Crop Circleன் அழகும், மர்மமும்

Crop Circleன் அழகும், மர்மமும்

Crop Circle பெரிய, சிக்கலான வடிவங்கள், அவை முதன்மையாக இங்கிலாந்திலும் மேலும் உலகம் முழுவதும் வயல்களில் ஒரே இரவில் மர்மமான முறையில் தோன்றுகின்றன, இந்த வடிவியல் வடிவங்கள் பெரும்பாலும் கோதுமை அல்லது சோள வயல்களில் உருவாக்கப்படுகின்றன, இது பரவலான ஆர்வத்தையும் விவாதத்தையும் தூண்டியுள்ளன, சிலர் அவற்றை இயற்கை நிகழ்வுகள் அல்லது மனித குறும்புக்காரர்களால் செய்யப்பட்டது என்று கூறும்போது, ​​மற்றவர்கள் அவை வேற்று கிரக வாசிகளின் வேலை என்று நம்புகிறார்கள். பயிர் வட்டங்களின் சிக்கலான தன்மை மற்றும் அளவு ஆகியவை அவற்றை சதி கோட்பாடுகள் மற்றும் அறிவியல் விசாரணையின் மையப் புள்ளியாக மாற்றியுள்ளன, Crop Circleன் அழகும், மர்மமும் பற்றி இந்த பதிவில் காணலாம்.

ஆவணப்படுத்தப்பட்ட முதல் Crop circle:

ஜனவரி 11, 1966, ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள துல்லி ஆற்றின் அருகில்,George pedly ஒரு டிராக்டரை ஓட்டிச் சென்றார்,அவருக்கு ஒரு வித்தியாசமான சத்தம் கேட்டது,பின்னர் பறக்கும் தட்டு போல ஒரு பொருளை பார்த்தார்,அது,நீல சாம்பல் நிறத்தில் 25 அடி நீளம் மற்றும் 9 அடி உயரத்தில் இருந்தது. ஒரு அற்புதமான வேகத்தில் பயணித்து அது தென்மேற்கு திசையில் சென்று மறைந்தது,மீண்டும் வயலை பார்த்த போது ஒரு அற்புதமான,வடிவத்தை வயலில் பார்த்தார்,அது தான் Crop circle,முதன் முதலில் ஆவணப்படுத்தப்பட்ட Crop circle இது தான்.

அதன் பின்பு பல ஆயிரக்கணக்கான crop circle உலகில் பல இடங்களில் திடீர் என தோன்ற ஆரம்பித்தது, அதுவும் இரவு நேரத்தில் சில மணி துளிகளில் உருவாக்கப்பட்டன, அதிலும் குறிப்பாக இங்கிலாந்தின் தெற்கு பகுதியில் அதிகமான crop circle உருவாக்கப்பட்டு கொண்டிருந்தன. அது எப்படி, யாரால் உருவாக்கப்பட்டது, அதை உருவாய்க்கியதன் உண்மையான நோக்கம் தான் என்ன?, என்று யாராலும் புரிந்து கொள்ள முடியாமல் இருந்தது, ஆனால், இது பல நூற்றுகணக்கான மக்களையும் ஆராச்சியாளர்களையும் அதனை நோக்கி கவர்ந்து இழுத்தது, ஏன் எனில் இது, அவ்வளவு அழகாகவும், துல்லியமாகவும் உருவாக்கப்பட்டிருந்தன.

ஆரம்பத்தில் எளிமையாக உருவாக்கப்பட்ட crop circle நாளடைவில், மிகவும் சிக்கலானதாக மாறியது, இது வட்ட வடிவில் மட்டும் அல்ல, சதுரம், செவ்வகம்,நீள் வட்டம்,மற்றும் உருவப்படங்கள் என பல வடிவங்களில் காணப்பட்டன, இந்த crop circleகள் பெரும்பாலும் ஒளிக்கற்றை அல்லது உருண்டை வடிவ ஒளியால் உருவாக்கப்படுகிறது. இது இங்கிலாந்தின் தெற்கு பகுதிகளில் அதிகமாக காணப்பட்டாலும், பத்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட crop circle அமெரிக்க,கனடா,ஆஸ்திரேலியா,தூர கிழக்கில் ஜெர்மனி,ஹாலந்து,பெல்ஜியம்,போலந்து,இத்தாலி,டென்மார்க்,ஸ்வீடன்,நார்வே மற்றும் பல நாடுகளில் காணப்பட்டது. பொதுவாக Crop circle கோதுமை,பார்லி அல்லது சோளம் போன்ற தானிய பயிர்களின்,வயல்களில் தோன்றும், இந்த பயிர்கள், ஒப்பீட்டளவில் நெகிழ்வான தண்டுகளைக் கொண்டுள்ளன, அவை எளிதில் உடையாமல் வளைந்து,சிக்கலான வடிவங்களை உருவாக்க அனுமதிக்கிறது.

Crop circle பற்றிய Research:

இப்படி தொடர்ந்து Crop circle உருவாகி கொண்டிருக்க, ஜூலை,1981ல் இங்கிலாந்தில் Winchester என்னும் இடத்தில்,3 Crop circles ஒரே நேர்கோட்டில் உருவாக்கப்பட்டிருந்தது,இந்த Crop circleஐ ஓய்வு பெற்ற எலக்ட்ரோ மெக்கானிக்கல் இன்ஜினியரான பாட் டெல்கடோ மேலும் சிலர் அவருடன் இணைந்து,அந்த இடத்தைப் பார்வையிட்டு,Crop circleளை ஆராயத் தொடங்கினார்,சில வருட ஆராய்ச்சிக்குப் பிறகு,சில வியக்கத்தக்க கண்டுபிடிப்புகளை கூறினார்,அவை,இந்த தாவரங்களின் தண்டுகள் உடைக்கப்படுவதில்லை, மாறாக,அவை தரையில் 90-degree வளைந்திருந்தன. இந்த pattern ஒரு தொடர்ச்சியான,ஆற்று நீர் பாயும் வடிவத்தில் இருந்தன,மேலும் அவை போடப்பட்ட கோணத்தில் தொடர்ந்து வளர்கின்றன,அவை மீண்டும் நேராகி பழைய நிலையை அடைய பல நாட்கள் ஆகும். மற்றும் கையால் உயர்த்தப்பட்டு நேராக்குவதை எதிர்க்கும் தன்மை கொண்டுள்ளது.

இதில் ஆச்சர்யமாக,சேற்றில் எந்த கால்தடயங்கழும் காணப்படவில்லை,மனிதர்கள் வந்து சென்ற அடையாளங்களும் இல்லை,இது குழப்பத்தையும் ஆச்சர்யத்தையும் உருவாக்கியது.இங்கு,வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு அருகில் Crop circle தோன்றுகின்றன. எடுத்துக்காட்டாக,ஸ்டோன்ஹெஞ்ச் மற்றும் சில்பரி மலைக்கு அருகில் பல காணப்படுகின்றன.பெரும்பாலான Crop circles நீர்நிலைகளுக்கு அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட குளங்கள்,அல்லது நிலத்தடி நீர்நிலைகளுக்கு அருகாமையில் உருவாகின்றன.

Crop circle விசித்திரமான அனுபவங்கள்:

இந்த Crop circle சில விசித்திரமான அனுபவங்களை பார்வையாளர்களுக்கும் ஆராச்சியாளர்களுக்கும் குடுத்தது, புகைப்படங்களில் விசித்திரமான பொருட்கள் தோன்றுவது, திசைகாட்டிகள் தவறான திசையை காண்பிப்பது, batteries விரைவில் drain ஆவது, என்ஜின்கள் செயலிழப்பது, crop circleக்கு வெளியே மீண்டும் work ஆவது, சிலர் உரத்த சத்தம் மற்றும் சலசலப்பு, ஹம்மிங் அல்லது த்ரில்லிங் ஒலியைக் கேட்கிறார்கள், ஆராய்ச்சியாளர்கள் crop circleளில் நேர மாற்றத்தை உணர்ந்தனர். சிலருக்கு குமட்டல், வாந்தி மற்றும் சிலருக்கு வலி நிவாரணம் மற்றும் குணப்படுத்துதல் வரை நடந்தது.

1989ல் கோடையில் 30க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள் குழு, 10 நாட்களுக்கு மேலாக இங்கிலாந்தின் Cheesefoot Headஇல் உள்ள Crop circleஐ ஆய்வுக்கு பயன்படுத்தியது. ஒரு இரவு, அவர்கள் ஒரு விசித்திரமான ஒலியைக் கேட்டனர் மற்றும் அது, அவர்களின் எண்ணங்களுடன் தொடர்புகொள்வது போல் தோன்றியது. மேலும் சுற்றியிருந்த பயிரிலும், அவர்கள் ஒரு விசித்திர ஒளியைக் கண்டார்கள், அடுத்த நாள், 500 மீட்டருக்கும் குறைவான தூரத்தில் புதிய crop circleஐ அவர்கள் பார்த்து ஆச்சரியமடைந்தனர்.

மீண்டும் Crop circle பற்றிய Research:

ஆயிரத்து தொள்ளாயிரத்து தொன்னூறில் bio physist, William Levingood, Crop circleளில் இருந்து எடுக்கப்பட்ட தாவரங்களை பகுப்பாய்வு செய்ய தொடங்கினார், அவரது குழு,கோதுமை பயிர்களின் தண்டுகள் இணையும் மூட்டுகள் நீளமடைந்துள்ளது,மற்றும் பல சந்தர்ப்பங்களில் அவை சிதைக்கப்பட்டுள்ளன,இது microwave ovenஇல் நீர் சூடாகி விரிந்து நீர்ஆவியாக மாறி, வேகமாக வெளியேறுவது போல்,இந்த தாவரங்களின் மூட்டுகளில் இருந்து நீர் மற்றும் கிரீம் ஆவியாக வெளியேறியதன் விளைவாக இந்த மூட்டுகள் நீண்டு மற்றும் வெளியேற்றும் குழி போன்ற அமைப்பை பெற்றுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.ஆதலால் இதில் microwave radiation இருக்கலாம் என கருதப்பட்டது.இந்த radiationஐ ஆய்வு செய்த போது,இந்த radiationஆல் பாதிக்கப்பட்ட கோதுமை விதைகள் மற்ற விதைகளை விட வேகமாகவும்,ஐந்து மடங்கு அதிக விளைச்சலையும் கொடுத்தது கண்டறியப்பட்டது.

Crop circle எங்களால் செய்யப்பட்டது, ஒத்துக்கொண்ட இருவர்:

இது ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, 1991ல் 2 இங்கிலாந்துகாரர்கள், doug and dave , இந்த Crop circles தாங்கள் உருவாக்கியதாக, தாமாக முன்வந்து ஒத்துக்கொண்டனர், இங்கிலாந்தின் தென் பகுதியில் UFO வந்துள்ளதாக மக்கள் நினைத்து பயப்படுவர், அதற்காக தான் தாங்கள் இப்படி வெறும் கயிறு மற்றும் பலகைஇன் துணையால் Crop circleஐ உருவாக்கியதாக ஒப்புதல் அளித்தனர், இத்துடன் இந்த கதை, முடிந்ததாக அனைவரும் எண்ணினார்கள்.

ஆனால்,அவர்கள் பலமுறை தங்கள் திறமைகளை crop circle உருவாக்குவதில் ஊடகங்களின் முன் நிரூபிக்க முடியாமல் தவறிவிட்டனர்.அவர்கள் உருவாக்கிய crop circleல்,கோதுமைத் தண்டுகள் உடைந்து நெளிந்து காணப்பட்டது.மேலும் இரு வட்டங்களையும் இணைக்கும் பாதை அவற்றின் மையங்களுடன் சீராக அமையவில்லை, தாங்கள் இதை 1975ல் தொடங்கியதாகவும் சில நேரங்களில் 1976ல் தொடங்கியதாகவும் மாற்றி மாற்றி கூறினார்,மேலும் doug and dave உருவாக்கிய crop circle உடைந்து காணப்பட்டது,மனித காலடி தடங்கல் அறியப்பட்டன,ஆனால் தானாக உருவாகிய crop circle உடையாமல் 90 டிகிரி வளைந்து காணப்பட்டது,அதன் முற்றிய கோதுமை மணிகள் வளையாமல் நீண்டு காணப்பட்டது,அதை வழைக்க முயற்சித்தாலும் முடியவில்லை,இயற்கையில் முற்றிய கோதுமை தலை சாய்ந்து காணப்படும்.தானாக உருவாகிய crop circleஇல்,அறுவடைக்கு பின்பும் பல ஆண்டுகள் அதன் தடங்களை காண முடிந்தது,ஆதலால் இதை Ghost circles என்றும் அழைக்கிறார்கள்.

இதன் காரணமாக doug and dave உருவாக்கியா crop circleன் உண்மை நிலையை மக்கள் சந்தேகிக்க தொடங்கினர்,உலகில் உள்ள எல்லா crop circleம் தாங்கள் தான் உருவாக்கியதாக அவர்கள் கூறினார்கள், அது உன்மையில் நடக்க முடியாத காரியம்,இவர்கள் இருவரும் இங்கிலாந்தை விட்டு வெளி நாடுகளுக்கு அதிகம் போனதில்லை, ஆனால் crop circle உலகின் பல நாடுகளில் உருவாக்கப்பட்டுள்ளன, அடுத்த நாட்டில் அடுத்தவர் சொத்தில் இப்படி செய்வது சட்டப்படி குற்றம், மேலும் இப்படி பெரிய crop circle ஒரே இரவில் சில மணி துளிகளில் சில மனிதர்களால் செய்வது கொஞ்சம் கடினம் தான். Crop Circleன் அழகும், மர்மமும் மனிதர்களால் செய்யப்பட்டது என்பதை மக்களால் ஏற்று கொள்ள முடியவில்லை.

புதிய மர்மம்:

ஆரம்பத்தில் எளிமையாக இருந்த crop circle 1990களில் சிக்கலான ஆனால் மிகவும் அழகான ஒன்றாக மாற துவங்கியது,ஆனால் யாரோ இந்த மனித சமூகத்திடம் ஏதோ சொல்ல முயல்கிறார்கள் என்று சிலர் கருதினார்கள்,ஆனால் அது என்ன?,யார் அனுப்பினார்கள்?அவர்களின் நோக்கம் தான் என்ன?, அதை ஏன் ஆங்கிலத்திலோ மற்ற மொழிகளிலோ சொல்ல இயலவில்லை?,புரியாத மர்மமாக தான் இருந்தது.

இந்த அனைத்து புதிர்களுக்கும் விடை அளிக்கும் விதமாக August 14, 2001ல், இங்கிலாந்த்தின் Chilbolton Radio Telescope அருகாமையில் ஒரு புதிய crop circle உருவாகி இருந்தது, ஆரம்பத்தில் ஒன்றும் புரியவில்லை, ஆனால் உயர்ந்த இடத்தில் இருந்து பார்த்த போது, அது என்ன என எல்லாருக்கும் புரிய ஆரம்பித்தது, அது ஒரு முகம், 3 நாள்களுக்கு பின் அதன் அருகாமையில் மற்றோரு crop circle உருவாகி இருந்தது, அது என்ன என ஆரம்பத்தில் பலருக்கும் புரியவில்லை, இந்த புதிய crop circle 1974ல் விண்வெளிக்கு நாசாவால் அனுப்பப்பட்ட புகழ்பெற்ற Arecibo messageக்கு பதில் அளிக்கும் வகையில் அமைந்திருந்தது.

ஆச்சர்யம் அளிக்கும் விதமாக இந்த Arecibo messageக்கு வேற்று கிரகவாசிகள் பதிலளிக்கும் விதமாக புதிய crop circle அமைந்திருந்தது, மீண்டும் 1 வருடத்திற்குள் மீண்டும் 1 crop circle, மீண்டும் 1 முகத்தைப் பார்க்கிறோம், ஆனால் அது மனித முகம் அல்ல பைனரி குறியீட்டில் வரையப்பட்ட வேற்று கிரகவாசிகளின் முகம், அதை தொட்டு அடுத்து disc வடிவில் பைனரி code, அந்த பைனரி code, askeyன் துணையுடன் எழுத்துக்களாக மாற்றப்பட்டது, askey என்பது ஒரு encoding standard ஆகும், அவர்களிடம் இருந்து வந்த message, இது தான், beware the bearers of false gifts and their broken promises much pain but still time, Believe. There is good out there we opposed as a deception. conduit closing.

Crop circle ஆச்சர்யங்கள்:

இதனுடைய உண்மையான அர்த்தமும் யாருக்கும் புரியவில்லை,ஆனால் ஏதோ எச்சரிக்கை செய்தி என்பது மட்டும் புரிந்தது,இந்த crop circleகளில் வானியல்,அறிவியல்,மற்றும் கணித சமன்பாடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.அவற்றில் ஒன்று,பலரையும் ஆச்சரியப்படுத்தியது ,ஏன் எனில் அதில் வரையப்பட்டிருந்தது, பை,இதன் மதிப்பு 3.14,ஆனால் crop circleல் பை இன் மதிப்பு டெசிமல் பாயிண்ட்க்கு அடுத்து 10 digit துல்லியத்துடன் கொடுக்கப்பட்டிருந்தது, இது அவர்களின் கணித அறிவு, வடிவியல் திறன்யின் துல்லியத்தை காட்டுகிறது, மிகவும் பிரபலமான பயிர் வட்டங்கள் பல உண்மையில் ஃபிராக்டல் வடிவங்களிலிருந்து பெறப்படுகிறது, அவற்றில் சில ,the Mandelbrot set, the Julia set’, பல crop circleகளில் fibonacci numbers , golden number பயன்படுத்தப்பட்டுள்ளது,இது அவர்களின் கணித அறிவின் மேன்மையை குறிக்கிறது,அறிவார்ந்த விஷயங்களை உருவாக்க கணித அறிவு இருக்க வேண்டும். கணிதம்,நிச்சயமாக,உலகளாவிய மொழி.நாம் எப்போதாவது வேற்றுகிரகவாசிகளை சந்தித்தால்,அவர்கள் ஆங்கிலம்,பிரஞ்சு அல்லது ஜெர்மன் பேச மாட்டார்கள்,கணிதம் மூலம் தொடர்பு கொள்ளத்தான் வாய்ப்பு அதிகம்.

இப்படி அனைத்து crop circleம் வேற்று கிரக வாசியால் மனிதர்களிடம் சில செய்திகளை பகிரத்தான், இந்த crop circle பயன்படுத்த படுவதாக சொல்லப்படுகிறது, அதுவும் நல்ல செய்திகளை பகிரத்தான் அவர்கள் மனித சமூகத்தை தொடர்பு கொள்ள முயல்வதாகவும் சிலர் கூறுகிறார்கள், இயற்கையில் இருந்து அளப்பரிய மின் ஆற்றலை, எளிதில் இலவசமாகவும், பெற முடியும் என்பதும் அவற்றில் ஒன்று.

மேற்கண்ட அனைத்தும், தனி மனிதன் அல்லது group of people ஆல் சொல்லப்பட்டது, ஆனால் அரசும், சயின்டிஸ்ட்களில் பலரும் வேறு கருத்தை வைக்கிறார்கள், அவை மனிதனால், எளிய கருவிகளைப் பயன்படுத்தி பொதுவாக பயிர் வட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. கண்டறிதலைத் தவிர்ப்பதற்காக இந்த வடிவங்கள் பெரும்பாலும் இரவில் உருவாக்கப்படுகின்றன, பெரும்பாலான பயிர் வட்டங்கள் மனிதனால் உருவாக்கப்பட்டவை என்றாலும், சூறாவளி அல்லது வானிலை நிகழ்வுகள் போன்ற இயற்கை காரணங்களால் கூட இதே போன்ற வடிவங்களை உருவாக்கலாம். வேற்று கிரகவாசிகளின் தொடர்பு இதில் இல்லை என்பதே.

Crop Circleன் அழகும், மர்மமும் என்ற இந்த Article உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம், மேலும் உங்கள் ஆதரவை வேண்டுகிறோம்.

அடுத்த பதிவு, கீழே Link கொடுக்கப்பட்டுள்ளது

Artificial Intelligenceன் வளர்ச்சி, நன்மையை or தீமையா?

இத்துடன் எங்கள் youtube channel link கொடுக்கப்பட்டுள்ளது, அதை பார்த்து உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply