Cleopatra. அழகுக்கு அழகு சேர்ப்பவள், நைல் நதியின் ஈரத்தில் பூத்த அழகு மலர், அழகும் காதலும் என்றாலே நினைவில் வருபவள் அவள் தான், தனது அறிவால், ஆட்சி திறனால், ஆளுமையால் எகிப்து மக்களால் இறைவனாக பார்க்க பட்டவள். வாருங்கள் Cleopatra வின் கதையை பார்க்கலாம்.
எகிப்து ராணி Cleopatra:
கிறிஸ்து பிறப்பதற்கு சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பே எகிப்து நாடு டாலமி பரம்பரையால் ஆளப்பட்டு கொண்டிருந்தது, BC 332இல் , மாசிடோனியாவின் கிரேட் அலெக்சாண்டர் எகிப்தைக் கைப்பற்றினார், அலெக்சாண்டரின் மறைவுக்கு பிறகு அவரின் நம்பிக்கைக்குரிய தளபதிகளில் ஒருவர் Ptolemy one Soterஆல் எகிப்து ஆளப்பட்டது. உண்மையில் டாலமி பரம்பரையினர் கிரீஸ்சின் மாசிடோனியாவை சேர்ந்தவர்கள், அவர்கள் எகிப்தை பல நூற்றண்டுகளாக ஆண்டாலும் அவர்களுக்கு பண்டைய எகிப்திய மொழி தெரியாது ஆனால் அதற்கு விதி விலக்கு கிளியோபாட்ரா, டாலமி வம்சத்தில் பண்டைய எகிப்திய மொழி தெரிந்தவர் மட்டுமல்ல அவருக்கு எட்டு மொழி தெரியும், இதை தவிர கணிதம், வான இயல், அரசியல், மருத்துவம், பொருளாதாரத்தில் புலமை பெற்றவர், இவர் BC69இல் டாலமி12க்கு பிறந்தவர்.
BC51இல், கிளியோபாட்ராவின் திருமணமும் அரச பதவியேற்பும் ஒரே நேரத்தில் நடந்தது,டாலமி வம்சத்தின் மரபுப்படி அவரது சொந்த இளைய சகோதரனை திருமணம் செய்து கொண்டார், அப்போது கிளியோபாட்ராவிற்கு 18 வயதும்,அவரது சகோதரரும் கணவருமான டாலமி13க்கு 10 வயதும் தான் ஆகி இருந்தது,சம்பிரதாயப்படி கிளியோபட்ரா டாலமி13க்கு, அரச மகுடம் சூட்டுகிறார்,அதே போல் டாலமி13, கிளியோபாட்ராவுக்கும் அரச மகுடம் சூட்ட வேண்டும்,ஆனால் அவர் அதை செய்யவில்லை,அமைதியாக நின்று கொண்டிருந்தார்,அந்த மகுடத்தை கிளியோபாட்ரா, தானாகவே எடுத்து தனது தலையில் சூட்டி கொண்டார், அரச பதவிக்கு இருவருகிடையான மோதலும் இரத்தத்தை உறைய வைக்கும் சதியும் இங்கேயே ஆரம்பமாகிவிட்டது என்பதை இந்த நிகழ்வில் இருந்தே நாம் அறிந்து கொள்ளலாம், ஒரு உறையில் ஒரு வாழ் தான் இருக்க முடியும்,ஒரு காட்டுக்கு ஒரு ராஜா தான் இருக்க முடியும்,அப்படி இல்லை எனில் அது பெரும் போராட்டமாகத்தான் முடியும்.
மகளை கொலை செய்த தந்தை:
இந்த அதிகார போட்டி, இப்போது ஆரம்பமானது அல்ல, அவருடைய தந்தையார் டாலமி12க்கும் அவருடைய சொந்த மகள் Berenice4க்கும் இடையேயான பதவி போட்டியில் அவர் அலெக்ஸாண்ட்ரியாவில் இருந்து துரத்தப்பட்டு ரோமில் தஞ்சம் அடைந்த வரலாறும் உண்டு, அதன் பின் ரோமா படைகளின் துணையுடன் சொந்த மகளை கொலை செய்து மீண்டும் அரசனாக பதவி ஏற்றுக்கொண்டார், இப்படி அரச பதவிக்கு எதையும் செய்யும் ஒரு பரம்பரையில் அடுத்த அரசியாக தன்னுடைய சொந்த சகோதரனுடன் பதவியை பங்கிட்டு கொள்ளும் ஒரு இக்கட்டான நிலைமையில் இருந்தார், எகிப்தில் இப்படி சொந்த சகோதரனை அல்லது சகோதரியை திருமணம் செய்யும் பாரம்பரியம் கிடையாது ஆனால் டாலமி பரம்பரையில் மட்டும் தங்கள் அரச பதவி யாருக்கும் போய் விட கூடாது என்பதற்காக இப்படி சகோதர சகோதரியை திருமணம் செய்யலாம் என ஒரு மரபு உருவாக்கப்பட்டிருந்தது.
ரோம சாம்ராஜ்யத்தில் அரசியல் குழப்பம்:
கிளியோபாட்ரா, டாலமி13 இருவரும் இப்போது கணவன் மனைவி மட்டுமல்ல, எகிப்தின் ராஜாவும் ராணியும் ஆகும், எகிப்து தொடர்ந்து பல வருடங்களாக ரோம சாம்ராஜ்யத்திற்கு கப்பம் கட்டி கொண்டிருந்தார்கள், அதே நேரத்தில் ரோம சாம்ராஜ்யத்தில் அரசியல் சூறாவளி சுழன்று கொண்டிருந்தது, இந்தக் காலகட்டத்தில் பாம்பே, சிராசஸ், ஜூலியஸ் சீசர் ஆகிய மூவரும் ஓர் உடன்படிக்கை செய்துகொண்டு ரோமை ஆட்சிபுரிந்தனர், ரோம் வரலாற்றில் இது முதல் மூவராட்சி எனப்படுகிறது. பின்னர் Parthians உடன் நடந்த போர் ஒன்றில் சிராசஸ் கொல்லப்பட்டார். அதனால், அந்த மூவர் ஆட்சி அத்துடன் முடிவு பெற பாம்பேவுக்கும், சீசருக்கும் இடையில் அதிகாரப் போட்டி வலுத்தது, இத்தனைக்கும் சீசரின் மகளைத்தான் pompey திருமணம் செய்துள்ளார், சீசருக்கு மக்களின் ஆதரவும் pompeyக்கு செனட்டின் ஆதரவும் இருந்தது, சீசருக்கு பயந்த செனட்டும் pompeyயும் ஜூலியஸ் சீசரை தனது இராணுவத்தை கலைத்து விட்டு ரோம்க்கு தனியாக வர அறிவுறுத்தினர், ஆனான் சீசர் அதை மறுத்து let the die be cast என தனது ராணுவத்துடன் முன்னேற இருவருக்கும் கடுமையான யுத்தம் ஆரம்பித்தது.
எகிப்தில் BC48இல், கிளியோபாட்ராவிற்கும் டாலமி13க்கும் அதிகார போட்டி உச்சம் அடைய தொடங்கியது, டாலமி13 அவரது ஆலோசகர் போதினஸ் துணையுடன் கிளியோபாட்ராவை பதவி நீக்கம் செய்ய முயல இதை அறிந்த கிளியோபாட்ரா சிரியாவிற்கு தப்பிச்சென்றார், சிறிது காலத்துக்கு பின், ரோம சாம்ராஜ்யத்தில் பெரிய மாற்றங்கள் வந்திருந்தன, BC48இல், பார்சலஸ்சில் நடந்த போரில் Pompey, சீசரால் தோற்கடிக்கப்பட்டு எகிப்தில் தஞ்சமடைய அலெக்ஸாண்ட்ரியா நோக்கி வந்து கொண்டிருந்தார், அவரைத்தொடர்ந்து சீஸரும் Pompeyயை கைது செய்ய எகிப்தை நோக்கி வந்து கொண்டிருந்தார், ரோமா சாம்ராஜ்யத்தின் இரு பெரும் தூண்கள் எகிப்தின் அலெக்ஸாண்ட்ரியா நோக்கி வந்து கொண்டிருந்த, அதே நேரத்தில் சர்வ வல்லமை படைத்த சீஸரின் ஆதரவு தனக்கு கிடைத்தால் எளிதில் எகிப்தின் ராணியாக முடியும் என யூகித்த கிளியோபாட்ரா சிரியாவில் இருந்து எகிப்தில் உள்ள எந்த மனிதருக்கும் தெரியாமல் ரகசியமாக அலெக்ஸாண்ட்ரியா நோக்கி வந்து கொண்டிருந்தார், அவர் எகிப்து நோக்கி வருவது தெரிந்தால் அவருடைய சகோதரனும் கணவருமான டாலமி13 அவரை கைது செய்து கொலை செய்ய வாய்ப்பு உண்டு, எகிப்தின் தலைநகரான அலெக்ஸாண்ட்ரியாவின் அரசியல் களம் மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பித்தது.
ஜூலியஸ் சீசருடன் சந்திப்பு:
அதே நேரத்தில் எகிப்தின் அரசர் டாலமி13ம் அவரது அரசியல் ஆலோசகர் போத்தினுஸ்சும் இந்த நேரத்தை சரியாக பயன்படுத்தி தஞ்சம் தேடி வரும் pompayஐ கொலை செய்தால் சர்வ சக்தி வாய்ந்த ஜூலியஸ் சீசர் மகழ்ச்சி அடைவார் அதன் மூலம் எகிப்தில் அரசியல் குழப்பமின்றி தாங்கள் ஆட்சி செய்ய முடியும் என நினைத்தனர், ஆனால் அவர்கள் ஒரு விசயத்தை மறந்து விட்டனர், ரோமானியர்கள் தாங்கள் தான் உலகில் பெரிய வீரர்கள் என நினைப்பவர்கள், அவர்களில் ஒருவனை எகிப்தியர்கள் கொல்வதை அவமானமாக நினைப்பவர்கள் மட்டுமல்ல pompey, ஜூலியஸ் சீசரின் மருமகன், இந்த நேரத்தில் தான் pompey அலெக்ஸாண்ட்ரியா வந்தடைகிறார், தஞ்சம் அடைய வந்தவரை வஞ்சத்தால் கொலை செய்து அவரது தலையை கொய்து ஜூலியஸ் சீசர்க்கு காணிக்கை ஆக்குகிறார்கள், சீஸர் தங்கியிருந்த மாளிகையைச் சுற்றியும் டாலமியின் இராணுவம் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த இந்த இக்கட்டான நேரத்தில், கிளியோபாட்ரா யாருக்கும் தெரியாமல் அவளுடைய விசுவாசமான வேலைக்காரன் மூலம்,ஒரு கம்பளத்தில் சுருட்டப்பட்டு சீசரின் முன்னிலையில் கொண்டு சேர்க்கப்பட்டாள்.
சுருட்டப்பட்ட கம்பளத்தில் இருந்து வெளிவந்த கிளியோபாட்ராவை பார்த்த ஜூலியஸ் சீசர் மிகவும் ஆச்சரியப்பட்டார், அவளது துணிச்சலும், அவளது வஸீகரமான இளமையும், இனிமையான குரலும், ஆழ்ந்த அறிவாலும் அவர் ஈர்க்கப்பட்டார், சர்வ சக்தி நிரம்பிய ஐம்பத்தி இரண்டு வயது சீசரும், இருபத்தியொரு வயது நிரம்பிய எகிப்திய அழகி கிளியோபாட்ராஉம் காதலில் விழுந்தனர்,இருவருக்கும்மிடையேயான 31 வயது வித்தியாசம் அவர்களுக்கு ஒரு பொருட்டாக தெரியவில்லை, சீசரின் காதலால் அவளுக்கு அனைத்தும் எளிதாக கிடைத்தது,அடுத்த சில தினங்களில் சீசர் எகிப்திய அரச சபையில் பல அறிவிப்புகளை வெளியிட்டார், ஒன்று, டாலமி13, கிளியோபாட்ராவுடன் இணைந்து எகிப்தை ஆட்சி செய்ய வேண்டும், இரண்டு, கிளியோபாட்ராவின் இளைய சகோதரி மற்றும் சகோதரனுக்கு ரோமா சாம்ராஜ்யத்தின் சைப்ரஸ்ஐ ஆட்சி செய்ய வழங்குவதாகவும் தெரிவித்தார், இதன் மூலம் எகிப்தில் அரசியல் ஸ்திர தன்மையை உருவாக்க முடியும் என கருதினார், ஆனால் கிளியோபாட்ரா மீண்டும் எகிப்தின் ராணியாவதை சுத்தமாக விரும்பாத அவளின் சகோதரனும் கணவனுமான டாலமி13,இதை கடுமையாக எதிர்க்க, the war of அலெக்ஸாண்ட்ரியா ஆரம்பித்தது, சீஸருக்கும் டாலமி13க்கும் இடையில் நடந்த இந்த யுத்தம் சுமார் 4 மாத காலம் நடந்தது ,யுத்தத்தின் முடிவில் டாலமி13 தோல்வியை தழுவி, நைல் நதியில் மூழ்கி உயிரை விட, போர் முடிவுக்கு வந்தது.
ஜூலியஸ் சீசருடன் கிளியோபாட்ராவின் வாழ்க்கை:
யுத்தத்தின் முடிவில் கிளியோபாட்ரா மீண்டும் எகிப்தின் ராணி ஆக்கப்பட்டார், அவருடைய இன்னொரு இளைய சகோதரர் டாலமி14குடன் அவருக்கு மீண்டும் ஒரு சம்பிரதாய திருமணம் செய்துவைக்கப்பட்டது, அவருடைய இளைய சகோதரி அரசினோ, கிளியோபாட்ராவுக்கு எதிராக யுத்தம் செய்ததால் அவர் போர் கைதியாக சீஸருடன் ரோமுக்கு கொண்டு செல்லப்பட்டார், இந்த யுத்தத்தில் உலக புகழ் பெற்ற அலெக்ஸாண்ட்ரியா நூலகம் தீக்கிரையாக்கப்பட்டதாகவும் கூறப்படுவதுண்டு, இந்த யுத்தத்தின் முடிவு கிளியோபாட்ராவிற்கு ஒரு பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது, அவர் இப்போது எகிப்தின் ராணி, அவரின் காதலர் ரோம சாம்ராஜ்யத்தின் அதிபதி, அவர் இனி பயம் இல்லாமல் எகிப்தை ஆழ முடியும், அவர்கள் இருவருக்கும் BC 47இல் ஒரு மகன் பிறந்தான் அவர் பெயர் Caesarion, BC நாற்பத்தி ஆறு முதல் BC நாற்பத்து நான்கு வரை கிளியோபாட்ரா ரோம்ல் தங்கி இருந்தார், அவர்களது மகன் Caesarionஐ ரோம சக்கரவர்த்தி ஆக்க வேண்டும் என்பதே அவள் ஆசை, சீசர் கிளியோபாட்ர மீதிருந்த அன்பு மற்றும் அரசியல் நட்பு காரணமாக ரோமில் உள்ள வீனஸ் ஜெனிட்ரிக்ஸ் கோவிலில் கிளியோபாட்ராவின் தங்க சிலையை பிரதிஷ்டை செய்தார்.
ஜூலியஸ் சீசருக்கு எதிரான சதியும் அவர் மனைவியின் கனவும்:
சீசர் கிளியோபாட்ர உறவு ரோம் செனட்டில் இருந்த பலருக்கு கோபத்தை ஏற்படுத்தியது, அதே நேரத்தில் சீசர் தன்னை ரோமின் சர்வாதிகாரி என அறிவித்தார், இது செனட்டில் இருந்தவர்களை பயமுறுத்தியது, ரோமில் குடியாட்சி நிறுவ முடியாமல் போய் விடும் மேலும் தங்களது பதவியும் பட்டமும் பறி போய்விடும் என பயந்த பல செனட் உறுப்பினர்கள் சீசர்ஐ கொலை செய்ய சதி திட்டம் தீட்ட ஆரம்பித்தனர், சீசரைக் கொல்ல நினைத்தவர்கள் எப்படி, எங்கே அவரைத் தீர்த்துக்கட்டலாம் என நிறையத் விவாதங்கள் செய்தார்கள், பெரும்பாலானவர்கள், சீசரை அரசவையில் வைத்துக் கொன்றுவிட வேண்டும் என்று ஆதரவு தெரிவித்தனர். காரணம்,அங்கு செனட் உறுப்பினர்களைத் தவிர வேறு யாரும் இருக்கமாட்டார்கள். அத்துடன், கத்திகளை மறைத்துவைப்பதும் சுலபமாகிவிடும், மேலும் இந்த சதிக்கு துணையாக சீசரின் நெருங்கிய நண்பன் ப்ருட்டஸ்சின் உதவி கோரப்பட்டது, ஆச்சரியமளிக்கும் விதமாக இந்த பெரும்சதிக்கு ப்ருட்டஸ் ஒத்துக்கொண்டார். சீசர் கொலை செய்யப்படுவதற்கு முன் பல கெட்ட சகுனங்கள் அவருடைய மனைவிக்கும் அவருக்கும் தெரிவிக்கப்பட்டது, ஒரு ஜோதிடர் மார்ச் மாதம், 15, நீங்கள் பெரும் ஆபத்தை சந்திக்க நேரிடும் என கூறி இருந்தார், அதே போல் சீசரின் மனைவி கல்பூர்னியா ஒரு கனவு கண்டார், அதில் சீசரின் சிலை இரத்தம் சிந்துவதையம் அந்த ரத்தத்தில் ரோமானியர்கள் குளிப்பதையும் கண்டார். எனவே நீங்கள் செனட்டிற்கு செல்ல வேண்டாம் என்று சீசரிடம் அவள் கெஞ்சினாள்.
ஜூலியஸ் சீசர் படுகொலை:
இதனால் மனமுடைந்திருந்த சீசரிடம் அவரது நெருங்கிய நண்பன் Brutus இது என்ன பைத்தியக்காரத்தனம்,ஒரு பெண் கண்ட அர்த்தமில்லாத கனவுகளையும் கேட்டு அவைக்குச் செல்லாமல் இருக்கலாமா,இது அவைக்கு நீங்கள் செய்யும் அவமானமில்லையா,என கூறி அவருடைய மனதை மாற்றினான்,Brutusன் வார்த்தையில் மனம் மாறிய சீசர் அவருடன் அவைக்குச் செல்ல நினைத்தார்.ஆனால்,அவரது குருமார்கள் அவருக்காக பலி ஏற்பாடு செய்யப்பட்டபோது கண்ட கெட்ட சகுனங்கள் பற்றி எடுத்துச் சொல்லி,இன்று மாலை வரை அரசவைக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரித்தனர்.சீசரும் இதற்கு ஒப்புக்கொண்டார். இதனால் தங்கள் திட்டம் வீணாகிவிடுமோ என பயந்த Brutus,மீண்டும் சீசரிடம் சென்று தாங்கள் கூட்டிய அரசவை,தங்களுக்காகக் காத்திருக்கிறது,கெட்ட சகுனங்களையே மாற்றி நல்லவைகளாக்கும் சக்தி உங்களுக்கு இருக்கிறது.வாருங்கள் என்று கூறி அவரை அரசவைக்கு அழைத்துச் சென்றான்.உயிர் நண்பனின் வார்த்தைகளை நம்பி,அவர் அரசவை நோக்கி நடந்தார்,அவருடன் வழக்கமாக உடன் செல்லும் மார்க் ஆன்டனி அவைக்கு வெளியே தடுத்து நிறுத்தப்பட்டார், சீசர் தனது இருக்கையில் அமர்ந்ததும்,டில்லியஸ் சிம்பர் ஒரு மனுவுடன் அவரை அணுகினார்.சீசர் அதைப் படிக்கத் தொடங்கியபோது,சிம்பர் சீசரின் மேல் ஆடையை பிடித்து இழுத்தார்,இது சீசரை தாக்கலாம் என்பதற்கான சமிக்ஞையை செனட் மெம்பெர்களுக்கு கொடுத்தது, முதல் குத்து கழுத்தில் விழுந்தது,அதை தொடர்ந்து இருபத்திரண்டு குத்துகள்,இருபத்தி மூணாவது குத்து அவரது உயிர் நண்பன் Brutusசால் குத்தப்பட்டது, You too Brutus?என்ற வலியுடன் தடுமாறி விழுந்தார்,உலக சரித்திரத்தில் பெரும் வீரர்களில் ஒருவராக கொண்டாடப்படும் சீசரின் கதை சதியும் வஞ்சனையாலும் முடிவுக்கு வந்தது.
ஜூலியஸ் சீசரின் மறைவால் கிளியோபாட்ர என்ன ஆனாள்? அடுத்த பதிவில் பார்க்கலாம்.
இந்த Article உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம், மேலும் உங்கள் ஆதரவை வேண்டுகிறோம்.
இதன் தொடர்ச்சி அடுத்த பகுதியில் தொடரும்.
அடுத்த பகுதிக்கான Link, Cleopatra – Part2
இத்துடன் எங்கள் youtube channel link கொடுக்கப்பட்டுள்ளது, அதை பார்த்து உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.