மர்மம்கள் நிறைந்த திறக்காத கதவுகள், கற்பனை செய்து பாருங்கள், அவைகள் சொல்லப்படாத 1000 ரகசியங்களை தன்னுள் மூடி வைத்துள்ளது, இவை வெறும் கதவுகள் அல்ல, இதுவரை யாரும் திறக்க முடியாத பெரும் புதையல் அல்லது யாரும் அறியாத ஒரு மர்மத்துக்கான நுழைவுவாயிலாக இருக்கலாம்,ஆனால் இவைகள் நமது கற்பனைகளையும், கவனத்தையும் உடனே ஈர்த்து கொள்கிறது, அவற்றின் ஊடுருவ முடியாத கதவுகளுக்கு பின்னால் அவை அப்படி என்ன அசாதாரண ரகசியங்களை மறைத்து வைத்திருக்கின்றன என்று நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன, அப்படி உலகை ஆச்சரியப்படுத்தும் சில திறக்க முடியாத கதுவுகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
உலக அதிசயம் Taj Mahaலில் உள்ள மர்ம அறைகள்
தாஜ்மஹால், காதல் மற்றும் கட்டிடக்கலையின் உன்னதங்களில் ஒன்று இது 1632ல் பேரரசர் ஷாஜஹானால் அவரது மறைந்த மனைவி மும்தாஜ் மஹாலின் நினைவாக கட்டப்பட்டது. கட்டிடக் கலைஞர் உஸ்தாத் அஹ்மத் லஹோரி வடிவமைத்த இந்த நினைவுச்சின்ன கல்லறை, இஸ்லாமிய, பாரசீக, ஒட்டோமான் துருக்கிய மற்றும் இந்திய கட்டிடக்கலை பாணிகளை ஒன்றிணைத்து செய்யப்பட்டது, சுமார் 20,000 கட்டுமானப் பணியாளர்களால் இருபது வருடங்களாக கட்டப்பட்டது, பல நூறு வருடங்களாய் சுற்றுச்சூழல் காரணிகள் மற்றும் மாசுபாட்டின் சவால்களை எதிர்கொண்ட போதிலும், அதன் அழகிலும், மகத்துவத்திலும் சிறிதும் குறைவு ஏற்படவில்லை, இன்றும், தாஜ்மஹால் முகலாய கட்டிடக்கலைக்கு ஒரு சான்றாக நிற்கிறது மற்றும் ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான பார்வையாளர்களை வசீகரித்து வருகிறது, இப்படி பல அதிசங்களை கொண்ட தாஜ் மஹாலிலும் பல நூற்றண்டுகளாக திறக்கப்படாத அறைகள் உண்டு என்பதை நம்ப முடிகிறதா? ஆம், இன்னும் திறக்க முடியாத பல அறைகள் உள்ளன.
தாஜ் மஹால் மொத்தம் 1089 அறைகளைக் கொண்டுள்ளது, ஆனால் இவற்றில் சில அறைகள் இன்னும் திறக்கப்படாமல் மூடப்பட்டுள்ளது, அது ஏன்? ஏன் என்பதற்கான சரியான பதில் இன்னும் கிடைக்கவில்லை, சிலர் அறைகளில் ஒன்று, அறைகள் பளிங்குக் கற்களால் ஆனவை மேலும் இந்த அறைகளில் காற்றோட்டம் ஏதும் இல்லை, இது கெட்ட வாயுக்களால் நிரம்பி உள்ளது, ஆதலால் இதை திறந்தால் கட்டிடத்திற்கும் மனிதர்களுக்கும் ஆபத்து வரலாம் என நினைக்கிறார்கள், மற்றொரு கோட்பாடு என்னவென்றால், மும்தாஜ் அந்த திறக்கப்படாத அறைகளில் ஒன்றில் புதைக்கப்பட்டுள்ளார்,மும்தாஜ்யின் உடல் இறந்தபோது எப்படி இருந்ததோ அதே நிலையில் இப்போதும் இருக்கும் என கருதுகின்றனர்.
தாஜ்மஹால் முதலில் ஒரு இந்துக் கோவில் என்ற கூற்றும் உள்ளது. இது ஒரு காலத்தில் தேஜோ மஹாலயா என்று பெயரிடப்பட்ட இந்துக் கடவுளான சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில் என்று சிலர் நம்புகிறார்கள். இருப்பினும், தாஜ்மஹால் 17 ஆம் நூற்றாண்டில் முகலாய பேரரசர் ஷாஜஹானால் அவரது மனைவி மும்தாஜ் மஹாலின் கல்லறையாக கட்டப்பட்டது என்பதை முக்கிய வரலாற்றாசிரியர்கள் மற்றும் அறிஞர்கள் பெருமளவில் ஒப்புக்கொள்கிறார்கள். கல்லறையாகக் கட்டப்படுவதற்கு முன்பு அது ஒரு இந்துக் கோயிலாக இருந்த கோட்பாட்டை ஆதரிக்கும் நம்பகமான வரலாற்று ஆதாரங்கள் எதுவும் இல்லை.
The Great Sphinx of Giza மர்மம்
The Great Sphinx of Giza என்பது பண்டைய எகிப்தின் புதிரான நினைவுச்சின்னங்களில் ஒன்றாகும், இது பிரமிடுகளுக்கு அருகிலுள்ள கிசா பீடபூமியில் அமைந்துள்ளது.இதன் அமைப்பு சிங்கத்தின் உடலை மனித தலையுடன் இணைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது, The Great Sphinx of Giza தோராயமாக 4000 ஆண்டுகளுக்கு முந்தையது, இது 66 அடி உயரமும் 240 அடி நீளமும் கொண்டது. இந்த ஸ்பிங்க்ஸ் வலிமை, ஞானம் மற்றும் பாதுகாப்பின் அடையாளமாக கருதப்படுகிறது. இருந்தபோதிலும், இது பல மர்மங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.
ஸ்பிங்க்ஸின் மர்மம் என்னவென்றால், 25 அடி ஆழத்தில் இரண்டு செவ்வக அறைகள் உள்ளன. இந்த அறைகள் seismographஆல் கண்டுபிடிக்கப்பட்டன மற்றும் இந்த மர்ம அறைகள் ஸ்பிங்க்ஸின் பாதங்களின் கீழ் அமைந்துள்ளன. இந்த அறைகளுக்கு இரண்டு நுழைவாயில்கள் உள்ளன, ஆனால் அவை சீல் வைக்கப்பட்டுள்ளன, மேலும் அரசாங்க அதிகாரிகள் இது சம்மந்தப்பட்ட ஆராய்ச்சியைத்தடை செய்துள்ளனர், எனவே கதவுகளுக்குப் பின்னால் என்ன இருக்கிறது என்பது ஒரு மர்மமாகவே உள்ளது. இருப்பினும், சிலர் பழங்கால உலகத்தை பற்றிய விளக்கங்கள் அங்கு இருக்கலாம் என கருதுகிறார்கள், அதிலும் குறிப்பாக காணாமல் போன அட்லாண்டிஸ் கண்டத்தைப் பற்றிய வரலாறு இருக்கலாம் என கருதுகிறார்கள்.
Padmanabhaswamy Temple – The mystery of chamber B
வரலாற்று பதிவுகள் மற்றும் புராணங்களின்படி, கோவிலின் ஆரம்பம் கி.பி எட்டாம் நூற்றாண்டிற்கு முந்தையது, அந்த நேரத்தில் தென்னிந்தியாவின் முக்கிய ஆளும் வம்சங்களில் ஒன்றான சேர வம்சத்தால் கோயில் கட்டப்பட்டது என்று நம்பப்படுகிறது. 18ஆம் நூற்றாண்டில் மன்னர் மார்த்தாண்ட வர்மாவின் ஆட்சியின் கீழ் பல சீர் திருத்தங்கள் இந்த கோவிலில் நிகழ்ந்தன.இக்கோவிலின் பிரதான தெய்வமாக மகாவிஷ்ணு போற்றப்படுகிறார். இக்கோவில் மகாவிஷ்ணுவின் நூற்றி எட்டு திவ்யதேசங்களில் ஒன்றாகும்.
பத்மநாபசுவாமி கோவில் தான் உலகிலேயே பணக்கார கோவிலாக விளங்குகிறது, பத்மநாபசுவாமி கோவிலில் ஏ முதல் எஃப் வரை மொத்தம் 6 அறைகள் உள்ளன. இந்த அறைகள் பூமிக்கு அடியில் 5 அடி ஆழத்தில் உள்ளன. இதுவரை 1990 ம் ஆண்டில் 2 முறையும், 2002ம் ஆண்டு 5 முறைகளும் மட்டுமே இந்த ரகசிய பெட்டகங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் இவற்றில் பி அறை மட்டும் இதுவரை திறக்கப்பட்டது கிடையாது,வெறும் ஐந்து அறைகளில் காணப்படும் பொக்கிஷங்களின் மதிப்பிடப்பட்ட மதிப்பு சுமார் $22 பில்லியன் ஆகும்.
இதுவரை திறக்கப்படாமல் இருக்கும் பி அறையின் சுவர் தங்கத்தால் ஆனதாக சொல்லப்படுகிறது. இந்த அறையை திறப்பதற்கு திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் அனுமதி வழங்க மறுத்து விட்டனர், பி அறை 3 கதவுகளை கொண்டு பாதுகாக்கப்படுகிறது, 3 ஆவது கதவில் இரண்டு பெரிய பாம்புகள் செதுக்கப்பட்டுள்ளன. யாரும் இதற்கு அருகில் வரக் கூடாது என்பதை எச்சரிக்கும் அடையாளங்கள் ஆகும் . இந்த பி அறை, மன்னர் மார்த்தாண்ட வர்மன் காலத்தில் தலைசிறந்த வேத மந்திரங்கள் தெரிந்த புரோகிதர்களால் நாக பாச மந்திரங்கள் ஓதி பாதுகாக்கப்பட்டு, மூடி வைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. தலைசிறந்த புரோகிதர்களின் உதவியுடன் சக்தி வாய்ந்த மந்திரங்கள் ஓதி மட்டுமே இந்த கதவை திறக்க முடியும் என கூறப்படுகிறது.
கனடாவின் Banff Springs ஹோட்டல் மர்மம்
கனடாவில் உள்ள பான்ஃப் ஸ்பிரிங்ஸ் சிறந்த விடுமுறை ஸ்தலமாக இருக்கலாம். ஹோட்டலின் சூழல் அமைதியாகவும், இனிமையாகவும் மவுண்ட் ரண்டில் மற்றும் வில் பள்ளத்தாக்கின் அழகை ரசிக்கும் படியாக உருவாக்கப்பட்டுள்ளது, இருப்பினும், இந்த கம்பீரமான ஹோட்டலுக்குப் பின்னால் பல மர்ம கதைகள் உலா வருகிறது. அவைகள் சாம் மெக்காலே,தி பெல்மேன், நடன மணப்பெண் மற்றும் அறை 870 போன்ற பல பேய் கதைகள் பல ஆண்டுகளாக பலரை அதிர வைத்துள்ளது.
அறை எண் 873ஐ பற்றி ஒரு மர்ம கதை இருக்கிறது, இந்த அறைக்கு ஹோட்டல் ஊழியர்கள் உட்பட எந்த விருந்தினர்களும் அனுமதி கிடையாது, இந்த அறைக்குள் இப்போது யாரும் வர முடியாது, ஏன் எனில் இந்த அறைக்கு கதவு கிடையாது, 1928ஆம் ஆண்டில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நிகழ்ந்தது, ஒரு திருமணமான தம்பதியும் அவர்களது மகளும் இந்த அறையில் தங்கி இருந்தார்கள், ஆனால் அவர்களில் எவரும் இப்போது உயிருடன் இல்லை என்று கூறுப்படுகிறது, ஒரு இரவில் அந்த குடும்பத்தின் தந்தை தனது மனைவியையும் மகளையும் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டார். அன்று முதல், அறை 873 ஐ முன்பதிவு செய்த விருந்தினர், சிறுமியின் அலறல் மற்றும் கண்ணாடியில் இரத்தம் தோய்ந்த கைரேகைகள் குறித்து புகார் அளித்தனர், இதன் விளைவாக அந்த அறை இறுக்கமாக மூடப்பட்டது, இது வரை திறக்கப்படவில்லை.
சீன பேரரசர் கின் ஷி ஹுவாங்கின் கல்லறை
மார்ச் 1974 இல், சீனாவின் வறட்சியால் வறண்டு கிடக்கும் ஷான்சி மாகாணத்தில் கிணறு தோண்டிய விவசாயிகள் குழு, ஒரு களிமண் உருவத்தின் துண்டுகளைக் கண்டெடுத்தனர், இது உலகையே ஆச்சரியப்பட வைத்த மிகப்பெரிய தொல்பொருள் கண்டுபிடிப்புகளில் ஒன்றாகம், இது தான் சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பாக களிமண் சிலைகளாக செய்து, மண்ணில் புதைக்கப்பட்ட டெர்ராகோட்டா வீரர்கள் மற்றும் குதிரைகள் ஆகும் இதன் நோக்கம் அவர்களின் சக்கரவர்த்தியின் மறுமையிலும் அவரை பாதுகாக்க மற்றும் அவரது பேரரசை பராமரிக்க உதவ கட்டப்பட்டது என நம்பப்படுகிறது.
சுமார் 8000 டெரகோட்டா இராணுவம் வீரர்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும், பேரரசர் கின் ஷி ஹுவாங்கின் உண்மையான கல்லறை இன்னும் தோண்டப்படாமல் உள்ளது. பண்டைய நூல்களின்படி, கல்லறையானது புதையல்களால் நிரப்பப்பட்ட ஒரு பெரிய நிலத்தடி அரண்மனை என்று கூறப்படுகிறது, இதில் நீர்நிலைகளை உருவகப்படுத்தும் திரவ பாதரச ஆறுகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது, கல்லறையைச் சுற்றியுள்ள பகுதிகளை நவீன சோதனைக்கு உட்டபடுத்திய போது அந்த மண்ணில் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவு பாதரசம் இருப்பதைக்
]கண்டறிந்துள்ளார்கள், இருப்பினும், கல்லறையை சேதப்படுத்தினால் நம்ப முடியாத பிரச்சினைகள் வரும் என்ற கவலை மற்றும் போதுமான பாதுகாப்பு வசதி இல்லாததால், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அதை முழுமையாக ஆராய்வதைத் தடுத்துள்ளனர். உண்மையில் உள்ளே என்ன இருக்கிறது என்பது தொல்லியல் துறையின் மிகப் பெரிய மர்மங்களில் ஒன்றாகவே உள்ளது.
சில டெரகோட்டா வீரர்கள் முதலில் வாள், ஈட்டிகள் மற்றும் குறுக்கு வில் உள்ளிட்ட வெண்கல ஆயுதங்களுடன் ஆயுதம் ஏந்தியிருந்தனர். இருப்பினும், இந்த ஆயுதங்களில் பல காலப்போக்கில் மறைந்துவிட்டன. அவை பழங்காலத்தில் கொள்ளையடிக்கப்பட்டதா அல்லது வேண்டுமென்றே அகற்றப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை, இது தளத்தில் மற்றொரு மர்ம நிலையை உருவாக்குகிறது.
பேரரசர் கின் ஷி ஹுவாங்கின் மரணத்திற்குப் பிறகு டெரகோட்டா இராணுவம் மற்றும் கல்லறை வளாகத்தின் கட்டுமானம் திடீரென நிறுத்தப்பட்டது, பல புதிய வம்சங்களின் எழுச்சிகள் மற்றும் கின் வம்சத்தின் வீழ்ச்சி மற்றும் அரசியல் கொந்தளிப்புகளால் இந்த திட்டம் கைவிடப்படுவதற்கு வழிவகுத்திருக்கலாம் என்று வரலாற்று பதிவுகள் தெரிவிக்கின்றன. இது ஏன் திட்டமிட்டு முடிக்கப்படாமல் விடப்பட்டிருக்கிறது என்ற கேள்வியை எழுப்புகிறது.
மேற்குறிப்பிட்ட அனைத்தும் வரலாற்றில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டு மர்ம கதவுகள் அல்லது மர்ம அறைகளால் மூடப்பட்டுள்ளது, அவைகள் ஏன் மூடப்பட்டுள்ளது, அதன் பின்ன என்ன மர்மம் உள்ளது என்பது பல நூறு ஆண்டுகளாக கேட்கப்படும் கேள்வியாகத்தான் உள்ளது ஆனால் இன்னும் அதற்கான விடைகள் தான் கிடைக்கவில்லை, அது உண்மையில் அதிர்ச்சியாக இருக்குமா அல்லது ஆச்சரியமாக இருக்குமா என்பது எதிர்காலம் தான் நமக்கு தெரிவிக்க வேண்டும், இந்த கதவுகளை திறக்கும் முடிவை அரசு தான் எடுக்க வேண்டும்.
மர்மம்கள் நிறைந்த திறக்காத கதவுகள், பற்றிய இந்த Article உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம், மேலும் உங்கள் ஆதரவை வேண்டுகிறோம்.
அடுத்த பதிவு, கீழே Link கொடுக்கப்பட்டுள்ளது.
சென்டினலீஸ் – உலகில் தனிமைப்படுத்தப்பட்ட மக்கள்
இத்துடன் எங்கள் youtube channel link கொடுக்கப்பட்டுள்ளது, அதை பார்த்து உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.