Stonehenge: கற்களின் மர்மம்

Stonehenge: கற்களின் மர்மம்

Stonehenge: கற்களின் மர்மம், இங்கிலாந்தின் மிகவும் மர்மமான பண்டைய நினைவுச்சின்னம் ஆகும்,இது காலத்தால் பிரமிடுகளை விட பழமையானது, சுமார் இருபத்தைந்து டன்னுக்கும் அதிகமான எடை கொண்ட பெரிய கற்கள் பல ஆயிரம் ஆண்டுகளை கடந்து இன்னும் உயிர்ப்புடன் நிற்கின்றன. அதன் வடிவமும், மர்மங்களும் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது, ஆனால், அது ஏன் இங்கே கட்டப்பட்டது? எப்படி கட்டப்பட்டது? யாரால் கட்டப்பட்டது? யாருக்கும் தெரியாது.

Stonehenge எப்போது கட்டப்பட்டது?

ஸ்டோன்ஹெஞ்ச் கி.மு. 2500 – 2000 காலத்தில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இதன் பழைய பகுதிகள் கி.மு. 3100ஐச் சேர்ந்தவையாக இருக்கலாம்.

Stonehengeன் வடிவம் மற்றும் கட்டுமானம்:

இந்த Stonehenge: கற்களின் மர்மம், பெரிய கற்களை கொண்ட பெரிய வட்டம், சிறிய நீல கற்களை கொண்ட உள்வட்டம், பெரிய கற்களை கொண்ட குதிரை குழம்பு போன்ற ஒரு வடிவம் அதனுள் இன்னொரு வட்டம், என பல வட்ட வடிவங்களை கொண்டுள்ளது.

வெளி வட்டத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள பெரிய சார்சன் பாறை கற்கள் சுமார் இருபத்தைந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மார்ல்பரோ டவுன்ஸில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சார்சன் கற்கள் தோராயமாக பதிமூன்று அடி உயரம், ஏழு அடி அகலம் மற்றும் ஒவ்வொன்றும் சுமார் இருபத்தைந்து டன் எடை கொண்டது. அவை ஒவ்வொன்றும் கிடைமட்ட கற்களால் இணைக்கப்படுகிறது. அப்படி இணைக்கப்பட மரங்களை போல, கற்கள் செதுக்கப்பட்டுள்ளன, ஆதலால் இந்த கற்கள் உயரமாக விழாமல் நிற்க முடியும்.

இந்த பாறைகள் எப்படி கொண்டு வரப்பட்டது, அதுவும் இருபத்தைந்து டன் எடை கொண்ட பெரிய சர்சன் பாறைகள் சுமார் இருபத்தைந்து கிலோ மீட்டர் தொலைவில் இருந்து எப்படி கொண்டு வரப்பட்டது, நவீன பேருந்து வசதி இல்லாத அந்த கால கட்டத்தில் இது எப்படி சாத்தியமானது, அதுவும் எப்படி வெட்டி செதுக்கப்பட்ட பாறை துண்டுகளாக மாற்றப்பட்டது, எப்படி துல்லியமான வட்ட வடிவில் நிறுத்தப்பட்டது. ஆனால் இந்த கேள்விகளுக்கு யாராலும் சரியான பதிலை கூற முடியவில்லை என்பது தான் பல நூற்றண்டுகளாக தொடரும் மர்மம்.

ஆனால் உள் வட்டம் நீல நிற பாறை கற்களால் அடுக்கப்பட்டுள்ளது, இந்த பாறை கற்கள் சுமார் நூற்றி ஐம்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வேல்ஸ் (Wales) இன் பிரெசெலி (Preseli) மலைகளில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன் அடுத்து ஸ்டோன்ஹெஞ்ச் “Trilithons” என்று அழைக்கப்படும் இரண்டு செங்குத்து கற்கள் அவை கிடைமட்ட லிண்டல் மூலம் மூடப்பட்டுள்ளது. இதன் அமைப்பு குதிரையின் குழம்பு வடிவில் உள்ளது.

Stonehengeன் சிறப்புகள் என்ன?

ஆச்சர்யம் அளிக்கும் விதமாக சூரிய கதிர்கள் கோடை சங்கராந்தியான ஜூன் இருபத்தி ஒன்று அன்று இந்த நினைவு சின்னத்தின் மத்திய அச்சின் மேல் விழுகின்றன.

இதன் வடிவமைப்பு பல தலைமுறைகளாக உருவானது. சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளாக இதன் கட்டுமானம் நடைபெற்றுள்ளது.நாலாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு, பிரிட்டன் கற்காலத்தின் முடிவு மற்றும் Bronze Ageயின் ஆரம்பத்தில் இருந்தது. அதன் மக்கள் விவசாயத்தை தொழிலாக கொண்டிருந்தனர். அவர்களுக்கு உலோகங்களின் பயன்பாடு சரியாக தெரியாத காலகட்டம் அது. அத்தகைய பழமையான மக்கள் எப்படி நம்ப முடியாத, காலத்தால் அழியாத நினைவுச்சின்னத்தை கட்டி முடிந்தார்கள் என்பது ஆச்சர்யமாக இருக்கிறது.

முதலில் ஒரு வட்ட வடிவ பள்ளம், பின் அதன் கரை, பின்னர் வெளிப்புற வட்டத்தின் கட்டமைப்பு, இது சார்சன் என்ற பெரிய கற்களால் கட்டப்பட்டுள்ளது. அடுத்து நீல நிற பாறை கற்களால் கட்டப்பட்ட உள் வட்டம், அதனை அடுத்து குதிரை குழம்பு வடிவில் வட்டம், அடுத்து சிறிய வட்டம் என பல அடுக்குகளை கொண்டுள்ளது. இதை சிலர் ஒரு தெளிவான வானியல் காலண்டர் என்று கூறுகின்றனர். இது ஆராச்சியாளர்களை குழப்பமடைய செய்கிறது, இது அந்த காலத்தில் எப்படி சாத்தியம் என?.

இது அந்த காலத்து மக்களுக்கு பருவ மாறுதல்களை கணக்கிடவும் மற்றும் வேளாண்மை நடவடிக்கைகளை திட்டமிட்டு ஆரம்பிக்கவும் உதவியாக இருந்துள்ளது.சங்கிராந்திகள் மற்றும் உத்தராயணங்கள் வான இயலின் முக்கியமான நிகழ்வுகள் ஆகும், இதை சரியாக கணித்து அதற்கேற்ப ஸ்டோன்ஹெஞ்ச் வடிவமைக்கப்பட்டு, அந்த நேரத்தில் சிறப்பு வழிபாடு மற்றும் கொண்டாட்டம் சுமார் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்டுள்ளது.

Stonehenge: கற்களின் மர்மம், முதலில் கட்டப்பட்ட இடத்தில் இருந்து ஏன் நகர்த்தப்பட்டது?

ஒரு வருடத்தின் நீளத்தைக் சரியாக கணித்து ஒவ்வெரு ஆண்டும் சங்கிராந்தி அன்று சூரியனின் கதிர்கள் stonehengeயின் அச்சில் நீளமாக விழும்படி இக்கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. மேலும் இக்கட்டிடம் சூரிய கடிகாரமாக செயல்பட்டு ஒரு நாளின் சரியான நேரத்தையும் கணிக்க உதவுவதாக கூறப்படுகிறது. இந்த கற்கள் ஒவ்வொரு வருடமும் இடம் பெயர்ந்திருக்க வேண்டும், சூரிய கடிகாரத்தை துல்லியமாக காட்ட நகர்த்தப்பட்டிருக்கலாம் என கூறுகிறார்கள், பேராசிரியர் பார்க்கர் பியர்சன் மற்றும் அவரது குழுவினரின் ஆய்வுகள், முதலில் இந்த stonehenge வெல்ஷ் தளத்தில் ப்ரெசெலி மலைகளில் வான் மாவ்ன் என்ற இடத்தில் இதே அளவில் முதலில் கட்டப்பட்டிருந்ததாகவும் அங்கு பயன்படுத்தப்பட்ட புளூஸ்டோன்கள் அங்கிருந்து நகர்த்தப்பட்டு இப்போதுள்ள Stonehenge பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார். ஆனால், அப்படி நகர்த்தும் போது அவற்றின், ஒரு கல் சில்லு மட்டும் துளைகளில் உடைந்து சிக்கி உள்ளது, அந்த உடைந்த கல், கணினியால் பரிசோதிக்கப்பட்ட போது நம்பமுடியாத அளவிற்கு அந்த கல் துண்டு, ஸ்டோன்ஹெஞ்ச்யில் உள்ள கற்களில் ஒன்றான ஸ்டோன் அறுபத்தி இரண்டுடன் சரியாக பொருந்துகிறது.

Stonehenge ஆரம்பத்தில் இருந்த இடத்தில் இருந்து சுமார் நூற்றி நாற்பது கிலோ மீட்டர் தொலைவிற்கு நகர்த்தப்பட்டுள்ளது அதற்கு சூரிய கடிகாரம் தான் காரணம் எனவும் கூறப்படுகிறது, ஏன் எனில் சூரிய கடிகாரம் முதலில் வான் மாவ்ன் எனும் இடத்தில், வானத்தில் உள்ள Southern Crossல் உள்ள நட்சத்திரங்களை அடிப்படையாக கொண்டு கட்டப்பட்டதாகவும், காலப்போக்கில் Southern Crossயில் உள்ள நட்சத்திரங்கள் காணாமல் போகவே இவர்கள் அந்த கற்களை நகர்த்தி,Southern Crossல் உள்ள நட்சத்திரங்கள் தெரியும் இடமான இப்போதைய stonehengeஇல் கட்டி, சூரிய கடிகாரத்தை நிறுவியதாக கூறுகின்றனர்.

Stonehenge: கற்களின் மர்மம் என்ன?

கற்களின் மூலாதாரம்: ஸ்டோன்ஹெஞ்சில் உள்ள பெரிய கற்கள் (Sarsen Stones) எங்கிருந்து வந்தது என்பது நீண்ட காலமாக மர்மமாக இருந்தது. சமீபத்திய ஆராய்ச்சிகள் இவை இங்கிலாந்தின் மேற்கு பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டதாகக் கூறுகின்றன.

கட்டுமானம்: ஸ்டோன்ஹெஞ்சின் கட்டுமானம் மிகவும் சிக்கலானது. பெரிய கற்களை எவ்வாறு கொண்டு வந்து, அவற்றை எவ்வாறு சரியாக வட்ட வடிவில் அமைத்தார்கள் என்பது இன்னும் புரியவில்லை

பயன்பாடு: ஸ்டோன்ஹெஞ்சின் பயன்பாடு பற்றிய பல கருத்துகள் உள்ளன. இது ஒரு சுடுகாடாக இருந்திருக்கலாம், அல்லது ஒரு மத முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

ஏலியன்கள்: சிலர் ஸ்டோன்ஹெஞ்சை ஏலியன்கள் கட்டியதாக நம்புகின்றனர். இதற்கான உறுதியான ஆதாரம் இல்லை என்றாலும், இது ஒரு பிரபலமான கருத்தாகவே உள்ளது.

Stonehenge: கற்களின் மர்மம், 1986ஆம் ஆண்டில் யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய தளமாக அங்கீகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Stonehenge: கற்களின் மர்மம், அருகாமையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் என்ன?

stonehengeயின் அருகாமையில் தான் வரலாற்றில் பல புதிர்களை கொண்ட Silbury hills, Superhenge, Woodhenge, மற்றும் Crop circle ஆகியவன உள்ளன என்பது ஆச்சரியமான உண்மை.

ஸ்டோன்ஹெஞ்ச் இங்கிலாந்தின் வில்ஷயர்யில் உள்ள salisbury சமவெளியில் அமைந்துள்ளது. இது தினமும் பத்தாயிரம் பார்வையாளர்கள் வந்து சொல்லும் இடமாக உள்ளது.

Wooden henge என்பது என்ன?

வுட்ஹெஞ்ச் (Woodhenge) என்பது இங்கிலாந்தின் வில்ட்ஷையர் பகுதியில் ஸ்டோன்ஹெஞ்சிற்கு அருகில் அமைந்துள்ள ஒரு தொல்பொருள் நினைவுச் சின்னமாகும். இது கி.மு. 2300-2200 காலத்தில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.

வுட்ஹெஞ்சின் முக்கிய அம்சங்கள்:

அமைப்பு: இது வட்ட வடிவில் அமைக்கப்பட்ட மரக் கம்பிகளால் (wooden posts) உருவாக்கப்பட்டுள்ளது. இவை மண்ணில் ஆழமாக புதைக்கப்பட்டு, வட்ட வடிவில் அமைக்கப்பட்டுள்ளன.
பயன்பாடு: இது ஒரு சடங்கு அல்லது மத முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இருந்திருக்கலாம். சிலர் இதை ஒரு சுடுகாடாகவும் கருதுகின்றனர்.
மர்மம்: ஸ்டோன்ஹெஞ்சின் மர்மம் போலவே, உட்ஹெஞ்சின் கட்டுமானம் மற்றும் பயன்பாடு பற்றிய பல கேள்விகள் இன்னும் பதிலளிக்கப்படவில்லை.

Super henge என்பது என்ன ?

சூப்பர்ஹெஞ்ச் என்பது இங்கிலாந்தில் உள்ள stonehengeக்கு அருகே கண்டறியப்பட்ட சமீபத்திய தொல்பொருள் கண்டுபிடிப்பாகும், அதிகாரப்பூர்வமாக Durrington Walls என்று அழைக்கப்படும், இந்த தளம் சுமார் நாலாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முந்தையதாக நம்பப்படுகிறது. Durrington Walls சுமார் முப்பது ஏக்கர் பரப்பளவைக் கொண்ட மிகப்பெரிய ஹெஞ்ச் அல்லது நினைவுச்சின்னங்களில் ஒன்றாகும். இது ஸ்டோன்ஹெஞ்சின் அமைப்பைப் போலவே வட்ட வடிவ பள்ளம் மற்றும் வெளிப்புறக் கரை போன்ற அமைப்பை கொண்டுள்ளது. இது ஸ்டோன்ஹெஞ்யில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, இரண்டு தளங்களும் அவென்யூ எனப்படும் பழங்கால பாதையால் இணைக்கப்பட்டுள்ளன. சமீபத்திய அகழ்வாராய்ச்சிகள், பெரிய மரத் தூண்களால் வட்டம் போன்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக கூறுகிறது, இது மர வட்டங்கள் என்று அழைக்கப்படுகிறது, இது ஸ்டோன்ஹெஞ்சைப் போலவே, Durrington Wallsம் வானியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக நம்பப்படுகிறது. நினைவுச்சின்னத்தின் நுழைவாயில்கள் குளிர்கால சங்கிராந்தி, சூரிய உதயம் மற்றும் கோடைகால சங்கிராந்தி, சூரிய அஸ்தமனத்துடன் இணைகின்றன.

Crop Circle என்பது என்ன?

பயிர் வட்டங்கள் என்பது, வயல்களில் பயிர்களைத் தட்டையாக்குவதன் மூலம் உருவாக்கப்பட்ட சிக்கலான வடிவங்கள் ஆகும், இதன் அழகான வடிவம் பல தசாப்தங்களாக மக்களைக் கவர்ந்து கொண்டிருக்கிறது என்பது தான் உண்மை, இந்த புதிரான வடிவங்கள் பெரும்பாலும் எளிமையான வடிவங்கள் முதல் சிக்கலான வடிவமைப்புகளைக் கொண்டிருக்கும், இந்த வடிவங்கள் ஒரே இரவில் தோன்றும் அது தான் ஆச்சரியம், அவற்றின் தோற்றம் மற்றும் முக்கியத்துவம் பற்றிய பல்வேறு கோட்பாடுகள் உள்ளது. இவை ஏலியன்கள் (Aliens) செய்ததா அல்லது மனிதர்கள் செய்ததா என்பது பற்றிய விவாதம் நீண்ட காலமாக நடைபெறுகிறது.

Silbury Hill என்பது என்ன?

சில்பரி மலை (Silbury Hill) என்பது இங்கிலாந்தின் வில்ட்ஷயர் கவுண்டியில் உள்ள ஏவ்பரி அருகே அமைந்துள்ள ஒரு பண்டைய செயற்கை மண் மேடு ஆகும். இது கி.மு. 2400-2300 காலகட்டத்தில் கட்டப்பட்டது என்று நம்பப்படுகிறது.

சில்பரி மலை ஐரோப்பாவின் பண்டைய மனிதனால் உருவாக்கப்பட்ட மண் மேடு ஆகும். இது சுமார் 39.3 மீட்டர் (129 அடி) உயரம் மற்றும் 167 மீட்டர் (548 அடி) விட்டம் கொண்டது1. இந்த மலை முழுவதும் சுண்ணாம்பு மற்றும் மண் கொண்டு கட்டப்பட்டுள்ளது.

சில்பரி மலை, ஸ்டோன்ஹெஞ்ச் மற்றும் ஏவ்பரி போன்ற முக்கியமான நியோலிதிக் நினைவுச்சின்னங்களின் ஒரு பகுதியாகும். இதன் அசல் நோக்கம் இன்னும் சரியாக தெரியவில்லை, ஆனால் இது ஒரு முக்கியமான கட்டுமானம் என்று கருதப்படுகிறது.

இந்த மலை ஐரோப்பாவின் மிகப்பெரிய செயற்கை மண் மேடு ஆகும் மற்றும் இதன் உயரம் மற்றும் பரப்பளவு எகிப்திய பyramids உடன் ஒப்பிடக்கூடியது.

அடுத்த பதிவு, கீழே Link கொடுக்கப்பட்டுள்ளது.

உதம் சிங்கின் நீதிக்கான வேட்கை

இந்த Article உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம், மேலும் உங்கள் ஆதரவை வேண்டுகிறோம்.

இத்துடன் எங்கள் youtube channel link கொடுக்கப்பட்டுள்ளது, அதை பார்த்து உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.

 

 

 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply