இன்று Artificial Intelligence (AI) அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்து விட்டது, இந்த பதிவில் AI பற்றியும் அதனால் கிடைக்கும் நன்மை தீமைகள் பற்றி விரிவாக பார்க்கலாம்.
கணினியின் பரிணாம வளர்ச்சி:
இன்றைய மனித வாழ்வின் அனைத்து துறைகளிலும் கணினியின் ஆதிக்கத்தை நாம் காணலாம்.கணினி இல்லாத ஒரு வாழ்வை நாம் நினைத்து கூட பார்க்க முடியாத அளவு கணினி நம் வாழ்வுடன் இணைந்து விட்டது,நியூட்டன் புவியீர்ப்பு விசையைக் கண்டறிந்தது போல ஒரு திடீர் நிகழ்வில் கணினி கண்டறியப்படவில்லை,ஆனால் பலநூறு ஆண்டுகள் பரிணாம வளர்ச்சியில் உருவானதே கணினி.
ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் உருவாக்கப்பட்ட அபாகஸ் கருவியே உலகின் முதல் கணினி,அதன் பின்பு,பிலைசு பாஸ்கல் ஆயிரத்து அறுநூற்று நாற்பத்தி இரண்டாம் ஆண்டில் முதன்முதலில் பாஸ்கல் கணிப்பான் எனப்படும் இயந்திர கணிப்பானை கண்டுபிடித்தார்,மேலும் நவீன கணினியின் தந்தை என அழைக்கப்படும், இங்கிலாந்து நாட்டுக் கணிதப் பேராசிரியர் சார்ல்ஸ் பாபேஜ் கணிதத்தில்,Differential Equationsக்கு தீர்வு தரக் கூடிய Difference Engine என்னும் எந்திரத்தை ஆயிரத்து எண்ணூற்று முப்பத்தி எழில் உருவாக்கினார்.
1940களில் பல வகை சக்தி வாய்ந்த கணிப்பான்கள் வலம் வரத் தொடங்கியபோது கணினி என்ற சொல் வழக்கத்தில் வந்தது,1946ல் அறிமுகப்படுத்தப்பட்ட ENIAC என்ற கணினிதான் உலகின் முதல் பொதுப் பயன்பாட்டுக் கணினி,அது பிரம்மாண்டமான ஒரு வடிவத்தை கொண்டது,அதன் எடை 27,000 கிலோகிராமுக்கு அதிகமாக,ஒரு பெரிய அறையையே நிரப்பக்கூடியதாக இருந்தது,இதில் சுமார் 18,000 vacuum tubes பயன்படுத்தப்பட்டிருந்தது,1981ல் கண்டுபிடிக்கப்பட்ட personal computer,27KG எடை உடையது.அந்தத் தொடக்க காலத்துக் கணினிகளுடன் ஒப்பிடும்போது இன்றைய கணினிகள் பல்லாயிரம் மடங்கு வேகமாக இயங்குவது மட்டுமல்ல,அவற்றை மேஜை மேல்,மடி மேல்,அல்லது சட்டைப் பைக்குள் கூட வைக்கலாம்.
AI யுகம்:
இனி பார்க்கப்போவது புது யுகமான Artificial Intelligenceன் புரட்சி,உண்மையில் செயற்கை நுண்ணறிவு என்ற கருத்து கணிப்பொறிகளுக்கு முன்பே உயிர் பெற்றது,1927ல் உருவாகிய Metropolis என்ற German படத்தில் எந்திர மனிதன் காட்டப்பட்டுள்ளது,20ஆம் நூற்றாண்டு ஆரம்பத்திலே artificial Intelligence பற்றிய பல ஆராச்சிகள் நடந்து கொண்டிருந்தது,ஆனால் 1990களின் பிற்பகுதியில் இருந்து AI ஆராய்ச்சியில் மறுமலர்ச்சி ஏற்பட்டது,இணையத்தின் வருகையும் நவீன software மற்றும் hardwareயின் உருவாக்கமும்,AIயின் வளர்ச்சிக்குத் தேவையான ஆதாரங்களை வழங்கின.இன்று,AI எங்கும் பரவியுள்ளது,self driving கார்,மருத்துவ நோயறிதல்கள்,சினிமா மற்றும் artworkல் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
அதன் அடுத்த நிலையாக openAIன் chatGPT,googleன் ஜெமினி,microsoftன் copilot மற்றும் பல செயற்கை நுண்ணறிவு கருவிகள் இணையத்தில் இலவசமாக கிடைக்கிறது,OpenAI என்ற company ChatGPTயின் முதல் டெமோவை நவம்பர் 30,2022 அன்று வெளியிட்டது,மேலும் chatGPTயால் என்ன செய்ய முடியும் என்பதற்கான உதாரணங்களைப் userக்கு பகிர்ந்ததால்,இது சமூக ஊடகங்களில் விரைவாக வைரலானது.ஐந்து நாட்களுக்குள்,chatGPT ஒரு மில்லியனுக்கும் அதிகமான பயனர்களை ஈர்த்தது,இது வரை கூகுளை பயன்படுத்தியவர்கள் chatGPTயை பயன்படுத்த ஆரம்பித்தனர்,youtube வீடியோ,இன்ஸ்டாகிராம் ரீல்களை இணையத்தில் கிடைக்கும் AI Tools பயன்படுத்தி எளிதாக உருவாக்க முடியும்,அப்படி உருவாக்கப்பட்ட இந்த videoக்களும் நம்ப முடியாத அளவுக்கு தத்ரூபமாக இருக்கும்.
எதிர்காலத்தில் AI எப்படி இருக்கும் என பார்க்கலாம்?
AIயின் அதிவேகமான வளர்ச்சியால் அடுத்த 50 ஆண்டுகளுக்கு பிறகு மனிதன் வேலை செய்ய வேண்டிய அவசியம் இருக்காது,எல்லாம் AI செய்து விடும்,ஆம்,அது தான் அதிவேக மாற்றம்,அது AI மூலம் சாத்தியமாகும்,கடந்த 3 நூற்றாண்டுகளில் மனிதன் அடைந்த அறிவியல் முன்னேற்றத்தை அடுத்த 50 ஆண்டுகளில் செய்து விடுவான்,இன்று நாம் அதிகமாக பயன்படுத்தும் மொபைல் போன் காணாமல் போய்விடும்,கணினியின் உருவம் மாறி விடும், அவைகள் நம் கண்களில் பரவி நிறுவப்படும், இன்றைய ஆட்டோமொபைல் துறையை விட ரோபாட்டிக்ஸ் தொழில் பெரியதாக இருக்கும்,ஆம் வீட்டிற்கு முன்பு நிற்கும் வாகனங்களை போல் பல ரோபோட் வீட்டில் நிற்கும் காலம் வெகு விரைவில் வரும்.
AIயால் கிடைக்கும் நன்மைகள்:
ஒன்று, இன்று AI ஒரு search engine அல்லது,voice assistants ஆகவோ தான் நம்மிடையே இருக்கிறது, ஆனால் எதிர்காலத்தில் AIயுடன் ஒரு தோழனைப்போல் அரட்டை அடிக்க முடியும்,நம்முடன் விளையாட முடியும்,மற்றும் எந்த திரைப்படத்திற்கு போகலாம், எந்த ஊருக்கு சுற்றுலா போகலாம் போன்ற தனிப்பட்ட பரிந்துரைகளைப் பெறவும் முடியும்,நீங்கள் கேட்க விரும்பும்,கவிதைகள்,கட்டுரைகள் மற்றும் புத்தகங்களை கூட சில நிமிடங்களில் தனது திறமையால் உருவாக்கி தந்து விடும்.
இரண்டு, hyper-personalized education,தற்போது அனைவருக்கும் ஒரே விதமாக தான் கல்வி கற்பிக்கப்படுகிறது,ஆனால் AI மூலம் ஒரு மாணவரின் பலம் மற்றும் பலவீனம் அறிந்து அவர் எந்த subjectல் திறமையாக உள்ளார் என ஆராய்ந்து அவருக்கென வடிவமைக்கப்பட்ட பாடத்தை படித்து அதில் அவர் புலமையும் சிறப்பும் அடைய முடியும்.
மூன்று, ஒரு hyper connected smart city,அதாவது ஒரு சிட்டியின் மக்கள்,அவர்களின் போன்,கார் அனைத்தும் AIயுடன் இணைக்கப்பட்டிருக்கும்,அதன் மூலம் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ட்ராபிக் ஜாம் அதிகமாவதை தடுக்க முடியும்,வாகனங்களை சரியான பாதையில் சரியான நேரத்தில் மாற்றி விட முடியும்.
நான்கு, மருத்துவ துறையில் ஒவ்வொரு நோயாளிகளையும் துல்லியமாக பரிசோதிக்க முடியும், அவர்களுக்கு எந்த நோயும் ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிறந்த மருந்து குடுக்க முடியும்,cancer போன்ற கொடிய நோய்களை எளிதாக குணப்படுத்த முடியும்,தனிமையில் இருக்கும் போது heart அட்டாக் வந்தால்,உடலுடன் இணைக்க பட்டிருக்கும் AI,அந்த மனிதர் எங்கு இருக்கிறார் அவருக்கு என்ன problem என்பதை மருத்துவருக்கு அனுப்பி சரியான மருத்துவ உதவியை உடனே பெற்றுத்தரும்.
ஐந்து, அனைத்து வேலைகளுக்கும் ரோபோட்களை பயன்படுத்த முடியும்,வீட்டுவேலை,விவசாயம்,lawyer, docter போன்ற வேலைகளுக்கு கூட ரோபோட்டுகளை பயன்படுத்த முடியும்,மட்டுமல்ல நிலச்சரிவு,காட்டு தீ, பெரும் வெள்ளம்,விண்வெளி பயணம் போன்ற ஆபத்தான இடங்களில் மனிதர்களை காப்பாற்ற பயன்படுத்த முடியும்,இன்று மனிதனால் செய்யப்படும் வேலைகளில் பாதி வேலையை ரோபோட் செய்யும், இன்றைய ஆட்டோமொபைல் துறையை விட ரோபாட்டிக்ஸ் தொழில் பெரியதாக இருக்கும்.
ஆறு, கழிப்பறையில் ஒரு சிப் பொருத்தப்படுகிறது,அது உடல் திரவங்களை பகுப்பாய்வு செய்து அதில் cancer செல்கள் கண்டறியப்பட்டால்,cancer ஆரம்ப நிலையிலேயே குணப்படுத்தமுடியும்,அது இப்போது உள்ளது போல் ஒரு மோசமான கொடிய நோயாக இருக்காது.
AIயால் எற்படும் தீமைகளை இப்போது பார்க்கலாம்:
ஒன்று, உண்மை எது,பொய் எது என நம்மால் பிரித்தறிய முடியாமல் போகும்,அதை deep fake என்பார்கள்,இந்த வீடியோவை பாருங்கள், அனைத்தும் உண்மையானது போல் தெரியும் ஆனால் இதில் எதுவும் உண்மை அல்ல,அனைத்தும் AIயால் செய்யப்பட்டது,இது போல் போலியான ஆடியோ, வீடியோ அல்லது படங்களை உருவாக்க முடியும்,இதை பயன்படுத்தி தலைவர்களை அல்லது தனிநபரை எளிதாக மோசமானவர்களாக அல்லது நல்லவர்களாக காட்ட முடியும்,விரைவில் AIஐ பயன்படுத்தி movies கூட எடுக்க முடியும்,நமக்கு கேமரா,நடிகர்,டைரக்டர் யாரும் தேவை இல்லை.
இரண்டு, AIஐ பற்றியுள்ள மிகவும் பரவலான கவலை, பரவலான வேலை இழப்பு மற்றும் ஆட்டோமேஷனுக்கான சாத்தியமாகும்,AI தொழில்நுட்பங்கள் மனிதர்களை விட மிகவும் திறமையாக வழக்கமான மற்றும் மீண்டும் மீண்டும் செய்யும் பணிகளைச் செய்வதில் சிறந்து விளங்குகின்றன,மெக்கின்சி குளோபல் இன்ஸ்டிடியூட் நடத்திய ஆய்வின்படி,டிஜிட்டல் மயமாக்கல், ரோபாட்டிக்ஸ் மற்றும் AI முன்னேற்றங்கள் காரணமாக 2030ஆம் ஆண்டுக்குள்,உலகளவில் குறைந்தது 14% பணியாளர்கள் தங்கள் வேலையை இழக்க வேண்டியிருக்கும்,அதே நேரத்தில் பல மில்லியன் புதிய வேலை வாய்ப்புகளை இந்த AI உருவாக்கும்,2030ல் உலகின் பொருளாதாரம் 7% percentage அதிகரித்து 15.7 டிரில்லியன் அமெரிக்கன் டாலராக இருக்கும்.
மேலும் AI பொருளாதார சமத்துவமின்மையை அதிகரிக்கும்,AI தொழில்நுட்பத்தை சொந்தமாக வைத்திருப்பவர்களுக்கும் கட்டுப்படுத்துபவர்களுக்கும் அதிகமான பொருளாதார வளர்ச்சி இருக்கும்.இது சமூகத்தில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையில் பெரிய இடைவெளியை ஏற்படுத்தும்.
மூன்று, இந்த AI,உலகளாவிய AI ஆயுதப் போட்டியை அதிகரிக்கும்,சீனா AI சார்ந்த ஆயுதங்களை உருவாக்கினால் இந்தியாவும் அமெரிக்காவும் AI சார்ந்த ஆயுதங்களை உருவாக்க வேண்டும்,ரஷ்யா உருவாக்கினால் அதற்கு பதிலடியாக அமெரிக்கா உருவாக்க வேன்டும்,இதை தடுக்க முடியாது,இது ஒரு உலகளாவிய ஆயுதப் போட்டிஐ உருவாக்கும்,மேலும் இந்த தொழில்நுட்பப் போட்டியின் இறுதிப்புள்ளி மொத்த அழிவாக மாறும்,இதை நாம் தொழில்நுட்ப பனிப்போர் என கூறலாம்,மேலும் இந்த AI ஆயுதங்கள் தவறான கைகளில் சேரும் போது ஆபத்து அதிகரிக்கிறது,அதாவது இந்த AI ஆயுதங்கள் ஹிட்லர், முசோலினி போன்ற சர்வாதிகாரிகள் கையில் கிடைத்தால் என்ன ஆகும்?,நினைத்து கூட பார்க்க முடியாது.
நான்கு, AI நுண்ணறிவியல் மிக வேகமாக வளர்ச்சியடையும்,அது ஒரு நிலையில் மனிதனை போல் உணர்வுப்பூர்வமாகஉம் மனிதனை விட பல மடங்கு புத்திசாலியாகவும் மாறும்,அப்படி ஒரு artificial super intelligence உருவாக்கப்பட்டால் மனிதனால் அதை தடுக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ முடியாது,அது ஒரு Alien போல் செயல்படும்,அது பூமியை மட்டுமல்ல,சர்வத்தையும் கட்டுப்படுத்தும் சக்தி உடையதாக இருக்கும்.
AIயில் எத்தனை நிலைகள் உள்ளன, அது அந்த நிலைகளில் என்ன செய்யும்?
AIயில் 3 நிலைகள் உள்ளன, ஒன்று, Artificial Narrow AI, இது AIயின் முதல் நிலை அல்லது ஒரு weak AI என கூறலாம்,இது தான் மனிதனால் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது,இது ஒரு குறிப்பிட்ட பணியை மட்டுமே செய்ய பயன்படுத்தப்படுகிறது ஆனால் அந்த வேலையை மனிதனை விட மிக வேகமாகவும் சிறப்பாகவும் செய்யும்.IBMஆல் உருவாக்கப்பட்ட சூப்பர் கம்ப்யூட்டர் Deep blue 1996ல், 6 ஆட்டங்கள் கொண்ட செஸ் போட்டியில் அன்றய உலக சாம்பியனான கேரி காஸ்பரோவுடன் விளையாடியது, ஆனால் அது 2-4 என அந்த ஆட்டங்களில் தோல்வியடைந்தது,இது 1997ல் மேம்படுத்தப்பட்டு மீண்டும் காஸ்பரோவுடன் விளையாடி அவரை தோற்கடித்தது,அப்போது காஸ்பரோவ் ஒரு ஏலியனுடன் செஸ் விளையாடிய உணர்வு ஏற்பட்டதாக தெரிவித்தார்,டீப் ப்ளூவின் இந்த வெற்றி AI வரலாற்றில் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது,இந்த முதல் நிலை AIக்கான உதாரணங்களாக Siri,Google Search,அமேசானின் அலெக்சா,IBMயின் Watson மற்றும் chatGPTயை கூறலாம்.
இரண்டு,Artificial General Intelligence அல்லது AGI என்பது ஒரு மனிதனைப் போலவே,எந்தவொரு பிரச்சினையையும் புரிந்து அதை தீர்க்க அதன் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்துகிறது,இந்த AGIஐ நாம் மருத்துவ துறையில் பயன்படுத்தினால் அது ஒரு மனித மருத்துவரைப் போலவே நோயின் அறிகுறிகள், நோயாளியின் மருத்துவ வரலாறு மற்றும் ஆய்வக முடிவுகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம் அது நோய்களைக் கண்டறிந்து சரியான மருந்தை நோயாளிக்கு கொடுக்கும்,மனிதனை விட சிறப்பாக எல்லா துறைகளிலும் இதனால் செயல் பட முடியும், மனித இனம் தற்போது மற்ற உயிரினங்களை ஆதிக்கம் செலுத்துகிறது,ஆனால் AI மனிதகுலத்தை விஞ்சி, அதிபுத்திசாலித்தனமாக மாறினால்,மனிதர்களால் கட்டுப்படுத்துவது கடினமாகவோ அல்லது சாத்தியமற்றதாகவோ ஆகலாம்.
அதனால் தான் Googleல் வேலை செய்து அங்கிருந்து வெளியேறிய Geoffrey Hinton இவ்வாறு கூறுகிறார் AI நம்மை விட புத்திசாலித்தனமாக இருக்கக்கூடும்,மட்டுமல்ல அது மனித இனத்தை control செய்யலாம் அல்லது கூண்டோடு அளிக்கலாம்,ஆதலால் அதை எப்படி தடுக்க முடியும் என்பதை பற்றி நாம் இப்போது கவலைப்பட வேண்டும் என்கிறார்,டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் எலோன் மஸ்க்,மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில்நுட்பத் தலைவர்களுடன் இணைந்து எழுதிய கடிதத்தில் பெரிய AI சோதனைகளுக்கு இடைநிறுத்தம் செய்ய வலியுறுத்தினார்,இந்த தொழில்நுட்பம் சமூகத்திற்கும் மனிதகுலத்திற்கும் ஆழமான அபாயங்களை ஏற்படுத்தக்கூடும் என்று மேற்கோள் காட்டினார்கள்,ஆனால் அவர்கள் சுட்டிக்காட்டிய அந்த ஆபத்தான நிலையை நாம் இன்னும் அடையவில்லை.
மூன்று: Artificial Super Intelligence,இந்த நிலையில் AIஆல் செய்ய முடியாதது என எதுஉம் இல்லை,அதன் அறிவு மனிதனை எறும்பாகவும் ASIஐ யானை ஆகவும் கற்பனை செய்வது கொள்வது போல அபாரமாக இருக்கும்,மனிதர்களால் தீர்க்கப்படாத சிக்கலான காலநிலை மாற்றம்,கடும் நோய்கள்,தீர்க்கப்படாத மர்மங்கள் போன்ற எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும்,அதுவாகவே புதிய பலம் மற்றும் சக்தி வாய்ந்த AIகளை உருவாக்கும்,அப்போது அதை தடுக்கவோ அல்லது நிறுத்தவோ யாராலும் முடியாது,இங்கிருந்து அதன் கடைசி நிலையான Singularity எனும் நிலையை அடையும்,அதன் பின் வானமே எல்லை.
AI பற்றியும் அதனால் கிடைக்கும் நன்மை தீமைகள் பற்றிய இந்த Article உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம், மேலும் உங்கள் ஆதரவை வேண்டுகிறோம்.
அடுத்த பதிவு, கீழே Link கொடுக்கப்பட்டுள்ளது.
இத்துடன் எங்கள் youtube channel link கொடுக்கப்பட்டுள்ளது, அதை பார்த்து உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.