கந்தஹார் விமானக் கடத்தல்

கந்தஹார் விமானக் கடத்தல்

தீவிரவாதிகளால் சிறை பிடிக்கப்பட்ட ஒரு இந்திய விமானம் 5 நாடுகளில் தொடர்ந்து ஏழு நாட்கள் சிறை பிடிக்கப்பட்டு புதிய மில்லினியத்துக்கு முந்தய நாள் பிணைய கைதிகள் விடுவிக்கப்பட்டார்கள், மொத்த இந்தியாவையும் அதிர்ச்சியில் உறைய வைத்த இந்த சம்பவம் எப்படி நடந்தது?இது இந்தியாவிற்கு வெற்றியா அல்லது தோல்வியா?, என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

Flight 814 கடத்தப்பட்டது:

December இருபத்தி நாலு, ஆயிரத்து தொள்ளாயிரத்து தொன்னுற்று ஒன்பது மாலை நாலு இருபத்தைந்து மணி. அடுத்த நாள் Christmas, புது millenium ஆரம்பிக்க இன்னும் ஒரு வாரம் தான் உள்ளது, இது நேபாளத்தின் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையம். இந்த விமானம் Indian Airlinesயின் IC814, இது ஒரு Airbus, A300 வகையை சேர்ந்தது, நேபாளத்தின் காத்மாண்டுவில் இருந்து புது டெல்லிக்கு செல்ல தயாராகிறது, விமானத்தின் கேப்டன் 37 வயது, தேவி சரண்,அவருடன் First officer ராஜீந்தர் குமார், மற்றும் ஐம்பத்தி எட்டு வயது Flight engineer அனில் குமார் ஜக்கியா இருந்தனர்.

Terminalin உள்ளே பாதுகாப்பு சோதனைக்காக பயணிகள் வரிசையில் நிற்கிறார்கள், அந்த வரிசையில், 5 ஆண்கள் தலா ஒரு பையை வைத்திருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவராக டிடெக்டர் வழியாக அமைதியாக சென்று விமானத்தில் ஏறுகிறார்கள் ஒரு பெரிய திட்டத்துடன். நாலு வாரங்களுக்கு முன்பு தான், IC814க்கான ஐந்து டிக்கெட்டுகள் வாங்கப்பட்டன,business class 2, மற்றும் 3 economic class. ஆனால் போலியான பெயர்களில். பொதுவாக காத்மாண்டுவில் இருந்து புது டெல்லிக்கு 2 மணி நேரம் தான் ஆகும், ஆனால் இந்த பயணம் பல நாள்களை எடுக்க போகிறது என்பது அந்த விமானத்தில் பயணித்த யாருக்கும் அப்போது தெரியாது.

ஒரு மாதத்திற்கு முன்பு, நேபாளத்தில் உள்ள இந்திய உளவுத்துறை காத்மாண்டுவில் ஒரு இந்திய விமானத்தை கடத்தும் திட்டம் நடந்து கொண்டிருப்பதை அறிந்தனர். ஆனாலும் எந்த விமானம், எந்த தேதியில் கடத்தல் திட்டமிடப்பட்டது என்பது அவர்களுக்குத் தெரியாது. ஆனால் அவர்கள் அந்த தகவலை ஒரு புரளி என்று நினைத்து நிராகரித்து விடுகிறார்கள், மேலும் இந்த செய்தி துரதிர்ஷ்டவசமாக டெல்லியில் உள்ள RAW தலைமையகத்துக்கு அனுப்பப்படவில்லை.

விமானம் காத்மாண்டுவில் உள்ளூர் நேரப்படி மாலை 4:25 மணிக்கு புறப்படுகிறது. இந்த விமானத்தில் 178 பயணிகள், 2 பைலட்டுகள், 13 இந்தியன் ஏர்லைன்ஸ் ஊழியர்கள் உட்பட மொத்தம் 193 பேர் பயணித்தனர், விமானம் புறப்பட்டு 40 நிமிடங்கள் கடந்த நிலையில், 5 பேர் தங்களது இருக்கைகளிலிருந்து எழுந்தனர். அவர்களில் இருவர் பைலட்டுகளின் அறைக்குச் செல்ல, மீதி மூவரும் விமானத்தை மூன்று பகுதிகளாகப் பிரித்து, பயணிகளைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

மிரட்டப்பட்ட விமானி:

ஐந்து கடத்தல்காரர்கள் ஒருவரையொருவர் குறியீட்டுப் பெயர்களில் அழைத்தனர் அது சீஃப், பர்கர், டாக்டர், ஷங்கர் மற்றும் போலா, விமானியின் அறைக்குள் சென்ற கடத்தல்கார தலைவன் கேப்டன் தேவி சரண்யை துப்பாக்கி முனையில் மிரட்டி,தொடர்ந்து மேற்கு நோக்கி பறக்குமாறு உத்தரவிட்டான், உண்மையில், கடத்தல்காரர்கள் இந்த விமானத்தை பாகிஸ்தானுக்கு கொண்டு செல்ல விரும்பினர். ஆனால் கேப்டன் தேவி ஷரண் இந்திய எல்லையை விட்டு விமானம் வெளியேறுவது எக்காரணம் கொண்டும் தமக்கோ அல்லது பயணிகளுக்கோ பாதுகாப்பாக இருக்க போவதில்லை என்பதை உணர்ந்து. லாகூர் செல்வதற்கு போதுமான எரிபொருள் தங்களிடம் இல்லை என்று கடத்தல்காரனிடம் கூறுகிறார். ஆனால் கடத்தல்காரன், அப்படி எனில் மாற்று விமான நிலையம் என்ன என்று கேட்கிறார். அது மும்பை என்று கேப்டன் ஷரண் பதிலளித்தார், விமானம் பறந்து கொண்டிருக்கும் இடத்தில் இருந்து lahoreஐ விட மும்பை அதிக தூரம் கொண்டது, இதை முன்பே அறிந்திருந்த தீவிரவாதிகள், மும்பை செல்ல எரிபொருள் இருக்கும் எனில், lahore போக முடியும் என்று பைலட்டுகளை மிரட்டி பாகிஸ்தானின் லாகூரை நோக்கி விமானத்தை பறக்க வைத்தனர்.

அதே நேரத்தில் விமானத்தின் உள்ள ஆண் பயணிகளும், பெண் பயணிகளும் தனித்தனியாக பிரிக்கப்பட்டனர், விமானத்தின் முன்புறம் ஆண்களும் , பின்புறம் பெண் பயணிகள் மற்றும் குழந்தைகள் உக்காரவைக்கப்பட்டனர், அதே நேரம் காக்பிட்டில், கடத்தல்காரர்களுக்கு தெரியாமல், கேப்டன் ஷரன் ஹைஜாக் குறியீடு ஏழு ஆயிரத்து ஐநூறுஐ முதல் முறையாக இந்திய A.T.Cக்கு அனுப்பி, விமானம் கடத்தப்பட்டதை இந்தியாஉக்கு தெரியப்படுத்துகிறார், அப்போது இந்திய நேரம் மாலை நாலு நாப்பது மணி. துரதிர்ஷ்டவசமாக நமது அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், மற்றும் அவரது முதன்மை செயலாளர் பிரஜேஷ் மிஸ்ராஉக்கும், இந்த விமான கடத்தல் ஒரு மணி நேரம் கழித்து தான் தெரிய வந்தது.மற்றும் கடத்தல் தொடர்பான தகவல்கள் அந்த நேரத்தில் உளவுத்துறை அல்லது RAWவுக்கு தெரிவிக்கப்படவில்லை.

பாகிஸ்தானுக்குள் விமானம் நுழைய தடை

விமானம் பஞ்சாப் அருகே பறந்து கொண்டிருக்கிறது, விமானம் இந்திய எல்லையை விட்டு வெளியேறுவதை கேப்டன் தேவி சரண் விரும்பவில்லை, விமானம் இந்தியாவில் இருக்கும் வரை தான் விமானத்திற்கு பாதுகாப்பு, இந்தியப் பாதுகாப்புப் படைகள் கடத்தல்காரர்களை வீழ்த்தி பயணிகளை விடுவிக்க முடியும் என அவர் நம்பினார். இதற்கு அதிக நேரம் தேவைப்படும் என உணர்ந்த அவர் விமானத்தை இந்தியாவின் எல்லைக்கு உள்ளே வைத்திருக்க விமானத்தின் வேகத்தை நாப்பது% குறைக்கிறார், ஆனால் தீவிரவாதிகள் விமானம் இந்திய எல்லைக்குள் இருப்பது தங்களுக்கு பேராபத்து என உணர்ந்து விமானத்தை பாகிஸ்தானுக்குள் கொண்டுசெல்ல வேகப்படுத்தினர், ஆனால் விமானத்தில் இன்னும் சில நிமிடங்களுக்கு மட்டுமே எரிபொருள் இருந்தது, இந்த சிக்கலான நேரத்தில், அடுத்து என்ன ஆகுமோ என்ற பதட்டத்துடனே விமானிகள் விமானத்தை செலுத்தி கொண்டிருந்தனர்.

நேரம் 6:04, விமானம் பாகிஸ்தான் எல்லையை நெருங்குகிறது. கேப்டன் பாகிஸ்தான் A.T.Cஐ தொடர்பு கொண்டு விமானம் கடத்தப்பட்டதை ரகசிய குறியிடு மூலம் தெரியப்படுத்துகிறார், அந்த நேரத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் நல்ல நட்பு முறையில் இல்லை, இரு நாடுகளும் ஐந்து மாதங்களுக்கு முன்பு தான் கார்கில் போரில் ஈடுபட்டுள்ளனர், இப்போது கேப்டன் ஷரன் lahore விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி கோருகிறார், ஆனால் பாகிஸ்தான் தனது எல்லைக்குள் விமானத்தை ஏற்க மறுக்கிறது.மேலும் அவர்கள் லாகூர் வான்வெளி முழுவதையும் மூடிவிட்டனர்.

இந்த நேரத்தில் இந்தியன் A.T.C விமானத்துடன் தொடர்பை ஏற்படுத்த, விமானத்தில் எரிபொருள் குறைவாக இருப்பதாக கேப்டன் தேவி சரண் அவர்களிடம் கூறுகிறார். மேலும் அவர்கள் லாகூரில் தரையிறங்க அனுமதிக்கப்படவில்லை என்பதும் கூறுகிறார், மாலை ஆறு முப்பது மணியளவில், பாகிஸ்தானில் உள்ள இந்திய High Commission விமானத்தை அங்கு தரையிறக்க அனுமதி கோரியது, ஆனால் அந்த கோரிக்கை பாகிஸ்தானால் மீண்டும் நிராகரிக்கப்படுகிறது, நடுவானில் எரிபொருள் தீரும் நிலையில், தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இந்த விமானத்தை இந்தியாவின் அமிர்தசரஸில் தரையிறக்கினால் பயணிகளை காப்பாத்த முடியும் என நினைத்தார் கேப்டன் தேவி சரண்.

அமிர்தசரஸில் தரை இறங்கிய விமானம்:

இதற்கிடையில், கேப்டன் தேவி சரண் கடத்தல்காரர்களுடன் பேசினார், விமானத்தில் எரிபொருள் குறைவாக இருப்பதாக அவர்களிடம் கூறி, மேலும் பாகிஸ்தானின் அனுமதிக்காக தொடர்ந்து காத்திருக்க முடியாது, எங்காவது இறங்கி எரிபொருள் நிரப்ப வேண்டும் என்கிற கட்டாயத்தில் உள்ளனர் இல்லையெனில் விமானம் கீளே விழுந்து வெடித்து விடும் என்று, கடத்தல்காரர்களை சமாதானப்படுத்துவதில் அவர் வெற்றியடைந்தார்,இதனால் விமானத்தை அமிர்தசரஸில் தரையிறக்க கடத்தல்காரர்கள் ஒப்புக்கொண்டனர். மாலை ஆறு நாற்பத்தி நாலுக்கு , விமானம் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் தரை இறங்கியது, ஆனால் கடத்தல்காரர்கள் இந்திய விமானம் இந்திய மண்ணில் தரை இறங்குவதை கொஞ்சமும் விரும்பவில்லை, இது இந்திய படைகளுக்கு சாதகமான இடம், இந்தியப் படைகள் நிலைமையை சிறப்பாகக் கட்டுப்படுத்த முடியும் என்று நினைத்தனர், ஆனால் இந்த வாய்ப்பை துரதிர்ஷ்ட வசமாக இந்தியா சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை.

இரவு 7 மணி, விமானம், அமிர்தசரஸ் விமான நிலையத்தில் தரை இறங்கியதும்,விமானத்தில் எரிபொருள் நிரப்ப வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது, துரதிர்ஷ்டவசமாக, அமிர்தசரஸ்சில் ஹைஜாக்கைக் கையாள்வதில் பயிற்சி அல்லது அனுபவம் பெற்றவர்கள் யாரும் இல்லை. அதே நேரத்தில் அமிர்தசரஸ் விமான ஊழியர்கள் டெல்லியில் இருந்து முதல் அறிவுறுத்தலைப் பெற்றனர், அது முடிந்தவரை எரிபொருள் நிரப்புவதை தாமதப்படுத்தவும், எந்த விலை கொடுத்தாவது விமானம் புறப்படாமல் தடுக்கவும், மேலும் பஞ்சாப் காவல்துறை கடத்தல்காரர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும் பஞ்சாப் காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டது.

இந்திய கமாண்டோக்கள் வரும் வரை காத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர், ஆனால் கமாண்டோக்கள் ஐநூறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள டெல்லியில் இருந்து வர வேண்டும். பத்து நிமிடங்கள் ஆனது. பதினைந்து நிமிடங்கள் ஆனது ஆனால் எரிபொருள் நிரப்பும் பணி தொடங்கப்படவில்லை. காலதாமதம் ஆவதை உணர்ந்த தீவிரவாதிகள் கேப்டனை மிரட்ட அவர் A.T.சியுடன் நான்கு முறை தொடர்பு கொண்டு, கடத்தல்காரர்கள் துப்பாக்கிகளுடன் பணயக்கைதிகளைக் கொல்லத் தொடங்கியதாகவும் கூடுதல் இறப்புகளைத் தடுக்க விமானத்திற்கு விரைவாக எரிபொருள் நிரப்புமாறு கேட்டுக் கொண்டார், நேரம் போக போக, விமானம் இந்திய எல்லைக்குள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் தங்களுக்கு ஆபத்து அதிகம் என உணர்ந்த தீவிரவாதிகள் கோபமும் பதட்டமும் அடைந்தனர்.

நழுவவிட்ட வாய்ப்பு:

இரவு 7:45 மணிக்கு, delhiயின் the Crisis Management Group ஒரு திட்டத்தை உருவாக்கி பஞ்சாப் காவல்துறைக்கு ஒரு உத்தரவு பிறப்பித்தது, அதன் படி விமானத்திற்கு எரிபொருள் நிரப்பும் எரிபொருள் tankeril பஞ்சாப் காவல்துறையின் சில அதிகாரிகள் மறைந்து சென்று விமானத்தின் டயர்களை பஞ்சர் செய்ய அறிவுறுத்தப்பட்டது, உள்ளூர் கமாண்டோக்களுடன் எரிபொருள் டிரக் வேகமாக விமானத்தை நெருங்கத் தொடங்குகிறது. டிரக் வேகமாக செல்வது கடத்தல்காரர்களை சந்தேகப்பட வைக்கும் என நினைத்த ATC, ஓட்டுனரை வேகத்தை குறைக்க அறிவுறுத்துகின்றனர். இந்த உத்தரவு டிரைவரை குழப்பி, அவர் திடீரென டிரக்கை ஓடுபாதையின் நடுவில் நிறுத்தினார்.

டிரக்கின் இந்த திடீர் நிறுத்தம் கடத்தல்காரர்களை சந்தேகப்பட வைத்தது, இந்தியர்கள் விமானத்தை தாக்க வருகின்றனர் என சந்தேகமடைந்த தீவிரவாதக் குழுத் தலைவன், விமானத்தை எடுக்குமாறு பைலட்டை மிரட்டுகிறான். ஆனால், பைலட் மறுக்கிறார், கோபமடைந்த தீவிரவாதிகளில் ஒருவன் பிசினஸ் கிளாஸ்யில், நேபாளத்துக்கு தேனிலவுக்குத் சென்று திரும்பிய 25 வயது இளைஞன் ரூபின் கத்யாலைக் கத்தியால் குத்தினான். மேலும் காக்பிட்டில், கடத்தல்கார தலைவன் கவுண்ட்டவுனைத் தொடங்குகிறான், விமானம், 10 எண்ணும் நேரத்திற்குள் புறப்படாவிட்டால் அவர்கள் மேலும் பலரைக் கொல்வார்கள் என மிரட்டுகிறான். கேப்டனுக்கு வேறு வழியில்லை. விமானம் டேக் ஆப் செய்யப்படுகிறது, கடைசியாக கேப்டன் புறப்படும்போது A.T.Cயிடம் நாங்கள் அனைவரும் இறந்து கொண்டிருக்கிறோம் என நம்பிக்கை இழந்து கூறுகிறார், விமானம் இந்திய மண்ணில் இருந்து புறப்பட்டது, தனது சொந்த மண்ணில் விமானத்தில் இருந்தவர்களை காப்பாற்றும் ஒரு சிறந்த வாய்ப்பை இந்தியா இழந்தது.

விமானம் புறப்பட்டதும் சிறிது நேரத்தில் டெல்லியில் இருந்து NSG கமாண்டோக்கள் அமிர்தசரஸ் வந்தடைந்தனர், NSG கமாண்டோக்களுக்கு நடவடிக்கையும் எடுக்க எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. மற்றும் மிக முக்கியமாக, விமானத்திற்கு எரிபொருள் இன்னும் நிரப்பப்படவில்லை. விமானம் கடத்தப்பட்ட தகவல் அன்றைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு இரவு 7:00 மணி வரை தெரிவிக்கப்படவில்லை.

இந்தியா விமானம் பாகிஸ்தானில் தரை இறங்க அனுமதி மறுப்பு:

அமிர்தசரஸில் இருந்து லாகூர் வெறும் 50 கிலோ மீட்டர் தான், பாகிஸ்தான் வான்வெளி ஏற்கனவே மூடப்பட்டிருந்தாலும், விமானம் பாகிஸ்தான் எல்லையை கடந்து பறந்துகொண்டிருந்தது,கேப்டன் lahore விமான நிலையத்தில் தரையிறங்க கோரிய அனுமதி மீண்டும் மறுக்கப்படுகிறது. தங்கள் பிராந்தியத்தில் தொடர்ந்து பறந்தால் விமானத்தை சுட்டுவிடுவதாக பாகிஸ்தான் மிரட்டுகிறது, ஆனால் விமான குழுவினர் இந்த அச்சுறுத்தலை புறக்கணிக்கிறார்கள், விமானம் தரையிறங்குவதைத் தடுக்க, விமான நிலைய ஓடு பாதை விளக்குகளும் மற்றும் அனைத்து வழிசெலுத்தல் கருவிகளும் பாகிஸ்தான் அணைக்கிறது. அதனால் captain விமானத்தை தரையிறக்க நினைத்தாலும், அது மிகவும் கடினமாக இருக்கும். கேப்டன் தொடர்ந்து கெஞ்சுகிறார் அனுமதிக்காக, விமானத்தில் இன்னும் ஐந்து நிமிட எரிபொருள் மட்டுமே மீதமுள்ளது என எச்சரிக்கை ஒலிக்கத் தொடங்குகிறது.

பாகிஸ்தானில் தரை இறங்கிய இந்தியா விமானம்:

lahore விமான நிலையம் இந்தியா விமானிகளுக்கு புதிது,இந்த நிலையில்,கீளே விளக்குகளின் வரிசையைப் பார்க்கிறார்,அது விமான நிலையம் என நினைத்து விமானத்தை அதை நோக்கி இறங்கத் தொடங்குகிறார்.அவர்கள் நெருங்க நெருங்க, அங்கு கார்கள், பைக்குகள் மற்றும் சாலையில் மக்களைப் பார்க்கிறார்,ஆம் அது ஒரு நெடுஞ்சாலை.மயிரிழையில் விமானம் நெடுஞ்சாலையில் இறங்குவது தடுக்கப்பட்டது,அதிர்ச்சிக்குள்ளான பாகிஸ்தான் விமானத்தை தரையிறக்க அனுமதிக்க முடிவு செய்தது,வழிசெலுத்தல் கருவிகள் மற்றும் ஓடுபாதை விளக்குகள் மீண்டும் இயக்கப்பட்டன.இரவு எட்டு ஏழுக்கு இந்திய விமானம் பாகிஸ்தான் மண்ணில் தரையிறங்கியது.

கடத்தல்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய High commisioner ஜி பார்த்தசாரதியை அனுப்ப இந்தியா, பாகிஸ்தான் விமான நிலைய அதிகாரிகளிடம் தெரிவித்தது, குறைந்த பட்சம் குழந்தைகள், பெண் பயணிகள் மற்றும் காயமடைந்த பயணிகளை விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டனர், ஆனால் தீவிரவாதிகள் மறுத்துவிட்டனர்,3 மணி நேரம் கழித்து, எரிபொருள் நிரப்பப்பட்ட இந்திய விமானம் IC814 விடை தெரியாத இரவின் இருளில் மீண்டும் பறக்க தொடங்கியது.

கொலை செய்யப்பட்ட இந்தியா விமானி:

அதே நேரத்தில் விமானத்தின் உள், தீவிரவாதிகளால் காயமடைந்த ரூபன் கத்தியால் ரத்த வெள்ளத்தில் இறந்தார், அவர் இறந்தது இறுதி வரை அவர் மனைவிக்கு தெரியாது.லாகூரிலிருந்து புறப்பட்டதும், ஆப்கானிஸ்தானின் காபூலுக்குப் போக நினைத்தனர். இருப்பினும், அந்த நேரத்தில் காபூல் விமான நிலையத்தில் இரவு தரையிறங்கும் வசதிகள் எதுவும் இல்லாததால், கடத்தல்காரர்கள் ஓமானில் தரையிறங்க முயன்றனர், ஆனால் ஓமான் அதிகாரிகள் அவர்களின் கோரிக்கையை நிராகரித்தனர், விமானம் துபாய் இன்டர்நேஷனல் ஏர்போர்ட்ல் இறங்க எடுத்த முயற்சியும் நிராகரிக்கப்பட்டது, இறுதியில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 3 மணிக்கு விமானம் துபாய்யின் அல் மின்ஹாத் விமான தளத்தில் தரையிறங்க அனுமதிக்கப்பட்டது. இடைவிடாத பேச்சுவார்த்தைக்குப் பிறகு, கடத்தல்காரர்கள் இறுதியாக 26 பயணிகளை விடுவித்தனர், ரூபன் கத்தியால்லின் உடலும் கொடுக்கப்பட்டது.

தீவிரவாதிகளை தாக்கி விமானத்தை விடுவிக்க இந்திய கமாண்டோக்களை அனுமதிக்குமாறு இந்தியா, ஐக்கிய அரபு அமீரகத்திடம் கோரிக்கை விடுத்தது, ஆனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தங்கள் மண்ணில் எந்த கமாண்டோ நடவடிக்கையையும் அனுமதிக்க முடியாது என மறுத்துவிட்டது.

கந்தஹார் விமானக் கடத்தல்:

விமானம் எரிபொருள் நிரப்பப்பட்டு மீண்டும் தனது பயணத்தை தொடங்கியது, கடத்தலின் இரண்டாவது நாளில் விமானம் ஆப்கானிஸ்தானின் காந்தஹார் விமான நிலையத்தில் ஓடுபாதையில் நின்றிருந்தது. அடுத்த ஆறு நாட்களுக்கு விமானமும், அதில் இருந்த பயணிகளும் அங்கேயே இருந்தனர். அடுத்து என்ன நடக்கும் என்பது பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது. அவர்களின் எதிர்காலம் என்ன? , உயிருடன் திரும்பி வருவார்களா என்பதும் தெரியாது.

இந்தியப் பாதுகாப்புப் படை ஆப்கானிஸ்தானுக்கு வர, தாலிபன் அரசு அனுமதிக்கவில்லை. பீரங்கிகளையும், ராக்கெட் லாஞ்சர்களையும் விமானத்தைச் சுற்றி நிறுத்தினார்கள் தாலிபன்கள்,கடத்தல்காரர்களுக்கு தலிபான் மற்றும் பாகிஸ்தான் ஆதரவு இருந்தது என இந்தியா நம்பியது, ஆயிரத்து தொள்ளாயிரத்து தொன்னுற்று ஒன்பதில், ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சி நடந்து கொண்டிருந்தது, அப்போதைய தாலிபன் அரசோடு இந்தியாவுக்கு நல்லுறவு இல்லாத காரணத்தால், மேலும் ஆப்கனில் இந்தியத் தூதரகம் கிடையாது. எனவே, பாகிஸ்தானிலுள்ள ஆப்கன் தூதரகத்தின் உதவியோடு டிசம்பர் 27 தேதியன்று கந்தஹார் சென்றது இந்தியப் பேச்சுவார்த்தைக் குழு.

இந்திய அரசுடன் பேச்சு வார்த்தை:

இருநூறு மில்லியன் அமெரிக்க டாலரை இந்திய அரசு தர வேண்டும். இந்தியச் சிறைச்சாலைகளிலிருக்கும் முப்பத்திஆறு பாகிஸ்தான் தீவிரவாதிகளை எந்த நிபந்தனையுமின்றி விடுவிக்க வேண்டும், ஜம்மு பகுதியில் இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்ட ஸஜத் ஆ கானி உடலைச் சகல மரியாதைகளுடன் எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை எனில் அனைத்துப்பயணிகளையும் கொன்றுவிடுவோம் என்றது தீவிரவாத குழு.

அப்போது ஆட்சியிலிருந்த வாஜ்பாய் தலைமையிலான பாரதிய ஜனதா அரசு, இந்தக் கோரிக்கைகளைக் கேட்டு ஆடிப்போனது,இந்தநிலையில், தீவிரவாதிகளோடு பேச்சுவார்த்தை நடத்திய இந்தியக் குழு. ஒரு கோரிக்கையையும் ஏற்க மாட்டோம் பயணிகளை விடுவியுங்கள் எனத் தொடர்ந்து விட்டுக்கொடுக்காமல் பேசியது இந்திய அரசு.

டிசம்பர் 26ஆம் தேதி, அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங், இந்த கடத்தல் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில், திடீரென ஒரு கும்பல் இடையூறு செய்தது. அவர்கள் விமானத்தில் பயணித்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள், அவர்கள் வெளியுறவுத் துறை அமைச்சரிடம் கடத்தல்காரர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் அதனால், அவர்களின் அன்புக்குரியவர்கள் பாதுகாப்பாக திரும்பி உயிருடன் வர முடியும் என கோரிக்கை விடுத்தனர். இதற்கிடையில் உணவு, தண்ணீரில்லாமல் விமானத்துக்குள் அவதிப்பட்டனர் பயணிகள். கழிவறைகளும் பயன்படுத்த முடியாத அளவுக்கு மோசமடைந்தன. வியர்வையில் பயணிகள் செய்வதறியாமல் தவித்துக்கொண்டிருந்தனர். எப்படியாவது பயணிகளை விடுவியுங்கள் எனப் பயணிகளின் உறவினர்கள், மனிதநேய ஆர்வலர்கள் இந்திய அரசிடம் வலியுறுத்திக்கொண்டேயிருந்தனர்

பயணிகள் விடுவிப்பு:

4 நாள்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, மௌலானா மசூத் அசார் அகமது உமர் சயீத் ஷேக் மற்றும் முஸ்டாக் அகமது சர்கார், இந்த மூன்று தீவிரவாதிகளையும் விடுவிக்க ஒப்புக்கொண்டது இந்திய அரசு, இந்த மூன்று தீவிரவாதிகளும் விமானத்தில் காந்தஹார் கொண்டு செல்லப்பட்டனர், விமானத்தில் அவர்களுடன் அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கும் சென்றார், டிசம்பர் முப்பத்தி ஒன்று ஆயிரத்து தொள்ளாயிரத்து தொன்னுற்று ஒன்பது அன்று, கடத்தல்காரர்கள் அனைத்து பயணிகளையும் விடுவித்தனர். கடத்தல்காரர்களை தலிபான்கள் கைது செய்வார்கள் என்று இந்தியா எதிர்பார்த்தது. ஆனால் அது நடக்கவில்லை. ஆனால் அவர்கள் காந்தஹாரிலிருந்து சுதந்திர மனிதர்களாகத் தப்பிச் சென்றார்கள்.

அதன் பின் நடந்தது:

Maulana Masood Azhar:

இரண்டாயிரம் ஆண்டில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை நிறுவியவர், ரெண்டாயிரத்தி ஒன்றாம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத் தாக்குதல், ரெண்டாயிரத்து எட்டாம் ஆண்டு மும்பை தாக்குதல் மற்றும் ரெண்டாயிரத்து பத்தொன்பதாம் ஆண்டு புல்வாமா தாக்குதலில் இந்த அமைப்பு ஈடுபட்டது.

Ahmed Omar Saeed Sheikh:

டேனியல் பெர்லின் என்ற அமெரிக்கா journalist கடத்தல் மற்றும் கொலைக்காக பாகிஸ்தான் அதிகாரிகளால் ரெண்டாயிரத்து இரண்டில் கைது செய்யப்பட்டார்.

Mushtaq Ahmed Zargar:

ஜம்மு and காஷ்மீரில் இஸ்லாமிய போராளிகளுக்கு பயிற்சி அளிப்பதில் விடுதலையானதில் இருந்து தீவிர பங்கு வகித்தவர்

Nepal:

விமானக் கடத்தலுக்குப் பிறகு இந்தியன் ஏர்லைன்ஸ் காத்மாண்டுவுக்குச் செல்லும் அனைத்து விமானங்களையும் நிறுத்தியது. பல மாதங்களுக்கு பின் நேபாளம் இந்தியாவிடம் பாதுகாப்பை உறுதியளித்ததைத் தொடர்ந்து விமான போக்குவரத்துக்கு மீண்டும் தொடங்கியது

இந்த விமான கடத்தலின் விளைவாக இந்திய அரசாங்கம் Anti−Hijack policyயை ரெண்டாயிரத்து ஐந்தில் செயல்படுத்தியது மற்றும் அமைச்சரவைக் குழுவின் ஒப்புதலையும் பெற்றது.

கந்தஹார் விமானக் கடத்தல் பற்றிய இந்த Article உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம், மேலும் உங்கள் ஆதரவை வேண்டுகிறோம்.

அடுத்த பதிவு, கீழே Link கொடுக்கப்பட்டுள்ளது.

John F. கென்னடியின் மர்மமான படுகொலை

இத்துடன் எங்கள் youtube channel link கொடுக்கப்பட்டுள்ளது, அதை பார்த்து உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.

 

 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply