உலக அழகி Cleopatra – Part2

உலக அழகி Cleopatra – Part2

ஜூலியஸ் சீசரின் மறைவுக்கு பின் கிளியோபாட்ராவின் கதை என்ன ஆனது? அவளால் எகித்திய ராணியாக ஆட்சி செய்ய முடிந்ததா? என்பதை Cleopatra – Part2 வில் பார்க்கலாம்.

Mark Antonyஇன் எழுச்சி:

ஜூலியஸ் சீசரின் மறைவுக்குப்பின் Brutus மக்களின் முன் நின்று சீசரை ஏன் கொன்றோம் என்பதற்கான தன்நிலை விளக்கம் அளித்தார்,அதில் தான் சீசரை நேசித்ததாகவும் ஆனால் ரோமை,சீசரை விட அதிகமாக நேசித்ததாகவும்,சீசரின் லட்சியமும் வளர்ச்சியும் ரோமானியர்களை அடிமைப்படுத்தியிருக்கும் என்றும்,அதனால்,அவரைக் கொல்வது ரோமின் சுதந்திரத்திற்கு அவசியமானது என்றும் கூறினார்,அதை கேட்ட மக்கள் அனைவரும் சீசரை கொலை செய்தது நியாயம் தான் என நினைத்தார்கள்,அதன் பின் சீசரின் தளபதிகளில் ஒருவரான Mark Antony சீசருக்கு ஆதரவாக பேச தொடங்கினர்,அவர் ப்ரூடஸ் மற்றும் சீசரை கொலை செய்த சதிகாரர்களை கௌரவமான மனிதர்கள் என்று திரும்பத் திரும்ப அழைத்தார்,அதே நேரத்தில் அவர்கள் சீசருக்கு எதிராக கூறிய கூற்றுகளுக்கு முரணான ஆதாரங்களை முன்வைத்து,அவர்களின் நம்பகத்தன்மையை நுட்பமாக வெளிப்படுத்தினர், அதாவது அவர்கள் கூறியது அனைத்தும் பொய் என வெளிப்படுத்தினர்,மேலும் சீசரின் தாராள மனப்பான்மை,குடிமக்களுக்கு பணம் மற்றும் பொருள்களை கொடுக்கும் சீசரின் பெருந்தன்மையை Antony மக்கள் முன் வெளிப்படுத்துகிறார்,மேலும் அவரின் உடலை காட்டி இது ஒரு போரில் மரித்த உடல் அல்ல,இது கொடும் சதியால் கொல்லப்பட்ட உடல்,அதுவும் அவரின் உற்ற நண்பனால் குத்தப்பட்ட உடல்,கொல்லப்பட்டது ஒரு சாதாரண மனிதன் அல்ல,உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட பெரும் வீரன்,தனது உரையின் முடிவில்,சதிகாரர்களுக்கு எதிராகக் கலவரம் செய்ய மக்கள் கூட்டத்தை வெற்றிகரமாகத் தூண்டினார் Mark Antony ,அதை தொடர்ந்து சீசருக்கு விசுவாசமான படைகளுக்கும் சதிகாரர்களுக்கும் இடையே கடுமையான உள்நாட்டுப் போர் உருவானது.

மீண்டும் எகிப்தில் Cleopatra:

அதே நேரத்தில் ஜூலியஸ் சீசரின் மரணத்தை அறிந்த கிளியோபாட்ரா அதிர்ந்தார், வாழ்க்கை பாதுகாப்பாக இருக்கிறது, இனி நமக்கு பயம் இல்லை என நினைத்து தான் அவள் ரோமாபுரிக்கு வந்தாள், மட்டுமல்ல தனது மகன், தனக்கும் ஜூலியஸ் சீசருக்கும் பிறகு எகிப்து மற்றும் ரோம் ஆகிய இரண்டிற்கும் ஒரு சக்திவாய்ந்த ஆட்சியாளராக மாறுவார் என்று அவள் நம்பினாள், ஆனால் எல்லாம் கண நேரத்தில் தவிடு பொடியானது, இனியும் ரோமில் இருந்தால் தனக்கும் தனது மகனுடைய உயிருக்கும் ஆபத்து என நினைத்து எகிப்திற்கு திரும்பி வந்தார்கள், சிறிது காலத்தில் கிளியோபட்ராவின் சகோதரரும் கணவருமான டாலமி14 மர்மமான சூழ்நிலையில் இறந்தார், தனது 3 வயது மகன் எகிப்தின் ஆட்சியில் அமர்வதற்காக கிளியோபட்ரா தனது சொந்த சகோதரனை கொலை செய்திருக்கலாம் என நம்பப்படுகிறது.இதனை தொடர்ந்து தனது 3 வயதான மகனை, எகிப்தின் சம ஆட்சியாளராக நியமித்து ஆட்சி செய்தார் கிளியோபட்ரா.

ரோம சாம்ராஜ்யத்தில் மீண்டும் மூவரட்சி:

சீஸரின் மரணத்திற்க்குப்பின்னர் ரோமில் சிவில் யுத்தம் ஆரம்பித்தது.சீஸரின் ஆதரவாளர்களான மார்க் antony,ஒக்டேவியன்,லெபீடஸ் ஆகிய மூவரும் ஒரு தரப்பிலும்,சீஸரை கொலை செய்த கெஸியஸ்,Brutus ஆகியோர் மறு தரப்பிலும் போரிட்டனர்,BC42இல் அவர்கள் சிவில் யுத்தத்தை வெற்றிகொண்டதோடு,ஒக்டேவியனும்,மார்க் அந்தோனியும்,லெபீடஸ்சும் ரோமின் அதிகாரத்தை பகிர்ந்துகொண்டனர்,ஆக்டேவியன் மேற்கு மாகாணங்களையும்,ஆண்டனி கிழக்கு மாகாணங்களையும் கைப்பற்றினர்,கிழக்கு மாகாணங்களை ஒட்டிய பகுதிகளில் தான் எகிப்தும் வருகிறது.

Cleopatra மற்றும் Mark Antonyஇன் சந்திப்பும் காதலும்:

கிளியோபாட்ராவின் செயற்பாடுகளில் சில சந்தேகங்கள் இருப்பதாகவும், எகிப்து ரோம சாம்ராஜ்யத்துக்கு கொடுக்கும் கப்பம் சம்மந்தமாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என பல கடிதங்கள் Mark Antony கிளியோபாட்ராவிற்க்கு அனுப்பி கொண்டிருந்தார், இறுதியில் அவர்கள் இருவரும் துருக்கியில் அமைந்துள்ள டார்ஸூஸ் நகரில் சந்திப்பதாக ஒத்துக்கொண்டனர்,Mark Antony டார்ஸூஸ் நகரில் cydnes river அருகாமையில் காத்து கொண்டிருக்க,ஊதா நிற பாய்மரங்கள் மற்றும் வெள்ளி துடுப்புகளால் அலங்கரிக்கப்பட்டு,பூக்களால் நிரப்பப்பட்ட ஒரு ஆடம்பரமான படகில்,கிரேக்க தெய்வமான ஐஸிஸ் போல உடையணிந்து டார்ஸூஸ் வந்தடைந்தார் கிளியோபாட்ரா,இதை கண்ட ஆண்டனி, முதல் பார்வையிலே கிளியோபாட்ராவின் அழகால் கவரப்பட்டார்,அதே நேரம் கிளியோபாட்ரா தனது சிம்மாசனத்தையும் எகிப்தின் சுதந்திரத்தையும் பராமரிக்க ஆண்டனியின் ஆதரவைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டிருந்தார்,இருவரும் அன்றிரவு ஒன்றாக ஒரு அழகான வீட்டில் உணவருந்தினர்,எகிப்து ராணி கிளியோபாட்ரா மீண்டும் ஒரு முறை ரோம சாம்ராஜ்யத்தின் தலைவருடன் காதலில் விழுந்தாள்,இது அவர்களது இறுதி அழிவுக்கான காரணமாக அமையும் என்று தெரியாமல்.

இருவருகிடையான இந்த சந்திப்பு BC41இல் நடந்தது,Mark Antony,கிளியோபாட்ராவின் அழகில் மதி மயங்கி போனார் என்று தான் கூற வேண்டும்,அவர் அப்படியே அனைத்தையும் மறந்து கிளியோபாட்ராவுடன் அலெக்ஸாண்ட்ரியா வந்தைடைந்தார்,மேலும் கிளியோபாட்ராவின் வேண்டுதலுக்கிணங்க உயிரோடு இருக்கும் அவரின் ஒரே சகோதரி Arsinoeவை கொலை செய்தார்,அவர் உயிரோடு இருந்தால் தனது பதவிக்கு ஆபத்து என கருதிய கிளியோபாட்ரா இதை செய்ய வைத்தார்,கிளியோபாட்ராவை பொறுத்தமட்டில் மீண்டும் அவள் வாழ்க்கை பாதுகாப்பான நிலையை அடைந்து விட்டது,இந்த முறையும் ரோம சாம்ராஜ்யத்தின் தலைவர் ஒருவருடன் நெருக்கமான உறவு,இது அவருக்கும் எகிப்துக்கும் பாதுகாப்பு என அவர் நினைத்தார்,தொடர்ந்து ஒரு வருடம் அலெக்ஸாண்ட்ரியாவில் கிளியோபாட்ராயுடன் தங்கி இருந்தார் Mark Antony.

 

Mark Antony ரோமா புரி திரும்புதலும் ஆக்டேவியாயுடன் திருமணமும்:

இது அவருடைய செல்வாக்கை ரோமில் குறைக்க ஆரம்பித்தது,மட்டுமல்ல,அவரது முதல் மனைவி ஃபுல்வியா மற்றும் அவரது சகோதரர் இருவரும் ரோமில் ஆக்டேவியனுக்கு எதிரான ஒரு கிளர்ச்சியில் தோல்வியடைந்தனர்,அதன் பின்விளைவுகளை antony சமாளிக்க வேண்டியிருந்தது.இதனால் அவர் உடனடியாக அலெக்ஸாண்ட்ரியாவிலிருந்து ரோமிற்கு திரும்ப வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது,அந்த நேரத்தில் கிளியோபாட்ரா கர்பவதியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.சிறிது காலத்தில் Mark antonyயின் மனைவி ஃபுல்வியா மரணமடைய, ரோமில் தனக்கு எதிரான அரசியல் சூழ்நிலையை சீராக்க, ஆக்டேவியனின் சகோதரி ஆக்டேவியாவை ஆண்டனி திருமணம் செய்து கொண்டார், இதன் மூலம் ஆக்டேவியன் தனக்கு எதிராக எந்த சதியும் செய்ய மாட்டார்,மேலும் ரோமில் தனது பலம் அதிகரிக்கும் என்பது அவர் எண்ணம்,இந்த திருமணம் அவர்களுக்கிடையில் ஒரு தற்காலிக சமரசத்தை உருவாக்கியது.

கிளியோபாட்ரா இது எல்லாம் அறிந்து இருந்தாலும், அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை,அவளை பொறுத்த அளவில்,அவளுடைய ஆட்சிக்கும், பிள்ளைகளுக்கும் எந்த பிரச்சினையும் வர கூடாது என்பது தான் பிரதானமாக இருந்தது,இதன் பின்பு இருவருக்கிடையில் பெரிய தொடர்பு இல்லாமல் தான் இருந்தது,கிளியோபாட்ரா கடிதம் அனுப்பினாலும் மார்க் antony பதில் அனுப்புவதில்லை,அப்போது தான் கிளியோபாட்ராவிற்கு இரு பிள்ளைகள் பிறக்கிறார்கள், அடுத்த சில வருடங்கள் கிளியோபாட்ரா எகிப்தின் வளர்ச்சியில் முழு கவனத்தை செலுத்தினர், விவசாயத்திற்கான வரி குறைக்கப்பட்டது, அயல்நாடுகளுடனான வியாபாரத்தை மேம்படுத்தினார், அலெக்ஸாண்ட்ரியா கலாச்சார மையமாக மாறியது, எகிப்தில் புதிய கோவில்கள் மற்றும் பொதுப் பணிகளை நிர்மாணித்து,ஒரு பாரம்பரிய எகிப்திய பாரோவாக தனது பிம்பத்தை வலுப்படுத்தினார்.

மீண்டும் துளிர்விட்டு காதல்:

இப்போது ரோமில், Mark Antony ஒரு முக்கியமான கட்டத்தில் இருந்தார்,அது பார்த்தியன்ஸ் உடனான போர், பார்த்தியன்ஸ்களுக்கு எதிரான போரில் வெற்றிஐ பெற்றால், அவரது வாழ்க்கையில் ஒரு பெரிய சாதனையாக அது இருக்கும்,மட்டுமல்ல ஆக்டேவியன்க்கு எதிரான அதிகார போட்டியில் தான் முன்னிலை பெற முடியும் என கருதினார்,அதற்கான பணம் மற்றும் ராணுவ உதவி கேட்டு கிளியோபாட்ராவை Mark antony , BC37, துருக்கியில் உள்ள Antiochல் சந்திக்கிறார்,இந்த சந்திப்பு அவர்களுக்கிடையில் மீண்டும் அரசியல் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் உறவை ஏற்படுத்துகிறது,கசந்த காதல் மீண்டும் இனிக்க தொடங்கியது, கிளியோபாட்ரா மீண்டும் தாயாகிறாள்,Mark antonyக்கு தேவையான பண,ராணுவ உதவிகளை செய்கிறாள்,சில மாதங்களுக்கு பிறகு Mark Antony, pathiyansக்கு எதிரான போருக்கு புறப்பட்டார்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக பார்த்தியன்ஸ் உடனான போரில் Mark aantony தோல்வியை தழுவுகிறார்,இந்த போரில் வெற்றி பெற்றிருந்தால் அவர் ரோமின் ஜூலியஸ் சீசருக்கு இணையாக பேசப்பட்டிருக்கலாம், கிளியோபாட்ராவின் வரலாறும் மாற்றி எழுதப்பட்டிருக்கும்,ஆனால் விதி விளையாடியது, போரில் தோற்ற அவமானத்தில் மார்க் அன்டோனியால் ரோம்க்கு செல்ல முடியவில்லை,அவனது தோல்வி,ஆக்டேவியனின் வெற்றியாகத்தான் அவனால் பார்க்க முடிந்தது,மட்டுமல்ல தனது மனைவி ஆக்டேவியாவயும் அவன் மறந்தான்,சிரியாவிற்கு தப்பி சென்று மது போதையில் மிதந்தான்,ஒரு காலத்தில் ரோம சாம்ராஜ்யத்தின் அதிபதிகளில் ஒருவன்,இப்போது ரோமுக்கு போகவே பயந்தான்,அவனை சமாதானப்படுத்த சிரியாவிற்கு,கிளியோபாட்ரா போனாள்,கிளியோபாட்ராவின் வருகை,தோல்வியால் கூனிக்குறுகி இருந்த மார்க் antonyஐ மாற்றியது,ஆனால் இது அவர்களின் முடிவுக்கான ஆரம்பம் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.

கணவன் மனைவியாக வாழ்க்கை:

மீண்டும் இருவரும் இணைந்து எகிப்திய தலைநகரம் அலெக்ஸாண்ட்ரியாவில் கணவன் மனைவியாக வாழ தொடங்கினார்கள்,ஆனால் மார்க் antonyக்கும், ஒக்டோவியனுக்கும் இடையில் அரசியல் போராட்டம் உச்சத்தை அடைந்தது,BC 34இல் ஆண்டனி ஆர்மீனியாவிற்கு எதிராக ஒரு போரை தொடங்கி அதை கைப்பற்றினர்,இந்த வெற்றியை அலெக்ஸாண்ட்ரியாவில் விமரிசையாக கொண்டாடினார்கள்,இந்த வெற்றி விழாவின் போது ரோம சாம்ராஜ்யத்துக்கு சொந்தமான பல பகுதிகளை அவர் எகிப்திற்கு கொடுத்தார்,மேலும் ஜூலியஸ் சீஸரின் உண்மையான அரசியல் வாரிசுரிமை கிளியோபட்ராவுக்கு பிறந்த சிஸேரியனுக்கே உண்டு. மாறாக,சீஸர் தத்தெடுத்த மகனான ஒக்டேவியனுக்கு அல்ல,மேலும் சிஸேரியனை king of kings என்றும், கிளியோபாட்ராவை queen of kings எனவும் முழங்கினார்,இது ஒக்டேவியனுக்கும் மார்க் antonyக்கும் இடையில் விரிசலை அதிகப்படுத்தியது,BC 31இல் தனக்கும் ஆக்டேவியாவிற்கும் உள்ள திருமண பந்தம் முறிந்ததாக கூறினார்,இதன் மூலம் Mark antonyயின் ரோம சாம்ராஜ்யத்தின் மீதான உறவு முற்றிலுமாக முறிந்தது,பலம் வாய்ந்த ஒக்டோவியனை யுத்த களத்தில் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஏற்கனவே கோபத்தில் இருந்த ஒக்டோவியன், தனது சகோதரியின் திருமண வாழ்வும் முடிவுக்கு வந்ததால் மார்க் அந்தோணியை முற்றிலுமாக அளித்து ஒளிக்கும் முடிவுக்கு வந்தார்,இதனால் கிளியோபாட்ரா,Mark Antonyக்கு எதிராக பல பிரச்சாரங்களை செய்து ரோமானியர்களையும், ரோமானிய செனட்டையும் Mark Antonyக்கு எதிராக திருப்பினார்,Mark antonyஐ கிளியோபாட்ராவின் செல்வாக்கின் கீழ் இருந்த ஒரு துரோகியாக சித்தரித்தார்,கிளியோபாட்ரா ரோமானியர்களை மயக்கி ரோம சாம்ராஜ்யத்தை தனதாக்கி கொள்ள முயல்கிறார் என உலகை நம்ப வைத்தார்,BC 32இல், ஆக்டேவியனின் பிரச்சாரத்தால் கிளியோபாட்ரா மேல் கோபமடைந்த ரோமன் செனட்,மார்க் Antony மற்றும் கிளியோபாட்ராவுக்கு எதிராக தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டது,செனட் Mark Antonyயின் பட்டங்கள் மற்றும் பதவிகள் அனைத்தையும் பறித்தது,அவரை ரோம அரசின் எதிரியாக அறிவித்தது, மேலும் கிளியோபாட்ரா மீது போரை அறிவித்தது,இதன் மூலம் அவர்களை கைது செய்து போர் கைதிகளாக ரோமுக்கு கொண்டு வந்து அவர்களை தூக்கி கொல்ல வேண்டும் என்பது தான் அவர்களின் ஆசை, ஆக்டேவியனுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு,இதன் மூலம் முழு ரோம சாம்ராஜ்யத்திற்கும் அதிபதி ஆக முடியும், மேலும் Mark Antony உடன் உள்ள நீண்ட கால அரசியல் போராட்டம் முடிவுக்கு வரும் என்பதே.

இறுதி யுத்தம்:

Mark Antony மற்றும் ஒக்டோவியன் கிடையேயான முதல் போர் செப்டம்பர் 2,கிமு 31இல் கிரேக்க நகரமான ஆக்டியம் அருகே நடந்தது.இது ஒரு கப்பல் படை யுத்தம் ஆகும்,ஆக்டேவியனின் கடற்படை, ஆண்டனி மற்றும் கிளியோபாட்ராவின் படைகளை எதிர்கொண்டது,ஆண்டனியின் கப்பற்படை தோராயமாக 500 கப்பல்கள் மற்றும் எழுபதாயிரம் காலாட்படைகளைக் கொண்டிருந்தது,அதே சமயம் மார்கஸ் அக்ரிப்பாவின் தலைமையில் ஆக்டேவியனின் படைகள் சுமார் 400 கப்பல்கள் மற்றும் எண்பதாயிரம் காலாட்படைகளை உள்ளடக்கியது.இந்த போரில் ஆக்டேவியனின் கடற்படை வெற்றி பெற்றது,அதற்கான காரணம்,ஒன்று,ஆக்டேவியனின் கப்பல்கள் சிறியது மற்றும் அது எளிதில் நகரும் தன்மை கொண்டது ஆனால் மார்க் aantonyன் கப்பல்கள் அளவில் மிக பெரிது ஆதலால் அவற்றால் எளிதில் நகர முடியவில்லை ,இரண்டு, ஆக்டேவியனின் வீரர்கள் நன்கு பயிற்சி பெற்றவர்கள் அவர்களால் எளிதில் சிறிய கப்பலை வேகமாக இயக்கி எதிரியை அடித்து நொறுக்க முடிந்தது ஆனால் மார்க் aantonyயின் வீரர்கள் நன்கு பயிற்சி இல்லாதவர்கள், அவர்களால் பெரிய கப்பலில் முழு வெற்றி அடையமுடியவில்லை,மூன்று,ஆக்டேவியன் படைகள் ஆண்டனியின் தகவல்தொடர்புகளைத் துண்டித்து, அவரது படைகளை கிளியோபாட்ராவின் படைகளுடன் தகவல் தொடர்பு கொள்ள முடியாதபடி செய்தனர், நான்கு,மார்க் aantonyயின் கப்பல் படைகளுக்கு பின்பு நிறுத்தப்பட்டிருந்த கிளியோபாட்ராவின் கப்பல் படைகள்,ஆண்டனிக்கு எதிராக போர் திரும்பியபோது, எகிப்திற்கு ஓடிப்போனது,இதனால் அதிர்ச்சியில் ஆண்டனியின் மன உறுதி மற்றும் யுத்தத்தில் தளர்வு ஏற்பட்டது,இறுதியில் மார்க் antonyன் படைகள் தோல்வியுடன் எகிப்து திரும்ப வேண்டி இருந்தது, இதனால் கோபமுற்ற பல கமாண்டர்கள் ஆக்டேவியனின் படைகளுடன் இணைந்தன.

இதனால் கோபமும் தளர்ச்சியும் அடைந்த மார்க் aantony,கிளியோபாட்ரா உடன் பேசுவதை தவிர்த்தார், உண்மையில் கிளியோபாட்ரா போர் முனைக்கு வரவேண்டிய அவசியம் இல்லை ஆனால் அவர் ஒரு பெரும் வீரனை போல் போர் முனையில் நின்றது அவர்களின் படைகளுக்கு பெரிய உத்வேகத்தை கொடுத்தது,அதே நேரத்தில் அவர் படைகளை விட்டு விலகியதும் பெரிய மன சோர்வை ஏற்படுத்தியது,பின்னர் கிளியோபாட்ரா, மார்க் antonyயிடம் இதற்கான விளக்கத்தை கொடுக்கும் போது,முற்றுகையை உடைத்து தங்கள் கடற்படையை முடிந்தவரை காப்பாற்றுவதற்கு தான் பின்வாங்கியதாகவும் இதனால் பிற் காலத்தில் தங்களுக்கு சாதகமான நிலை வரும் போது சண்டையை தொடர முடிவு செய்ததாகவும் தெரிவித்தாள்.

அதன் பின் இருவரும் ஒருவருடன் ஒருவர் பேசுவதே இல்லை,மார்க் antony கிளியோபாட்ராவிற்கு ஒரு சுமையாகி போனார்,மர்க் antonyயுடன் இருந்த பல ராணுவ தளபதிகள் ஆக்டேவியனுடன் இணைந்தனர், இருப்பினும் சமாதான பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்தது,ஆன்டனி மற்றும் கிளியோபாட்ராவிடமிருந்து தனித்தனி செய்திகள் மற்றும் தூதர்கள் ஆக்டேவியனுக்கு அனுப்பப்பட்டனர்,ஆனால் அவர் கிளியோபாட்ராவுக்கு மட்டுமே பதிலளித்ததாகத் தெரிகிறது,கிளியோபாட்ரா ஏற்கனவே கட்டப்பட்டு வரும் ஒரு கல்லறைக்குள் தன்னையும் தன்னுடன் பண, பொக்கிஷத்தையும் எரித்து விடுவதாக மிரட்டினார், உடனே ஆக்டேவியன் தனது தூதரக அதிகாரியான தைர்சோஸை கிளியோபாட்ராவிடம் பேச்சு வார்த்தைக்காக அனுப்பினார்,அவர் அந்தோணி கொல்லப்பட்டால் உங்கள் உயிரை காப்பாற்றுவதாக தெரிவித்தார்,ஆனால் கிளியோபாட்ரா அதற்கு மறுத்து விட்டார்,நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு எந்த முடிவும் ஏற்படவில்லை,ஆக்டேவியன் கிமு 30இல் எகிப்தை ஆக்கிரமிக்கத் தொடங்கினார்.

Mark antonyஇன் மறைவு:

தனது இரு சகோதரர்களையும்,ஒரு சகோதரியையும் கொலை செய்து,இரு பெரும் ரோமானிய தலைவர்களிடம் காதல் கொண்டு,தான் கட்டி காப்பாற்றிய எகிப்திய அரச பதவி எப்போது வேண்டுமானாலும் முடிவுக்கு வரலாம் என்பதை கிளியோபாட்ரா உணர்ந்து கொண்டார்,தனது பிள்ளைகள் பாதுகாப்பாக இருக்கட்டும் என தனது நம்பிக்கை குரியவர்கள் மூலம் தொலை தூரத்துக்கு அனுப்பி வைத்தார்,அதே நேரம் ஆக்டேவியன் விரைவாக அலெக்ஸாண்ட்ரியாவிற்கு முன்னேறினார்,ஆகஸ்ட் ஒன்று,முப்பது BC அன்று,ஆண்டனியின் கடற்படை ஆக்டேவியனிடம் சரணடைந்தது,அதைத் தொடர்ந்து ஆண்டனியின் குதிரைப்படை ஆக்டேவியனிடம் சரணடைந்தது,விரக்தியில் வாழ்க்கையை வெறுத்து இருந்த மார்க் ஆண்டனிக்கு,கிளியோபாட்ரா இறந்துவிட்டதாக தவறான செய்தி கிடைத்தது. ஆக்டேவியனிடம் பிடிபடுவதைத் தவிர்ப்பதற்காக அவள் தன் உயிரை மாய்த்துக் கொண்டாள் என்று நம்பிய ஆண்டனி,தன் வாழ்க்கையையும் முடித்துக் கொள்ள முடிவு செய்தார்.அவர் தனது சொந்த வாளின் மீது விழுந்து,தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டார். இருப்பினும்,ஆண்டனி உடனடியாக இறக்கவில்லை. அவர் கிளியோபாட்ராவின் கல்லறைக்கு கொண்டு செல்லப்பட்டார்,அங்கு அவளிடம் வருத்தம் மற்றும் தனது காதலை தெரிவித்த பிறகு அவள் கைகளில் இறந்தார்.

கிளியோபாட்ராவின் மறைவு:

ஆண்டனியின் மரணத்திற்குப் பிறகு,கிளியோபாட்ரா ஆக்டேவியனுடன் பேச்சுவார்த்தை நடத்த முயன்றார், ரோம சாம்ராஜ்யத்திற்கு பல முறை பணத்தையும் தனது ராணுவத்தையும் கொடுத்து உதவி இருக்கிறார்,ஆதலால் தனக்கும் தன் குழந்தைகளுக்கும் ஓரளவு கருணை காட்ட வேண்டும் என்று நம்பினார்.இருப்பினும்,ஆக்டேவியன் கிளியோபாட்ராவை மீண்டும் ரோமுக்கு சிறைபிடித்து அழைத்து வரவும்,அவளை ஊர்வலத்தில் போர் அடிமையாகவும் அழைத்துச் செல்லவும் தீர்மானித்தார், இது கிளியோபாட்ராவுக்கு தாங்க முடியாத வேதனையை ஏற்படுத்தியது,அதே நேரத்தில் சீஸருக்கும் அவளுக்கும் பிறந்த மூத்த மகனை ஆக்டேவியன் கொலை செய்தான், தனது மகன் எகிப்திற்கும் ரோம சாம்ராஜ்யத்திற்கும் பேரரசனாக இருப்பான் என நினைத்த அவளுக்கு இது பேரிடியாக இருந்தது,ஆக்டேவியன் தன் சிம்மாசனத்தையோ அல்லது தன் கண்ணியத்தையோ தக்க வைத்துக் கொள்ள அனுமதிக்க மாட்டார் என்பதை உணர்ந்த கிளியோபாட்ரா தன் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்தார்,கிளியோபாட்ரா தன்னிடம் ஒரு கூடை அத்திப்பழங்களைக் கொண்டு வர ஏற்பாடு செய்தார்,அதில் ஒரு சிறிய ஆனால் கொடிய விஷப்பாம்பு மறைத்து வைக்கப்பட்டிருந்தது, கிளியோபாட்ரா அந்த கொடிய விஷப்பாம்பு மூலம் தற்கொலை செய்து கொண்டார்,ஏனெனில் விஷப்பாம்பு எகிப்திய கலாச்சாரத்தில் தெய்வீகத்துடன் தொடர்புடையது,ஆக்டேவியன் இதை அறிந்து கடும் அதிர்ச்சி அடைந்தாரஅவர் கிளியோபாட்ராவின் கடைசி ஆசையின் படி மார்க் ஆண்டனியுடன் அவளது உடலையும் புதைக்க அனுமதித்தார்,மரணத்திலும் மார்க் ஆண்டனியுடன் இணைய வேண்டும் என்ற அவளுடைய ஆசை நிறைவேற்றப்பட்டது,ஒரு காதல் சரித்திரம் முடிவுக்கு வந்தது.

Cleopatra – Part2 உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம், மேலும் உங்கள் ஆதரவை வேண்டுகிறோம்.

இத்துடன் எங்கள் youtube channel link கொடுக்கப்பட்டுள்ளது, அதை பார்த்து உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply