நம் மரணத்துக்கு பின் என்ன நடக்கும்?

நம் மரணத்துக்கு பின் என்ன நடக்கும்?

நாம் இறந்த பிறகு என்ன நடக்கும்? நமது உயிர் எங்கு செல்லும்?, மறு பிறவி என்ற ஒன்று உள்ளதா?, என்ற கேள்வி பல காலமாக இருந்து வருகிறது. மரணம் என்ற ஒன்றை எப்படி மனிதனால் வெல்ல முடியவில்லையோ அதே போல், மரணத்திற்கு பிறகு என்ன நடக்கும் என்பது இன்றளவும் புரியாத புதிராக உள்ளது, நம் மரணத்துக்கு பின் என்ன நடக்கும்? என்பதைப்பற்றித்தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

மனிதன் செய்த செயல்கள்:

முந்தய காலத்தில், இறந்தவர் மீள்வார், அடுத்த உலகத்துக்கு செல்வார், என்ற அடிப்படையில் எகிப்தில் வானளாவிய பிரமிடுகள் எழுந்தன, சீனாவின் முதல் அரசர் இறப்புக்கு பின்பும், தன்னை பாதுகாத்து கொள்ள Terracotta Armyஐ கட்டமைத்தார், அதில் பல ஆயிரக்கணக்கான போர் வீரர்கள், குதிரைகள் காணப்பட்டன, இப்படி பல பழங்கால மக்கள் இறப்புக்கு பின்பும் வாழ்க்கை உண்டு என்பதை நம்பினர், ஆனால் நவீன அறிவியல், மரணம் உடலுக்கு இறுதியானது. மரணத்திற்குப் பின் வாழ்க்கை என்பது இல்லவே இல்லை, மூளை செயல் இழந்தால் உடலும் அழியும் அதோடு நினைவுகளும் செத்துப் போகின்றன. எனவே, மரணத்துக்குப் பின் வாழ்க்கை இல்லை என்றது, ஆதலால், மேலை நாடுகளில் சிலர், இறந்த பிறகும் அறிவியல் வளர்ச்சியால் பல நூறு ஆண்டுகளுக்கு பின்பாவது உயிருடன் திரும்ப முடியும் என்ற நம்பிக்கையில் Cryonics chamberகளில் ஆழ்ந்த குளிரில் இறந்த உடலை பதப்படுத்தி வைக்கிறார்கள்.

மதங்கள் என்ன சொல்கின்றன?

மதங்கள் இறப்புக்கு பின்பு வாழ்க்கை உண்டு என உறுதியாக சொன்னாலும், அதிலும் சில கருத்து வேறுபாடுகள் உள்ளதை நாம் அறியலாம், கிறிஸ்தவ மதம் இறப்புக்கு பின்பு ஆன்மா ஓய்வு நிலையை அடையும், ஆனால் இறுதியாக இறைவன் வருவார், அந்த ஆன்மா வாழும் காலத்தில் புண்ணியம் அதிகம் செய்திருந்தால் சுவர்கத்திற்கு சென்று சுகமாகவும், பாவங்கள் அதிகம் செய்திருந்தால் நரகத்திற்கு சென்று கடுமையான துன்பங்களையும் அனுபவிக்கும் என்று கூறுகிறது, ஆனால் பல ஜென்மம் ஆன்மாவுக்கு உண்டு என்பதை கிறிஸ்தவம் மறுக்கிறது, அதே நேரத்தில் இந்து மதம், ஆன்மா அதனுடைய உடல் செய்த பாவ புண்ணியத்திற்கு ஏற்ப்ப, சொர்க்க நரகத்தை அடைந்து, அதனுடைய கர்ம பலன் தீரும் வரை பல ஜென்மங்கள் எடுக்கிறது, இதனால் பிறப்பு இறப்பு சுழற்சி தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது, இறுதியில், அந்த ஆன்ம பாவ புண்ணியத்திற்கு உள்ளாகாமல் உன்னத நிலையை அடையும் போது இறைவனை அடைகிறது, ஆனால் ஆன்மா உன்னத நிலையை அடைய பல ஜென்மங்களை எடுக்கிறது என்கிறது இந்து மதம்.

அறிவியல் என்ன சொல்கின்றன?

இப்படி உடலுக்கு தான் அழிவு, ஆன்மாவிற்கு அழிவு இல்லை என மதங்கள் கூறுகின்றன, ஆனால் மரணத்துக்குப் பிறகு ஆன்மா என்ற வாதத்தில் ஆன்மிகத்துக்கு எதிரான நிலையைத்தான் இதுவரை அறிவியல் எடுத்து வந்துள்ளது, மூளைச்செயலுடன் இருக்கும் வரைதான் நினைவுகள் மற்றும் செயல்கள், மூளை செயல் இழந்தால் உடலும் அழியும் அதோடு நினைவுகளும் செத்துப் போகின்றன, எனவே, மரணத்துக்குப் பின் வாழ்க்கை இல்லை என்பது தான் அறிவியலின் நிலை, ஆனால் சமீப காலமாக பல அறிவியல் ஆராச்சிகள் மரணத்துக்கு பின்பும் வாழ்க்கை உண்டு என்பதை ஒத்து கொள்ள ஆரம்பித்துள்ளன, நம் மரணத்துக்கு பின் என்ன நடக்கும்? என்று தெளிவாக பார்க்கலாம்.

இதயம் செயல் இழந்தாலும் உயிருடன் திரும்ப முடியுமா?

ஆன்மிகம் இறப்புக்கு பின் நடப்பதை ஆன்மா என அழைக்கிறது, ஆனால் அறிவியல் Consciousness என்று தான் கூறுகிறது, சில வருடங்களுக்கு முன்பு வரை இறப்பு என்பது இதய துடிப்பை சார்ந்து தான் இருந்தது, ஒருவருக்கு இதயம் துடிக்கவில்லை எனில் அவர் இறந்துவிட்டதாக கூறுவார்கள், ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபதுகளில் தான் இதயம் தனது துடிப்பை நிறுத்தினாலும் எப்படி அதை மீண்டும் துடிக்க வைக்க முடியும் என்பதை கண்டறிந்தார்கள், மார்பில் கடினமாகவும் வேகமாகவும் அழுத்தி அதிக அளவு ஆக்ஸிஜன், மற்றும் மின்சாரம் செலுத்துவதன் மூலம் இதயத்தை துடிக்க வைக்க முடியும் என்பதை கண்டறிந்தனர், இதை தான் CPR அல்லது cardiopulmonary resuscitation என்கிறார்கள், இதன் மூலம் நிரந்தரமாக இறந்தவர்கள் என்று கருதப்பட்டவர் கூட மீண்டும் உயிர்ப்பிக்கப்படலாம், இதிலிருந்து இதயம் செயல் இழந்தாலும் உடலின் மற்ற உறுப்புகள் உடனே செயல் இழப்பதில்லை, பல மணி நேரம் மனித மூளை உட்பட மற்ற உறுப்புகள் உயிருடன் இருக்கும் என்று கண்டறிந்தனர்.

மனிதனின் மரணம் என்பது இதயம் தனது துடிப்பை நிறுத்துவது அல்லது மூளை செயலிழப்பது மூலம் நடக்கலாம், ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபதுகளில் தான் மூளை செயல் இழந்தாலும் மனிதன் மரணம் அடைய முடியும் என்பதை கண்டறிந்தனர், இங்கு மூளை செயல்படாது ஆனால் இதயம் துடித்து கொண்டிருக்கும், மனிதனின் weightல் இரண்டு சதவீதம் தான் மூளை, ஆனால் இதயம் சுவாசிக்கும் oxygenயில் இருபது சதவீதம் மூளைக்கு தான் செல்கிறது, இதனால் இதயம் தனது துடிப்பை நிறுத்தும் போது, போதுமான oxygen கிடைக்காமல் அதிகம் பாதிக்கப்படுவது மூளை தான், அடுத்த ஐந்து நிமிடத்தில் oxygen கிடைக்கவில்லை எனில் மூளை மெதுவாக செயலிழக்க ஆரம்பிக்கும், ஆதலால் குறிப்பிட்ட நேரத்துக்குள் இதயம் மீண்டும் துடிக்க வேண்டும், இல்லை எனில் எக்மோ போன்ற நவீன கருவிகளின் மூலம் மூளைக்கு செயற்கையாக oxygen செலுத்தப்படுகிறது.

இப்போது நோயாளியின் இதயம் துடிக்கவில்லை அதாவது அவர் clinically dead, ஆனால் அவரின் உயிரை இன்னும் காப்பாற்ற முடியும், oxygen குறைபாட்டால் ஏற்படும் மூளை செயலிழப்பை தடுத்து, CPR மூலம் இதயத்தை மீண்டும் துடிக்க வைத்தால் அவர் உயிர் பெற முடியும், இப்படி உயிர் பிழைத்தவர்களும் உண்டு. அவர்கள் தான் நம் மரணத்துக்கு பின் என்ன நடக்கும்? என தங்கள் அனுபவத்தை கூறினார்கள்.

Near death experiences:

இப்படி மரணத் தறுவாயில் இருப்பவர்களை கண்டறிந்து அவர்களுக்கு அருகில் இருந்தபடி அவர்களுடைய மரணம் சம்பவிக்கும் நேரத்தில் அவர்களுக்கு நேரிட்ட அனுபவங்களை நவீன ரக அறிவியல் சாதனங்களின் உதவியுடன் கண்டறிந்திருக்கின்றனர்.இதை Near death experiences என்று கூறுகிறார்கள்.புகழ்மிக்க மருத்துவர் ரேமண்ட் மூடி, ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்தைந்தாம் ஆண்டு எழுதிய வாழ்க்கைக்குப் பின் வாழ்க்கை என்ற நூல்தான் உலக அளவில் இறப்புக்குப் பின்னான வாழ்க்கை குறித்து பல ஆய்வுகளை மேற்கொள்ள செய்தது.

இந்த ஆராட்சி மனிதன் இறந்த பிறகும் அவர்களின் Consciousness தொடர்ந்து இயங்கி கொண்டிருந்தது, அவர்களால் பூமியில் நடப்பவை பற்றி பார்க்கவும், கேட்கவும் முடிந்தது என்று கண்டறிந்தது,ஆய்வுகள், ஒரேவிதமான உணர்வுகளை அவர்கள் அனுபவித்ததைப் பதிவு செய்தன,அவைகள்,உடலை விட்டு உயிர் பிரிதல், அவர்கள் மரணம் அடைந்து விட்டார்கள் என்பதை உணர்தல்,ஆழ்ந்த அமைதியை உணர்தல்,சுரங்கவழிப் பயணம்,விண்வெளியில் ஆன்மா பயணித்தல்,ஒளிமிக்க சிலரின் தரிசனம்,அகன்ற ஜோதியைக் காணல், வாழ்க்கை முடிவடைவதில்லை என்று உணர்தல் போன்றவை ஆகும்,ஆச்சர்யம் அளிக்கும் விதமாக கண்பார்வை இல்லாதவர்கள் கூட,இறந்த பிறகு,நடந்த சம்பவங்களை தங்களால் பார்க்கவும் கேட்கவும் முடிந்தது என்று சொன்னது தான்,மேலும் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள்,யூதர்கள்,இந்துக்கள் மற்றும் மதநம்பிக்கை அற்றவர்கள் என எல்லோரின் அனுபவமும், பெரும்பாலும் ஒரே மாதிரியாக இருந்தது ஆச்சர்யம்.இவை அனைத்தும் இறந்து மீண்டும் உயிர் பிழைத்தவர்களின் அனுபவங்கள்.

சிலரின் அனுபவங்களை இப்போது பார்க்கலாம்:

பமீலா ரெனால்ட்ஸ் லோவரி:

அமெரிக்க பாடகி மற்றும் பாடலாசிரியர் பமீலா ரெனால்ட்ஸ் லோவரி, இவர் வர்ஜீனியா கடற்கரையில் தனது புதிய பாடலை விளம்பரப்படுத்தியபோது, ​​திடீரென்று அவருக்கு பேசுவது கடினமாக இருந்தது, அவரை பரிசோதித்த docter, அவர் மூளையில் இரத்த தமனியில் ஒரு பெரிய வீக்கம் இருப்பதைக் கண்டறிந்தார், அது வெடித்துவிடும் அபாயத்தில் இருந்தது. அந்த வீக்கம் மூளையின் அடித்தளத்தில் இருந்தது ஆதலால் அங்கு செல்வது மிகவும் கடினம், அவர் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பே இல்லை என docterகளால் சொல்லப்பட்டது, ஆனால் அவருக்கு மிகவும் சிக்கலான மற்றும் கடினமான ஒரு surgery பரிந்துரைக்கப்பட்டது, அவரின் உடல் வெப்ப நிலை பத்து டிகிரிக்கு குறைக்கப்பட்டது, surgeryயின் போது இரத்த அழுத்தத்தால் மூளை இரத்த தமனி வெடித்து விடும் என்பதால் அவரின் இதய துடிப்பு நிறுத்தப்பட்டது, இதனால் மூளைக்கு இதயத்தில் இருந்து வரும் இரத்தமும் oxygenயும் நிறுத்தப்பட்டது, அவர் மூளையிலிருந்து இரத்தத்தை வெளியேற்றி அவரின் மூளை முழுவதும் செயல்படாத தன்மைக்கு கொண்டுவரப்பட்டது, அவர் clinically dead என்ற modeக்கு கொண்டுவரப்பட்டார், அவர் காதுகளில் ஸ்பீக்கர்களை வைத்தார்கள். ஸ்பீக்கர்கள், ஜெட் விமானம் புறப்படுவதைப் போல பெரிய சத்தத்தை எழுப்பியது, ஆனால் அவரது உடல் இறந்த உடலை போல் அசையாமல் இருந்தது, இதன் மூலம் அவர் மூளை முழுவதும் இறந்த நிலைக்கு வந்து விட்டதா என்று பரிசோதிக்க பட்டது, இறுதியில் வெற்றிகரமாக surgery முடிக்கப்பட்டு அவருடைய இதய துடிப்பு மீண்டும் துடிக்க வைக்கப்பட்டது.

அந்த surgeryயின் போது நடந்த சம்பவங்களை அவர் இப்படியாக கூறுகிறார்.
அந்த surgeryயின் போது, திடீரென நான் என் உடலில் இருந்து வெளிய வந்து அந்தரத்தில் பறப்பதை போல் நின்று கொண்டிருந்தேன், அப்போது நான் என் உடலைப் பார்த்துக் கொண்டிருந்தேன் அது என் உடல் என்று எனக்குத் தெரியும், ஆனால் நான் அதைப் பொருட்படுத்தவில்லை, என்னால் அங்கு நடப்பதை கேட்கவும் பார்க்கவும் முடிந்தது, நான் எந்த வலியும் உணரவில்லை, மாறாக ஒரு ஆழ்ந்த அமைதியான மனநிலையை உணர முடிந்தது, மேசையைச் சுற்றி 20 பேரை பார்க்க முடிந்தது. திடீரென ஒரு வெளிச்சம் என்னை இழுக்க ஆரம்பித்தது, அதை என்னால் உணர முடிந்தது, அந்த வெளிச்சம் என்னை இழுத்து கொண்டு போனது, முடிவில் என்னுடைய grand மதர் மற்றும் எனது உறவினர்களை பார்த்தேன், surgery முடிந்து மீண்டும் இதயம் துடிக்க வைக்கப்பட்ட போது உயிர் மீண்டும் உடலுடன் இணைந்தது, இங்கு அவரால் surgeryயின் போது நடந்த சம்பவங்களை நேரில் பார்த்தது போல கூற முடிந்தது.

Anita மூரஜனி:

இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து நாட்டவர், ஹாங்காங்கில் வளர்ந்து வாழ்கிறார், ரெண்டாயிரத்து இரண்டாம் ஆண்டில் நோயெதிர்ப்பு மண்டலத்தில் உள்ள நிணநீர் கணுக்களின் புற்று நோய் மருத்துவர்களால் கண்டறியப்பட்டது, நோயின் தீவிரத்தால் 02-Feb-2006 அன்று காலை அவர் எழுந்திருக்கவில்லை, கோமா நிலையில் இருந்தார், அதன் பின் நடந்த சம்பவங்களை அவர் இப்படியாக கூறுகிறார், என்னைச் சுற்றிப் பேசப்படுவதை எல்லாம் என்னால் கேட்க முடிந்தது. நான் உயிர் பிழைப்பது கடினம் என்று மருத்துவர் என் குடும்பத்தினரிடம் சொன்னதைக் கேட்டேன், நான் என் உடலை விட்டு வெளியேறினேன், என்னுடைய உடலை என்னால் மருத்துவ மனை படுக்கையில் பார்க்க முடிந்தது, பின் பெரிய ஒளி நிறைந்த புதிய இடத்தில் இருந்தேன் அங்கு என் அன்புக்குரியவர்களைக் காணவும் மற்ற ஆத்மாக்களின் இருப்பை உணரவும் முடிந்தது

ஒரு நடைபாதையில் சுமார் பனிரெண்டு மீட்டர் தொலைவில் தனது கணவருக்கும் மருத்துவர்களுக்கும் இடையே நடந்த உரையாடல்களைக் கேட்க முடிந்தது, அதிர்ச்சியடைந்த கணவருடன் docter என்ன பேசினார் என்பதை பின்னர் உயிர் பிழைத்து வந்த பின் சரியாக கூறினார்,நான் மற்றொரு பரிமாணத்திற்குச் சென்றபோது,அன்பையும் அமைதியையும் உணர்ந்தேன். நான் வலியை உணரவில்லை.வாழ்க்கையில் எனது நோக்கத்தையும் நான் என்ன செய்ய வேண்டும் என்பதையும் கண்டுபிடித்தேன்.எனது புற்றுநோய்க்கான தீர்வு எப்போதும் எனக்குள் இருப்பதை நான் உணர்ந்தேன். மீண்டும் இந்த உலகத்துக்கு வந்தேன்,அவர் கொடுத்த இந்த விளக்கம் docter உட்பட பலரையும் ஆச்சர்யப்பட வைத்தது, 4 நாட்களுக்குள்,அவரது 70 சதவீத புற்றுநோயானது அழிக்கப்பட்டது, 5 வாரங்களில், அவர் நோயிலிருந்து விடுபட்டார், மருத்துவமனை நிபுணர்கள் அவரது வாழ்க்கை ஒரு அதிசயம் என்று அறிவித்தனர்.

இந்த உடல் மண்ணால் செய்யப்பட்டது ஆதலால் இறந்த பின்பு இந்த உடல் மண்ணுக்கு செல்கிறது, ஆனால் ஆன்மா இறைவன் எனும் பெரும் ஒளியால் ஆனது, அது இறைவன் எனும் பெரும் ஒளியை நோக்கி செல்கிறது என ஆன்மீகம் சொல்கிறது, அதை நோக்கி அறிவியல் பயணிப்பது போல் இந்த நிகழ்வுகள் உள்ளன.

இந்த Article உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம், மேலும் உங்கள் ஆதரவை வேண்டுகிறோம்.

அடுத்த பதிவு, கீழே Link கொடுக்கப்பட்டுள்ளது.

மந்திர துறவி Grigori Rasputin

இத்துடன் எங்கள் youtube channel link கொடுக்கப்பட்டுள்ளது, அதை பார்த்து உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.

 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply