உலோகப் பறவை அல்லது விமானம், எப்போதும் மனிதனின் கண்டுபிடிப்பில் உன்னதமானது தான், ஆனால் சிறிய விமானம் முதல் பெரிய jumbo jetகள் வரை எந்த தடையங்களும் இல்லாமல் இந்த பூமியிலிருந்து மாயமாகி இருக்கின்றன, அப்படி மாயமாகி மனித ஆற்றலால் கண்டறிய முடியாத சில ஆச்சரிய நிகழ்வுகளை, உலகை அதிர்ச்சியடைய வைத்த Aviation Mysteries, இந்த பதிவில் காணலாம்.
பெர்முடா முக்கோணம், The Bermuda Triangle
பெர்முடா முக்கோணம் என்பது அட்லாண்டிக் பெரும் கடலின் ஒரு பகுதி ஆகும், இது புளோரிடா, பெர்முடா மற்றும் புவேர்ட்டோ ரிக்கோவின் எல்லையில் அமைந்துள்ளது, இந்த பகுதி எண்ணற்ற கப்பல்கள் மற்றும் விமானங்கள் மற்றும் அவற்றின் பணியாளர்களை விழுங்கியுள்ளது, சில தடயங்கள் கூட இல்லாமல்.
இந்த மர்மத்தை கொலம்பஸ் தனது diary குறிப்புகளில் எழுதி உள்ளார், அவர் தனது டைரியில் விசித்திரமான விளக்குகள், பெரிய தீ பந்துகள் கடலை நோக்கி விழுவதையும் மற்றும் திசைகாட்டி தவறாக திசையை காட்டுவதாகவும் எழுதி உள்ளார், கொலம்பஸ் மற்றும் அவருக்குப் பின் வந்த மற்ற மாலுமிகளும் இதை எழுதி உள்ளனர்.
கடந்த 500 ஆண்டுகளில், பெர்முடா முக்கோணத்தில் குறைந்தது 50 கப்பல்கள் மற்றும் 20 விமானங்கள் மறைந்துவிட்டன, பெரும்பாலானவை எந்த தடயமும் இல்லாமல் சிதைவுகள் இல்லை, உடல்கள் இல்லை, எதுவும் இல்லை. பலர் அமைதியான நீரில் காணாமல் போயுள்ளனர். 1945 ஆம் ஆண்டில், ஐந்து அமெரிக்க கடற்படை விமானங்கள் ஒரே இரவில் காணாமல் போனது, அவற்றைக் கண்டுபிடிக்க அனுப்பப்பட்ட மீட்பு விமானமும் காணாமல் போனது, வழக்கம் போல இந்த முறையும் எந்த தடயமும் கிடைக்கவில்லை.
இதற்கான உண்மையான காரணம் என்ன என யாராலும் தெளிவான பதிலை கூற முடியவில்லை, ஆனால் முரட்டு அலைகள், ராட்சத மீத்தேன் குமிழ்கள், கப்பல் உறிஞ்சும் சுழல்கள், வேற்று கிரக வாசிகள் மற்றும் விமானங்களைக் குழப்பும் dead zone போன்ற அறிவியல் கோட்பாடுகள் கூறப்படுகின்றன, உலக மக்களை குழப்ப வைத்த இந்த மர்மத்துக்கான தெளிவான பதில் இன்னும் தெரியாது. இது உலகை அதிர்ச்சியடைய வைத்த Aviation மிஸ்டரிஸ் ஆகும்
மர்ம மனிதன் D.B.Cooper
நவம்பர் 25, 1971, அன்று பிற்பகலில், தன்னை டான் கூப்பர் என்று அழைத்துக் கொள்ளும் ஒரு நபர், ஓரிகானின் போர்ட்லேண்டில் உள்ள நார்த்வெஸ்ட் ஓரியண்ட் ஏர்லைன்ஸின் கவுண்டரை அணுகினார். அவர் Flight நம்பர் 305ல், அமெரிக்காவின், வாஷிங்டனின் சியாட்டிலுக்குச் செல்லும் ஒரு வழி டிக்கெட்டை வாங்கினார், இங்கிருந்து தான் அமெரிக்காவின் F.B.I கடந்த ஐம்பது வருடமாக தேடிக்கொண்டிருக்கும் ஒரு கொள்ளையனின் கதை ஆரம்பிக்கிறது.
DB கூப்பர் ஒரு அமைதியான மனிதராக இருந்தார், அவர் நாப்பது வயது உடையவராக இருந்தார், அவர் கருப்பு டை மற்றும் வெள்ளை சட்டையுடன் ஒரு பெரிய business man போல் இருந்தார், விமானம் புறப்படக் காத்திருக்கும் போது போர்பன் மற்றும் சோடா போன்ற பானத்தை Order செய்தார், விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் அவர் ஒரு விமான பணி பெண்ணிடம் தனது பிரீஃப்கேஸில் வெடிகுண்டு இருப்பதைக் குறிக்கும் குறிப்பைப்கொடுத்தார், மேலும் தனக்கு நான்கு பாரசூட்டுகள் மற்றும் இரண்டு லட்சம் அமெரிக்க டாலர் வேண்டும் என அந்த குறிப்பில் எழுதி இருந்தது, அதிர்ச்சியடைந்த விமான பனிப்பெண் அந்த குறிப்பை விமானத்தின் கேப்டனிடம் கொடுத்தார், அடுத்த சில நிமிடங்களில் விமானம் சியாட்டிலில் தரையிறங்கியது, அவர் கேட்ட பணமும் பாரசூட்டுகழும் அவருக்கு கொடுக்கப்பட்டது, விமானம் மீண்டும் புறப்பட்டு, மெக்ஸிகோ நோக்கி பறக்க ஆரம்பித்தது, விமானம் சியாட்டிலுக்கும் ரெனோவுக்கும் இடையில் பறந்து கொண்டிருக்கும் போது, இரவு எட்டு மணிக்குப் பிறகு
அவர் திடீரென நம்பமுடியாத ஒரு காரியத்தை செய்தார், அது பாரசூட் மற்றும் பணத்துடன் விமானத்தின் பின்பகுதியில் உள்ள ஏணி படிகளில் இருந்து தரையில் குதித்தார்.
அடுத்த சில மணி நேரத்தில், விமானம் பாதுகாப்பாக தரை இறங்கியது, ஆனால் கூப்பர் அந்த இரவில் காணாமல் போனார், இன்றுவரை அவர் என்ன ஆனார் என்பது மர்மமாகவே உள்ளது.அமெரிக்காவின் F.B.I விரிவான விசாரணையை உடனடியாகத் தொடங்கியது. நூற்றுக்கணக்கான நபர்களைஐ விசாரணை செய்தார்கள், அடுத்த ஐம்பது வருடம் வலை விரித்து தேடினார்கள், DB Cooper யார் என்று கடைசி வரை கண்டறியமுடியவில்லை, அவருக்கு என்ன ஆனது, எங்கு போனார் என்பதும் தெரியாது, இறுதியில் இரண்டாயிரத்து பதினாறில் இந்த வழக்கு மூடப்பட்டது.
Malaysian Airlines Flight 370
மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் M.H 370, கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து மார்ச் 8, 2014 அன்று மதியம் 12 : 41க்கு புறப்பட்டு, உள்ளூர் நேரப்படி காலை 6 : 30 மணிக்கு பெய்ஜிங் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைய வேண்டும். ஆனால் அடுத்து நடந்த சம்பவங்கள் உலகத்தையே குழப்பத்திலும் அதிச்சிக்கும் உள்ளாகியது.
விமான குழுவினரிடமிருந்து கடைசியாக குரல் தொடர்பு 1:19 AM இல் ஏற்பட்டது, அதிகாலை 1:21 மணிக்கு விமானம் தென்சீனக் கடல் வழியாக வியட்நாமிய வான்வெளிக்குள் நுழையவிருந்த நேரத்தில், விமானத்தின் டிரான்ஸ்பாண்டர், விமானத்தில் இருந்த யாரோ ஒருவரால் திட்டமிட்டு switch off செய்யப்பட்டுள்ளது, விமானம் வியட்நாமிய வான்வெளிக்குள் நுழையும் நேரத்தில் வியட்நாமிய Air Traffic Controlவுடன் தொடர்பு கொண்டிருக்க வேண்டும் ஆனால், தொடர்பு கொள்ளாமல் விமானத்தின் டிரான்ஸ்பாண்டர் அணைக்கப்பட்ட சிறிது நேரத்தில் மேற்கு நோக்கி திரும்பியது, மணிக்கணக்கில் பறந்து மறைந்து போனது.
இந்த விமானம் காணாமல் போனபோது, தென் சீனக் கடல் மற்றும் தெற்கு இந்தியப் பெருங்கடலைத் தேடுவதற்காக டஜன் கணக்கான கப்பல்கள் மற்றும் விமானங்களை உள்ளடக்கிய சர்வதேச தேடல் முயற்சி ஒன்று திரட்டப்பட்டது. ஆஸ்திரேலியா, மலேசியா மற்றும் சீனா ஆகியவை சோனார், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் விமானங்கள் மூலம் சுமார் 46,000 சதுர மைல் பரப்பளவில் நீருக்கடியில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டன. ஆனால் இன்று வரை இந்த விமானம் ஏன் காணாமல் போனது, எப்படி போனது என்ற விவரம் யாருக்கும் தெரியாது. இது உலகை அதிர்ச்சியடைய வைத்த Aviation மிஸ்டரிஸ் ஆகும்
காணாமல் போன Amelia Earhart
அமெலியா ஏர்ஹார்ட், ஒரு திறமை வாய்ந்த பெண் விமானி மற்றும் அட்லாண்டிக் பெருங்கடலில் தனியாக பறந்த முதல் பெண், ஜூலை 2, 1937 அன்று உலகை சுற்றி வருவதற்கான முயற்சியின் போது காணாமல் போனார். அவரும் அவரது நேவிகேட்டரான ஃப்ரெட் நூனனும் இரட்டை எஞ்சின் கொண்ட விமானத்தில் பறந்து கொண்டிருந்தனர். அவர்கள் பயணத்தின் பெரும்பகுதியை முடித்திருந்தனர், சுமார் 7,000 மைல்கள் மட்டுமே மீதமுள்ளன, ஆனால் அவர்கள் மத்திய பசிபிக் பெருங்கடலில் ஹவ்லேண்ட் தீவுக்கு அருகில் தீடிரென காணாமல் போனார்கள்.
பசிபிக் பெருங்கடலில் உள்ள ஹவ்லேண்ட் தீவை நோக்கி அவர்கள் போன போது, தகவல் தொடர்பு சிக்கல்களை எதிர்கொண்டனர், அவர்களுக்கு உதவுவதற்காக தீவின் அருகே நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க கடலோர காவல்படையுடன் அவர்களுக்கு வானொலி தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை, அவர்களிடம் இருந்து கிடைத்த கடைசி தகவல் அவர்கள் பறந்து கொண்டிருக்கிறார்கள், ஆனால் தீவைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது தான், சிறிது நேரத்திற்குப் பிறகு, அனைத்து தகவல்தொடர்புகளும் நிறுத்தப்பட்டன, விமானம் மீண்டும் காணப்படவில்லை. அமெரிக்க கடற்படை மற்றும் கடலோர காவல்படையின் விரிவான தேடுதல் முயற்சிகள் செய்தும் அவர்களின் விமானத்தின் எந்த தடயத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
அவர்கள் காணாமல் போனது பற்றிய பல கோட்பாடுகள் பல ஆண்டுகளாக வெளிவந்துள்ளன, இதில் விமானம் கடலில் விழுந்தது , ஒரு பாலைவனமான தீவில் தரையிறங்கும் போது அழிந்து போவது அல்லது ஜப்பானியப் படைகளால் கைப்பற்றப்படுவது ஆகியவை அடங்கும். இருப்பினும், பல விசாரணைகள் மற்றும் தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து நடந்த போதிலும், அமெலியா ஏர்ஹார்ட்டின் காணாமல் போனது விமான வரலாற்றில் தீர்க்கப்படாத மிகப்பெரிய மர்மங்களில் ஒன்றாகத்தான் உள்ளது.
ஆஸ்திரேலியாவின் பேய் விமானம், The Ghost Plane of Australia
The Ghost Plane of Australia என்பது, அக்டோபர் 21, 1971, அன்று ஃபிரடெரிக் வாலண்டிச்சால் என்பவரால் இயக்கப்பட்ட செஸ்னா 182 L , ஸ்கைலேன், என்ற விமானம் மர்மமான முறையில் வானத்தில் அவர் விமான நிலைய ஊழியர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போதே காணாமல் போனதைக் குறிக்கிறது.
அக்டோபர் 21, 1971 அன்று மாலை, இருபது வயதான விமானி ஃபிரடெரிக் வாலண்டிச் மெல்போர்னில் உள்ள மூராபின் விமான நிலையத்திலிருந்து பாஸ் ஜலசந்தியில் உள்ள கிங் தீவுக்கு பயணத்தில் இருந்தார், மாலை ஏழு ஆறு மணிக்கு, வாலண்டிச் மெல்போர்ன் விமானச் சேவையைத் தொடர்புகொண்டு நாலாயிரத்து ஐநூறு அடி உயரத்தில் அடையாளம் தெரியாத விமானம் தன்னைப் பின்தொடர்வதாகப் புகாரளித்தார். அந்த அடையாளம் தெரியாத விமானம் நன்கு பிரகாசமான விளக்குகள் மற்றும் அதிக வேகத்தில் நகரும் தன்மை கொண்டது என்று விவரித்தார். அந்த விமானம் தனக்கு மேலே சுற்றுகிறது மற்றும் பச்சை விளக்குடன் பளபளப்பான உலோக மேற்பரப்புடன் உள்ளது என விவரித்துள்ளார்.
இறுதி செய்தி பரிமாற்றத்தில், அது வட்டமிடுகிறது, அது ஒரு விமானம் அல்ல என்று வாலண்டிச் கூறினார், அவரது ரேடியோ செய்தி பரிமாற்றம் ஒரு உலோக ஸ்கிராப்பிங் ஒலியுடன் திடீரென முடிந்தது, அவரது சத்தம் மீண்டும் கேட்கவில்லை.வான் மற்றும் கடல் இரண்டிலும் ஒரு விரிவான தேடுதல் வேட்டை நடந்தது ஆனால் அவரது விமானத்தின் எந்த ஒரு தடயத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் காணாமல் போனதைப் பற்றிய பல கோட்பாடுகள் இருந்தாலும், வேற்று கிரகவாசிகளால் ஏதேனும் அசம்பாவிதம் அவருக்கு நடந்து இருக்கலாம் என்பது தான் முக்கியமானது.
பல விசாரணைகள் மற்றும் தொடர்ச்சியான தேடல்கள் இருந்தபோதிலும், ஃபிரடெரிக் வாலண்டிச் காணாமல் போனது இன்றும் மர்மமாகவே உள்ளது, இந்த வழக்கு U.F.O மற்றும் மர்ம ஆர்வலர் வட்டங்களில், புத்தகங்கள், ஆவணப்படங்கள் மற்றும் விவாதங்களுக்கு ஊக்கமளித்தது, The Ghost Plane of ஆஸ்திரேலியா என்பது இன்றும் ஆஸ்திரேலியாவில் பிரபலமான ஒன்று. இது உலகை அதிர்ச்சியடைய வைத்த Aviation மிஸ்டரிஸ் ஆகும்
Flying Tiger Line Flight 739
ஃப்ளையிங் டைகர் லைன் ஃப்ளைட் 739 என்பது லாக்ஹீட் எல்-1049 சூப்பர் கான்ஸ்டலேஷன் ஆகும், இது மார்ச் 16, 1962 அன்று மேற்கு பசிபிக் பெருங்கடலில் பறந்து கொண்டிருந்த போது காணாமல் போனது. கலிபோர்னியாவில் உள்ள டிராவிஸ் விமானப்படை தளத்தில் இருந்து வியட்நாமின் சைகோனுக்கு, குவாமில் எரிபொருள் நிரப்பும் நிறுத்தத்துடன் 96 இராணுவ வீரர்கள் மற்றும் 11 பணியாளர்களை ஏற்றிச் செல்ல அமெரிக்க இராணுவத்தால் விமானம் வாடகைக்கு எடுக்கப்பட்டது. குவாமில் இருந்து புறப்பட்ட பிறகு, விமானம் தரைக் கட்டுப்பாட்டுடன் தொடர்பை இழந்தது மற்றும் எந்தவிதமான ஆபத்து சமிக்ஞையும் இல்லாமல் காணாமல் போனது. 144,000 சதுர மைல் பரப்பளவில் ஒரு பெரிய தேடுதல் நடவடிக்கை இருந்தபோதிலும், எந்த இடிபாடுகளோ அல்லது உயிர் பிழைத்தவர்களோ இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. காணாமல் போனதற்கான காரணம் தெரியவில்லை, இது மிகவும் நீடித்த விமான மர்மங்களில் ஒன்றாகும். ஆதாரங்களின் பற்றாக்குறை பல்வேறு கோட்பாடுகளுக்கு வழிவகுத்தது, ஆனால் எதுவும் உறுதியாக நிரூபிக்கப்படவில்லை.
இந்த Article உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம், மேலும் உங்கள் ஆதரவை வேண்டுகிறோம்.
அடுத்த பதிவு, கீழே Link கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள டாப் 5 Mysterious Temples
இத்துடன் எங்கள் youtube channel link கொடுக்கப்பட்டுள்ளது, அதை பார்த்து உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.