெசேஜ்ஐ அவர் கண்டுகொள்ளவில்லை,சுமார் இரவு ஏழு இருபதுக்கு தனது வேலைகளை முடித்து கொண்டு அந்த warning messageஐ பார்க்கும் போது அதில் மூன்று பெரிய பனி பாறைகளை பற்றிய எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருந்தது,அதில் ஒன்றை நோக்கித்தான் டைட்டானிக் சென்று கொண்டிருக்கிறது என்பதை அவர் அறிந்திருக்கவில்லை,அந்த warning messageஐ கேப்டனிடம் கொடுக்க அவர் சென்ற போது கேப்டன் அங்கு இல்லை, அவர் பயணிகளுடன் இரவு உணவு சாப்பிட சென்றிருந்தார்,ஆனால் இறுதி வரை இந்த வார்னிங் மெசேஜ் கேப்டனிடம் சென்று சேரவில்லை,இந்த வார்னிங் மெசேஜ் மட்டும் கேப்டனிடம் சென்று சேர்ந்து இருந்தால் அந்த பெரிய விபத்தை தடுத்து இருக்கலாம், இப்போது டைட்டானிக் மணிக்கு இருபத்து நான்கு mile வேகத்தில் கடல் நீரை கிழித்து கொண்டு சென்று கொண்டிருந்தது,இந்த வேகத்தில் போனால் அடுத்த நான்கு மணி நேரத்தில் அது பனி பாறையை அடையும். மாலை முடிந்து வானத்தில் நிலவில்லாத கடுமையான இருள் சூழ ஆரம்பித்தது.
இரவு ஒன்பது நாற்பத்தைந்து மணி,அடர்ந்த இருள்,அசாதாரணமான அமைதியான கடல்,பனி படர்ந்த குளிர்ந்த கடல் நீரில் எந்த அலையும் இல்லை, கப்பலில் ஆடலும் பாடலும் நடந்து கொன்டே இருந்தது நடக்க போகும் பெரும் விபரீதத்தை அறியாமல். wireless அறையில் phillips தொடர்ந்து பயணிகள் மெசேஜ்ஐ அனுப்பி கொண்டிருந்தார்,அந்த நேரத்தில் மிக முக்கியமான ஐஸ் வார்னிங் மெசேஜ் ஒன்று வந்தது,அதை அனுப்பியது SS Masaba என்ற கப்பல்,பனி பாறை இருக்கும் சரியான இடமும் அதில் குறிக்கப்பட்டிருந்தது,அப்போது டைட்டானிக் அந்த பனி பாறை இருக்கும் இடத்தில் இருந்து ஐம்பது mile தூரத்தில் வந்து கொண்டிருந்தது,ஆனால் prefix இல்லாமல் வந்த அந்த மெசேஜ் phillips முக்கியமானதாக கருதவில்லை அதை அவர் கேப்டனிடம் தெரிவிக்கவுமில்லை,இதுவும் டைட்டானிக்கின் விபத்துக்கு ஒரு காரணம்,கிட்டத்தட்ட முழு வேகத்தில் வந்து கொண்டிருந்த டைட்டானிக் அடுத்த இரண்டு மணி நேரத்தில் பனிப்பாறையை அடையும் தூரத்தில் இருந்தது.
Wireless off செய்த SS California:
இரவு பதினொரு மணி,பனிப்பாறை பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது,wireless அறையில் phillips பயணிகள் மெசேஜ்ஐ அனுப்பி கொண்டிருந்தார்,அப்போது SS Californian என்ற கப்பலில் இருந்து ஒரு message வந்திருந்தது,அதில் அவர்களை சுற்றியும் பனிப்பாறைகள் நிரம்பி உள்ளதால் தங்கள் கப்பலை கடலில் நிறுத்தியுள்ளதாகஉம் நாளை பயணத்தை தொடர போவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது,சிறிது நேரத்தில் SS Californian கப்பல் தனது wireless connectionஐயும் off செய்தது,டைட்டானிக் இப்போது அதனுடன் மிக அருகாமையில் சுமார் இருபது mile தொலைவில் இருந்த ஒரு கப்பலுடனான radio காண்டாக்ட்ஐ இழந்தது, இதனால் டைட்டானிக்கின் பயணிகளை காப்பாற்ற வேண்டிய இக்கட்டான நேரத்தில் SS Californian என்ற கப்பலை தொடர்பு கொள்ள முடியாமல் போனது,இப்போது மணிக்கு இருபத்து நான்கு மைல் வேகத்தில் பயணிக்கும் டைட்டானிக் இன்னும் பத்து நிமிடங்களில் பனி பாறையுடன் மோதும் தூரத்தில் இருந்தது.
பனிப்பாறையில் மோதிய Titanic:
இரவு பதினொன்று முப்பத்தி ஒன்பது,டைட்டானிக் பனி பாறையில் இருந்து சில நூறு மீட்டர் தொலைவில் நெருங்கி இருந்தது,கடலில் ஆழ்ந்த அமைதி, பனிப்பாறையை இன்னும் யாரும் பார்க்கவில்லை,இன்னும் நூறு மீட்டர் தூரம் தான்,lookout Frederick Fleet திடீரென கத்தினார்,அவசர மணி அடிக்கப்பட்டது,கப்பலை இயக்கிய கமாண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்,கப்பலுக்கும் பனிப்பாறைக்கும் இடையே முப்பத்தி ஏழு வினாடி அளவுக்கே நேரம் இருந்தது,டைட்டானிக் கப்பலின் தலைமை அதிகாரி மூர்டோச்,கப்பல் எஞ்சினை ரிவர்ஸ் முறையில் இயக்க உத்தரவு போட்டார்,கப்பல் செல்லும் திசையையும் மாற்ற கூறினார் இருப்பினும் கப்பல் பனி பாறையை நேரடியாக மோதாமல் அதன் பக்கத்தை உரசி கொண்டு சென்றது,கப்பல் சில வினாடி குலுங்கியது,பெரிய பாதிப்பு இல்லை,சிறிய சிராய்ப்பாக இருக்கும் என நினைத்தார்கள்,தூங்க சென்றிருந்த கப்பல் கேப்டனிடம் விபத்து குறித்து உடனடியாக தெரிவிக்கப்பட்டது,முன்னெச்சரிக்கையாக கப்பல் உடனடியாக நிறுத்தப்பட்டது,கப்பலின் பாதிக்க பட்ட பகுதியை பார்த்த கேப்டன் ஸ்மித் மற்றும் கப்பலின் architect Thomas Andrews இருவரும் அதிர்ச்சியடைந்தார்கள்,கப்பலின் பதினாறு நீர்ப்புகா கம்பார்ட்மென்ட்டுகளில்,முன்பகுதியான bowவில் ஐந்து கம்பார்ட்மென்ட்டுகளில் நீர் நிரம்பி இருந்தது,நான்கில் மட்டும் நீர் நிரம்பி இருந்தால் ஆபத்தில்லாமல் தப்பி இருக்க முடியும்,இப்போது கப்பல் அடுத்த இரண்டு மணி நேரத்தில் மூழ்கிவிடும் என்பதை அவர்கள் இருவரும் அறிந்து கொண்டனர்.
உதவி செய்ய இயலாத SS California:
டைட்டானிக் பனிப்பாறையில் மோதிய இருபது நிமிடங்களுக்குப் பிறகும்,பெரும்பாலான பயணிகளும் கப்பல் ஊழியர்களும் கப்பல் மூழ்க தொடங்கிவிட்டது என்பதை நம்பவில்லை,சின்ன பாதிப்பு தான் என நினைத்தார்கள்,ஆனால் கப்பல் பனி பாறையில் மோதியதும் இரும்பு ரிவெட்டுகள் உடைந்து steel plateகள் கிழிந்து விட்டது,ஆதலால் கப்பலின் நீர்புகா ஐந்து கம்பார்ட்மென்ட்டுகளில் நீர் நிரம்பி கப்பலின் முன்பகுதி கடலில் மூழ்க ஆரம்பித்து விட்டது,அடுத்த நாற்பது நிமிடத்தில் கப்பலின் அபாயத்தை உணர்ந்த கேப்டன் wirless roomல் இருந்த பிலிப்பிடம் டைட்டானிக்கின் அருகாமையில் இருக்கும் கப்பல்களுக்கு ரேடியோ சிக்னல் அனுப்பி உதவிக்கு அழைக்க துரித படுத்தினர்,அவர்களின் மிக அருகாமையில் சுமார் இருபது மைல் தூரத்தில் இருந்த கப்பல் Californiyan wireless இணைப்பு off செய்யப்பட்டிருந்தது,பிலிப் தொடர்ந்து அவர்களுடன் இணைப்பை ஏற்படுத்த முயன்றார் ஆனால் முடியவில்லை,அவர்கள் மட்டும் சரியான நேரத்தில் வந்து இருந்தால் பல உயிர்களை காப்பாற்றி இருக்க முடியும்.
கப்பல் மூழ்கும் அபாயம்:
பிலிப் தொடர்ந்து பல கப்பல்களுக்கு அபாய அறிவிப்பை அனுப்பினார்,ஆனால் யாரும் கிடைக்கவில்லை,இறுதியில் carpathia கப்பலின் கேப்டன் Arthur Henry Rostron உடனடியாக வருவதாக கூறினார்,அப்போது நேரம் இரவு பனிரெண்டு இருபத்தைந்து,carpathia டைட்டானிக் நிற்கும் இடத்தில் இருந்து சுமார் ஐம்பத்தி எட்டு மைல் தூரத்தில் இருந்து உதவிக்கு வந்து கொண்டிருந்தது,அதாவது carpathia அதன் அதிகபட்ச வேகத்தில் வந்தாலும் இங்கு வந்து சேர சுமார் நான்கு மணி நேரம் ஆகும்,ஆனால் டைட்டானிக் இன்னும் இரண்டு மணி நேரத்தில் கடலில் மூழ்கி விடும் அபாயத்தில் இருந்தது,கேப்டன் ஸ்மித் உயிர்காக்கும் படகுகளை பயன்படுத்த உத்தரவிட்டார்,ஆனால் ஸ்மித் இங்கு ஒரு தவறு செய்தார்,அது பெண்கள்,சிறுவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் உயிர்காக்கும் படகுகளை இயக்க உத்தரவு இட்டார்,அதை தவறாக புரிந்து கொண்ட அதிகாரிகள் ஆண்களுக்கு உயிர்காக்கும் படகுகளில் வாய்ப்பு அளிக்க மறுத்தனர்.
அதனால் பல படகுகள் குறைவான எண்ணிக்கையில் பயணிகளை சுமந்து கொண்டு சென்றது,டைட்டானிக் கப்பலில் இருந்த ஏழாம் எண் உயிர்காக்கும் படகில் அறுபத்தி ஐந்து பேர் செல்ல முடியும்,ஆனால்,இருபத்து நான்கு பேர் மட்டுமே அதில் ஏறி தப்பி இருக்கின்றனர்,அதேபோன்று,ஒன்றாம் எண் படகில் நாற்பது பேர் செல்ல முடியும்,ஆனால்,ஏழு பணியாளர்களும்,ஐந்து பயணிகளும் மட்டுமே சென்றுள்ளனர்.கப்பலில் தத்தளித்த பலருக்கும் உயிர் காக்கும் படகில் ஏறுவதர்கான வாய்ப்பு இல்லாமல் போனது, இருப்பினும் குழப்பத்தில் அனைத்து பெண்களும் குழந்தைகளும் காப்பாற்றப்படவில்லை இறுதியில் டைட்டானிக்ல் இருந்து எழுநூற்று ஆறு பயணிகள் மட்டுமே காபாற்றப்பட்டனர்,அது போல் டைட்டானிக் கப்பல் மூழ்கிய தினத்தன்று,உயிர்காக்கும் படகுகளில் தப்பிப்பது குறித்த செயல்முறை நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது,ஆபத்து சமயத்தில் எந்த இடத்தில் பயணிகள் ஒன்றுசேர வேண்டும்,அங்கிருந்து உயிர்காக்கும் படகுகளில் ஏறி எப்படி தப்பிப்பது, என்பது குறித்த செயல்விளக்க நிகழ்வாக இருந்தது,ஆனால்,கடைசி நேரத்தில் அந்த செயல்விளக்க நிகழ்ச்சியை கப்பல் கேப்டன் ஸ்மித் ரத்து செய்துவிட்டார்.ஒருவேளை,அந்த உயிர்காக்கும் படகுகளில் தப்புவதற்கான செயல்விளக்க நிகழ்ச்சி நடத்தப்பட்டிருந்தால்,அதிக பயணிகள் விழிப்புணர்வோடு செயல்பட்டு தப்பி இருக்க முடியும்,டைட்டானிக் கப்பல் கேப்டன் ஸ்மித் செய்த தவறுகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.
கடைசி நேர வீரமும், துணிச்சலும்:
இரவு பனிரெண்டு நாற்பத்தைந்து,டைட்டானிக் ஊழியர்கள் வானில் அவசர உதவி வேண்டி ராக்கெட் சிக்னல்களை அனுப்பினார்கள்,இதை டைட்டானிக்கிற்கு இருபது மைல் தொலைவில் நிறுத்தப்பட்டிருந்த SS காலிஃபோர்னியான் கப்பல் ஊழியர்கள் பார்த்து அதை கேப்டன் Stanley Lordடம் தெரிவித்து இருக்கிறார்கள்,ஆனால் துரதிர்ஷ்டவசமாக ராக்கெட்டுகள் அவசரகால signal அல்ல என்று அவர் நம்பினார் மற்றும் அந்த செய்திகளின் உண்மையை சரிபார்க்க வயர்லெஸ் ஆபரேட்டரையும் அவர் எழுப்பவில்லை,வயர்லெஸ் ஆபரேட்டரை எழுப்பி இருந்தால் அவர் டைட்டானிக் உடன் தொடர்பு கொண்டு உண்மையை அறிந்து அவர்களுக்கு உதவி செய்திருக்க முடியும்.விபத்துக்கு பின்பு டைட்டானிக் கப்பல் இரண்டு மணி நேரம் மட்டுமே மிதக்கும் என்று நம்பினார்கள்,ஆனால் அது உண்மையில் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் கடலில் மிதந்து கொண்டிருந்தது,அந்த மூன்று மணிநேரங்களில் உலகம் வெறித்தனமான கோழைத்தனத்தையும் அசாதாரண துணிச்சலையும் கண்டது,சில நம்பமுடியாத கதைகழும் இருந்தன,உலகின் பெரும் பணக்காரர்களும் ஏழைகளும் ஒரே நேரத்தில் வாழ்வின் முடிவை எதிர்நோக்கி காத்திருந்தனர். பெண்கள்,சிறுவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் கப்பலில் இருந்த பெரும்பாலான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் கை அசைத்து விடைப்பெற்றது,அந்த காலத்து வீரத்தின் செயலாக உணரப்பட்டது. கப்பலில் இருந்த பணக்காரர்களில் ஒருவரான John Jacob Astor four,தனது இளம் கர்ப்பிணி மனைவியை உயிர்காக்கும் படகில் அனுப்பி வைத்தார் ஆனால் பெண்கள், சிறுவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அவருக்கு உயிர்காக்கும் படகில் இடம் கிடைக்கவில்லை, அவர் உயிர் பிழைக்கஉம் இல்லை.
இசிடோர் ஸ்ட்ராஸ்,வயது அறுபத்து ஏழு,அவரின் வயதின் காரணமாக அவருக்கு உயிர்காக்கும் படகில் இடம் அளிக்கப்பட்டது ஆனால் அதை பயன்படுத்த அவர் மறுத்து விட்டார் மற்றும் அவரது மனைவி ஐடாவும் கணவனை விட்டுப் பிரிய மறுத்துவிட்டாள்,நாங்கள் பல வருடங்களாக சேர்ந்து வாழ்கிறோம், கணவர் எங்கு செல்கிறாரோ,அங்கு நான் செல்கிறேன் எனக் கூறி கணவருடன் அமர்ந்து இருந்தார்,கப்பல் கடலின் கீழே மூழ்கிய போது அவர்கள் கடைசியாக நாற்காலிகளில் ஒன்றாக அமர்ந்திருந்தனர்.இப்படி பல மனைவிகள் கணவரை விட்டு பிரியாமல் உயிர் நீத்தனர்,டைட்டானிக் கப்பலின் இசைக்குழுவினர் கடைசி வரை இசைப்பதை நிறுத்தவே இல்லை,அவர்கள் அனைவரும் நீருடன் மூழ்கி போனார்கள்,இசைக்கலைஞர்களை போலவே கப்பல் மூழ்கும் கடைசி நிமிடம் வரை வேலைபார்த்து மூழ்கி போன சிலரும் அந்த கப்பலில் இருந்தனர்.கப்பலில் இறுதி வரை மின்விளக்குகள் அணைந்து இருண்டு விடக்கூடாது என்பதற்காகவும்,சிக்னல்களை கடைசி வரை அனுப்பி கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காகவும் அதன் என்ஜினீயர்கள் இருபத்து ஐந்து பேரும் தொடர்ந்து பம்ப்களை ஓட வைத்து கொண்டே இருந்ததால் கப்பலோடு சேர்ந்து அவர்களும் மூழ்கி விட்டனர்,இருபத்து ஐந்து பேரில் ஒருவர் கூட உயிர் பிழைக்கவில்லை என்பது பெரும் சோகம்.அதே போல் ஜாக் பிலிப்ஸ் மற்றும் ஹரோல்ட் பிரைட் ஆகியோர் டைட்டானிக்கின் வயர்லெஸ் ஆபரேட்டர்கள்,மின்சாரம் துண்டிக்கப்படும் வரை,அவர்கள் பிற கப்பல்களுக்கு ஆபத்து சிக்னல் அனுப்பி கொன்டே இருந்தனர், அவர்களில் பிலிப் உயிர் பிழைக்கவில்லை.
மூழ்கிய Titanic:
April பதினைந்து,அதி காலை இரண்டு இருபது,டைட்டானிக், ஏறக்குறைய செங்குத்தாக கடலில் நின்று கொண்டிருந்தது,அதன் பல விளக்குகள் இன்னும் ஒளிர்ந்து கொண்டிருந்தது,முதலில் கப்பலில் முன்பகுதியான bow கடலுக்குள் மூழ்கியது பின்பகுதி உயர்ந்து மீண்டும் கடல் மட்டத்தில் சில வினாடிகள் மிதந்து அட்லாண்டிக் பெருங்கடலில் முழுவதுமாக மூழ்கி மறைந்தது,டைட்டானிக்கின் தலைமை வடிவமைப்பாளரான தாமஸ் ஆண்ட்ரூஸ் கடைசியாக முதல் வகுப்பு புகைபிடிக்கும் அறையில் சுவரில் ஒரு கப்பலின் ஓவியத்தை வெறுமையாகப் பார்த்துக் கொண்டிருந்தார்,டைட்டானிக்கின் கேப்டன் ஸ்மித் கப்பலுடனே நீருக்குள் மூழ்கி போனார். கப்பலில் இருந்து பலர் கடலில் குதித்தார்கள் ஆனால் கடல் நீரின் வெப்ப நிலை மைனஸ் இரண்டு டிகிரி செல்சியஸ் ஆக இருந்ததால்,அடுத்த முப்பது நிமிடங்களில் அனைவரும் உயிர் விட்டனர், சுமார் ஆயிரத்து ஐநூறு பேர் டைட்டானிக்குடன் இறந்து போனார்கள், ஒரு பெரிய சரித்திரம் முடிவுக்கு வந்தது.
காப்பாற்ற வந்த RMS Carpathia:
டைட்டானிக் மூழ்கிய பின் அதி காலை சுமார் மூன்று நாற்பத்தைந்து மணி அளவில் RMS Carpathia அந்த இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடு பட்டது,சுமார் எழுநூற்று ஆறு பேர் உயிர் காப்பாற்றப்பட்டது.RMS Carpathia கேப்டன் Arthur Henry Rostron செய்த உதவிக்கு நன்றியும் விருதுகளும் வழங்கப்பட்டது, உண்மையில் RMS Carpathia, Cunard கப்பல் கம்பனிக்கு சொந்தமானது என்பது ஆச்சரியமான உண்மை, அதாவது வைட் ஸ்டார் லைன் கம்பெனியின் எதிரி கம்பெனி. அது போல் The Unsinkable Molly Brown என அழைக்கப்படும் Margaret Brownனின் heroic செயல்களுக்காக கவுரவிக்கப்பட்டார், டைட்டானிக் கப்பலில் பயணித்து பிழைத்திருந்தவர்களில் மில்வினா டீனும் ஒருவர். கப்பலில் பயணிக்கும்போது இரண்டு மாத குழந்தையாக இருந்த இவர் கடந்த இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டு தனது தொண்ணூற்றி ஏழு வயதில் காலமானார். இவர்தான் டைட்டானிக் பயணிகளில் கடைசியாக உயிர் வாழ்ந்தவர்.
Titanicன் தற்போதைய நிலை:
டைட்டானிக் கப்பலின் சிதைவைக் கண்டறிவதற்கான முயற்சிகள் அது மூழ்கிய உடனேயே தொடங்கியது. ஆனால் தொழில்நுட்ப வரம்புகள் அத்துடன் வடக்கு அட்லாண்டிக் தேடல் பகுதியின் பரந்த தன்மை, அதைக் கண்டுபிடிப்பதை மிகவும் கடினமாக்கியது, இறுதியாக, ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்து ஐந்தில், அமெரிக்க பிரஞ்சு கூட்டுப் பயணம் RMS டைட்டானிக் கப்பலின் சிதைவைக் கண்டறிந்தது. வட அட்லாண்டிக்கில் நியூஃபவுண்ட்லாந்திற்கு கிழக்கே சுமார் நானூறு மைல் தொலைவில், மேற்பரப்பிலிருந்து சுமார் பதின்மூன்று ஆயிரம் அடிக்கு கீழே அழிந்த கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது, கப்பலில் உள்ள நகைகள், தளவாடங்கள், இயந்திரங்கள் மற்றும் பிற பொருட்கள் ஒப்பீட்டளவில் நல்ல நிலையில் இருப்பதை அடுத்தடுத்த ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.
முதல் பகுதிக்கான Link
இந்த Article உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம், மேலும் உங்கள் ஆதரவை வேண்டுகிறோம்.
இத்துடன் எங்கள் youtube channel link கொடுக்கப்பட்டுள்ளது, அதை பார்த்து உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.