உலகை அதிரவைத்த ஏலியன் சந்திப்பு

உலகை அதிரவைத்த ஏலியன் சந்திப்பு

Alien சந்திப்புகள் என்பது மனிதர்கள் பூமியில் வேற்று கிரக வாசிகளை சந்தித்ததாகக் கூறப்படும் நிகழ்வுகள் ஆகும். இவை பெரும்பாலும் விசித்திரமான ஒளிகள், வானில் பறக்கும் அடையாளம் தெரியாத பொருட்கள், அல்லது மனிதர்களின் கடத்தல் சம்பவங்களாக இருக்கும்.இவற்றில் The Betty and Barney Hill Abduction, ரெண்டில்ஷம் காடு சம்பவம், பீனிக்ஸ் விளக்குகள் போன்றவை புகழ்பெற்ற Alien சந்திப்புகளாகும். இந்த சந்திப்புகள் பல்வேறு சதி கோட்பாடுகளுக்கும், ஆராய்ச்சிகளுக்கும் வழிவகுத்துள்ளன, இந்த பதிவில் உலகை அதிரவைத்த ஏலியன் சந்திப்பு, The Betty and Barney Hill Abduction பற்றி பார்க்கலாம்.

விசித்திர ஒளியும் காதல் தம்பதியும்:

1961-ஆம் ஆண்டு செப்டம்பர் 19அன்று இரவு, பெட்டி மற்றும் பர்னி ஹில் ஆகிய இருவரும்(திருமண தம்பதிகள்), நயாகரா நீர்வீழ்ச்சி மற்றும் மான்ட்ரியல் சுற்றுலா ஸ்தலங்களை பார்த்த பிறகு, தங்கள் வீட்டிற்கு போர்ட்ஸ்மவுத்தில் உள்ள, நியூ ஹாம்ப்ஷையர் நோக்கி U.S.Route 3 வழியாக காரில் வந்து கொண்டிருந்த போது, அவர்களால் பல மைல்களுக்கு ஒரு காரைக் கூட சாலையில் பார்க்கமுடியவில்லை, ஆனால் வானத்தில் ஒரு விசித்திரமான ஒளி அவர்களைப் பின்தொடர்வது போல் தோன்றியது. முதலில், அது ஒரு விமானம் என்று நினைத்தனர், ஆனால் அந்த ஒளி மிக அருகில் வந்ததும், மட்டுமல்ல அது பார்க்க மிகவும் விசித்திரமானதாகவும், பயப்படும்படியாகவும் இருந்தது,வேற்று கிரகவாசிகள் பற்றிய இந்த கதை, இது வரை மக்கள் வேற்றுகிரகவாசிகளை பற்றி நினைத்ததை அப்படியே மாற்றியது, இதற்கு முன், UFOக்கள் மற்றும் வேற்றுகிரகவாசிகளுடன் நட்புரீதியான சந்திப்புகளைப் பற்றித் தான் மக்கள் புகார் அளித்திருந்தனர், ஆனால் பெரிய தலைகள் மற்றும் கருப்பு கண்கள் கொண்ட சாம்பல் நிற தோலை உடைய வேற்றுகிரகவாசிகளை பற்றிய இந்த கதை மக்கள் மத்தியில் திகிலை ஏற்படுத்தியது.

ஆரம்பத்தில் அதை அவர்கள் சாதாரணமாகத்தான் எடுத்தனர், ஆனால் அந்த ஒளி தொடர்ந்து அவர்களை பின்தொடரும் போது, அவர்களிடம் பதட்டம் அதிகரித்தது, அவர்கள் வாகனத்தை அவசரமாக ஓட்ட ஆரம்பித்தனர், முதலில் அது விமானமாக இருக்கலாம் அல்லது விழும் நட்சத்திரமாக இருக்கலாம் என நினைத்தனர், ஆனால் ஒவ்வொரு மைலுக்கும் அது பெரிதாகவும் பிரகாசமாகவும் வளர்ந்துக்கொண்டிருந்தது, விமான கண்காணிப்பாளரும் இரண்டாம் உலகப் போரின் கால்நடை மருத்துவருமான பர்னி அதைப்பற்றி கவலைப்பட ஒன்றுமில்லை என்பதில் உறுதியாக இருந்தார். ஆனால் அவர்களிடையே பதட்டம் அதிகரிக்க தொடங்கியது, வளைந்த மலைப்பாதையில் வாகனத்தை பர்னி திசைமாற்றிச் செல்லும்போது அந்த விசித்திர வெளிச்சம் காருடன் நகர்வது போல் தோன்றியது. வெளிச்சம் வளைந்து நெளிந்து, காரைக் கடந்தும் மரங்கள் மற்றும் மலை முகடுகளுக்குப் முன்னும் பின்னும் சென்றது.

விசித்திர படகு போன்ற விமானம்:

ஆர்வமாகவும் கவலையுடனும், தங்களை பின்தொடர்ந்து வந்த அந்த வெளிச்சத்தை binacular வழியாகப்பார்த்தார்கள், அப்போது வானில் மிதந்த வண்ணமயமான விளக்குகள் கொண்ட ஒரு விசித்திரமான படகைக் போன்ற விமானத்தை கண்டு அதிர்ச்சியடைந்தார்கள், அந்த விமானத்தை போன்ற படகில் ஜன்னல்கள் இருந்ததாகவும், உள்ளே இருப்பவர்கள் நகர்ந்து கொண்டிருப்பதையும் கண்டார்கள்,அந்த மனித தோற்றமுடைய உருவங்கள் உள்ளே இருந்து அவர்களை பார்க்கின்றனர் என்பதை உணர்ந்தனர்,அதிர்ச்சியடைந்த பர்னி விரைவாக காருக்குள் திரும்பி, பெட்டியிடம் அவசரமாக ஓட்டுமாறு கேட்டுக்கொண்டார், ஆனால் அந்த பொருள் அவர்களை தொடர்ந்து வந்து கொண்டிருந்தது, அதன் விளக்குகள் வழக்கமான விமானத்தின் விளக்குகளை விட வேறு விதமாக இருந்தது.

விசித்திர மனிதர்கள்:

அந்த படகு போன்ற விமானம் மரத்தின் உச்சிகளுக்கு சற்று மேலே பறந்து கொண்டிருந்தது, சுமார் 100 அடி உயரத்தில் இருந்தது. பர்னி திடீரென காரை நிறுத்தினார், அவர் இருக்கைக்கு அடியில் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை தனது சட்டைப் பையில் திணித்து, காரில் இருந்து இறங்கி பக்கத்தில் இருந்த இருண்ட வயலுக்கு விரைந்தார், அவர் பார்த்தது ஒரு ஜெட் விமானத்தைப் போல பெரியதாக இருந்தது, ஆனால் ஒரு கேக்கைப் போல வட்டமாகவும் தட்டையாகவும் இருந்தது. இது உண்மையாக இருக்க முடியாது, ஜன்னல்களின் வரிசைகளுக்குப் பின்னால், சாம்பல் நிற சீருடை அணிந்த மனிதர்கள் அவரைப் பார்ப்பது போல் தோன்றியது, அவர் தனது கைத்துப்பாக்கியை உயர்த்த முயன்றார், ஆனால் அவரால் உயர்த்த முடியவில்லை.

அசாதரண சம்பவம், என்ன தான் நடந்தது?

அச்சமடைந்த அவர், அவர்கள் பிடிபடப்போகிறார்கள் என்று நம்பியதால், அவர் விரைந்து காருக்குத் திரும்பி, அவரது மனைவியிடம் வாகனத்தை விரைவாக ஓட்டுமாறு கோரினார். அவர்களின் கடும் முயற்சிகளுக்கு மத்தியிலும், அந்தப் படகு நேராக சரியாக அவர்களின் காரின் மேல் மிதந்தது, காரின் டிக்கியில் இருந்து உரத்த, பீப் ஒலி ஒலித்தன. தம்பதியினர் உடனடியாக மயக்கம் அடைந்து சுயநினைவை இழந்தனர். அவர்கள் சுமார் இரண்டு மணி நேரம் கழித்து, அந்த சாலையில் 35 மைல் தூரத்தில் இருந்தனர்,வீட்டிற்கு சென்றதும், பெட்டியும் பர்னியும் தீவிரமான குழப்பம் மற்றும் சந்தேகம் அடைந்தனர். பெட்டி, தன் உடையில் பல இடங்களில் கிழிந்து மற்றும் அதில் ஒரு மர்மமான பிங்க் தூள் இருந்ததை கவனித்தார், பர்னியின் காலணியும் கிழிந்துவிட்டது மற்றும் பினாக்குலரின் பட்டா உடைந்து போயிருந்தது.  இது உலகை அதிரவைத்த ஏலியன் சந்திப்பு.

தம்பதிக்கு ஹிப்னாஸிஸ பரிசோதனை:

அடுத்து வந்த ஆண்டுகளில், பெட்டி குழப்பமான கனவுகளால் அவதிப்படுவதோடு, பர்னிக்கு புண் மற்றும் அடிக்கடி பதட்டம் ஏற்பட்டதால், தம்பதியினர் இருவரும் ஒரு மனநல உதவியை நாடினர். அந்த நேரத்தில் மிக பிரபலமான ஹிப்னாஸிஸில் நிபுணத்துவம் பெற்ற மனநல மருத்துவர் மற்றும் நரம்பியல் நிபுணரான பெஞ்சமின் சைமனை அவர்கள் இருவரும் சந்தித்தனர். பல மாத ஹிப்னாஸிஸ பரிசோதனைக்கு பின், தம்பதியினர்க்கு என்ன நடந்தது என்று அவரால் கண்டறிய முடிந்தது, அந்த படகு போன்ற கப்பல் காரின் அருகில் தரையிறங்கியது, பின்னர் அவர்களை தூங்க வைத்து, அந்த சாம்பல் நிற மனிதர்கள் அவர்கள் இருவரையும் ஒரு நீண்ட வளைவின் வழியாக விண்கலத்திற்குள் கொண்டு சென்றனர். உள்ளே நுழைந்ததும், அவர்கள் இருவரும் வளைந்த சுவர்கள் மற்றும் கூரையில் இருந்து தொங்கும் ஒரு பெரிய வெளிச்சம் கொண்ட ஒரு அறைக்கு கொண்டு செல்லப்பட்டனர், பின்னர் ஒவ்வொருவரும் ஒரு உலோக மேசையில் ஏறும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர். மேஜை மிகவும் குறுகியதாக இருந்தது, ஆதலால் பர்னியின் கால்கள் பக்கவாட்டில் தொங்கின.

ஏலியன்களின் மருத்துவ பரிசோதனை:

அந்த விசித்திர மனிதர்கள் பெட்டி மற்றும் பார்னியின் ஆடைகளை கழற்றி, அவர்களின் தலைமுடியைப் பறித்து, அவர்களின் நகங்களின் துணுக்குகளை எடுத்து, தோலில் சிறு பாகத்தை எடுத்து,வெட்டி எடுக்கப்பட்ட ஒவ்வொரு மாதிரியும் ஒரு தெளிவான பொருளில் வைக்கப்பட்டது, அதன் பின்னர் நீண்ட கம்பிகளுடன் இணைக்கப்பட்ட ஊசிகள், அவர்களின் தலைகள், கைகள், கால்கள் மற்றும் முதுகெலும்புகளை ஆய்வு செய்தன. மேலும் 4 முதல் 6 அங்குல நீளமுள்ள ஒரு பெரிய ஊசி பெட்டியின் வயிற்றில் செருகப்பட்டது, இது பெட்டிக்கு பெரிய வலியை ஏற்படுத்தியது, இது பெண்கள் எப்படி கர்ப்பம் தரிக்கிறார்கள் என பரிசோதிக்க செய்யப்பட்டது, இந்த சோதனைகள் அனைத்தும் அவர்களின் தலைவனை போன்ற ஒருவனில் முன்னால் நிகழ்த்தப்பட்டது.

அந்த வேற்றுகிரகவாசிகள் பெரிய, வழுக்கைத் தலைகள் மற்றும் பெரிய, கருப்பு, சாய்ந்த கண்கள் கொண்ட மனித உருவம் கொண்டவர்களாக இருந்தனர். மேலும் மென்மையான மற்றும் சுருக்கங்கள் இல்லாத நரைத்த தோல், சிறிய, பிளவு போன்ற வாய் மற்றும் தெரியும் பெரிய காதுகளை கொண்டிருந்தனர், அவர்கள் இறுக்கமான, உலோகத் தோற்றமுடைய சீருடைகளை அணிந்திருந்தனர் மற்றும் டெலிபதி மூலம் தொடர்பு கொண்டனர். இது உலகை அதிரவைத்த ஏலியன் சந்திப்பு.

பெட்டி வரைந்த வேற்று கிரக நட்சத்திர வரைபடம்:

இந்த சம்பவத்தில் மிகவும் வியப்பூட்டும் அம்சங்களில் ஒன்று பெட்டி வரைந்த நட்சத்திர வரைபடம் ஆகும், அந்த சிகிச்சையின் போது, பெட்டி ஒரு நட்சத்திர வடிவத்தை வரைந்தார், இது அவர்கள், அவர்களை ப்ரோசோதனை செய்த போது அவர்களுக்கு காட்டியதாகக் கூறப்பட்டது. ஆச்சரியமளிக்கும் விதமாக ஆண்டுகள் பல கடந்த பிறகு, Astronomer Marjorie Fish ,பெட்டி வரைந்த நட்சத்திர வடிவத்தை ஒத்த ஒரு நட்சத்திர அமைப்பை கண்டுபிடித்தார், இது Zeta Reticuli என்றும் குறிப்பிடப்படுகிறது. இது ஒரு ஆச்சர்யமான மர்மமாகத்தான் உள்ளது.

இதன் விளைவுகள்:

1965ஆம் ஆண்டில் பாஸ்டன் செய்தித்தாள் அவர்களை பரிசோதனை செய்த போது பதிவு செய்த ஒரு டேப் பதிவின் அடிப்படையில் அவர்களின் அனுபவத்தைப் பற்றி ஒரு கட்டுரையை வெளியிட்டபோது இந்த alien கதை பகிரங்கமானது, இந்தக் கதை விரைவில் தேசிய கவனத்தைப் பெற்றது, ஜான் ஜி. ஃபுல்லரின், The Interrupted Journey என்ற தலைப்பில் ஒரு புத்தகம் மற்றும் ஒரு தொலைக்காட்சி திரைப்படத்திற்கும் வழிவகுத்தது. இந்த சம்பவம் Alien கடத்தல்களின் சாத்தியக்கூறுகள் பற்றிய ஆர்வத்தைத் மக்களிடையே தூண்டியது மற்றும் உலகெங்கிலும் உள்ள மக்களிடமிருந்து இதேபோன்ற அனுபவங்களைப் பற்றிய பல சம்பவங்களை வெளிக்கொண்டுவர வழிவகுத்தது.

இருப்பினும், சந்தேகம் கொண்டவர்கள், இந்த கதையின் செல்லுபடியாகும் தன்மை குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளனர். இந்த ஜோடியின் strange அனுபவம் தூக்கமின்மை, மன அழுத்தம் அல்லது நவீன கலாச்சாரத்தின் அடிப்படையில் உருவானது என்று சிலர் கூறுகின்றனர். மற்றவர்கள், வழக்கின் விவரங்கள், குறிப்பாக நட்சத்திர வரைபடம், வேற்று கிரக தொடர்புக்கான உறுதியான ஆதாரமாகக் கருதப்பட முடியாத அளவுக்கு தெளிவற்றவை என்று வாதிடுகின்றனர். மேலும் சிலர் இப்படி alien பூமிக்கு வருகை தருவது உண்மை தான் எனவும், அரசு இதை மறைக்க முயற்சி செய்வதாகவும் கூறுகிறார்கள், இந்த சம்பவத்தில் கூட வேற்று கிரக வரைபடம் எப்படி அவர்களால் பார்க்காமல் வரைய முடியும் என கேள்வி கேற்கிறார்கள், மேலும் இது போன்ற பல சம்பவங்களை அவர்கள் ஆதாரமாக வைக்கிறார்கள்.ஆயினும்கூட, இந்த கடத்தல் வழக்கு UFO வரலாற்றில் மிகவும் அழுத்தமான மற்றும் செல்வாக்குமிக்க கதைகளில் ஒன்றாக உள்ளது.

இந்த சம்பவத்தின் அடிப்படையில் எண்ணற்ற புத்தகங்கள், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் உருவாகியுள்ளது, வேற்றுகிரகவாசிகளின் கடத்தல் பற்றிய நவீன புரிதலை வடிவமைப்பதில் இது குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தது. இந்த சம்பவம் மனிதர்களை இப்படி வினோத படகு போன்ற விமானத்தில் ஏற்றிச் சென்று பரிசோதனைகளுக்கு உட்படுத்தலாம் என்ற கருத்தை அறிமுகப்படுத்தியது, இது யுஎஃப்ஒ கதையின் முக்கிய அம்சமாக மாறியுள்ளது.இந்த alien என்கவுண்டருக்குப் பிறகு, உலகில் எண்ணற்ற மற்றவர்கள் கூட இதே போன்ற கதைகளை முன்வைத்துள்ளனர், இது alien கடத்தல் நிகழ்வு பற்றிய ஆராய்ச்சியின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது.

இது போல் உலகை அதிர வைத்த பல ஏலியன் சம்பவங்கள் உள்ளன, அதை பற்றி வரும் பதிவுகளில் தொடர்ந்து காணலாம்.

இந்த Article உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம், மேலும் உங்கள் ஆதரவை வேண்டுகிறோம்.

அடுத்த பதிவு, கீழே Link கொடுக்கப்பட்டுள்ளது.

நம் மரணத்துக்கு பின் என்ன நடக்கும்?

இத்துடன் எங்கள் youtube channel link கொடுக்கப்பட்டுள்ளது, அதை பார்த்து உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.

 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply