பண்டைய கோயில்கள் ஆயிரமாண்டு கால வரலாற்றையும், பாரம்பரியத்தையும், மர்மங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளன, இந்தியாவில் உள்ள டாப் 5 Mysterious Temples களில் தனித்துவம் வாய்ந்த சில கோவில்களை பற்றிய விளக்கத்தை இந்த பதிவில் அறியலாம்.
கோனார்க் சூரியன் கோவில்
இந்தியாவில் சூரியனுக்காக கட்டப்பட்ட முதல் கோயில் என்று கோனார்க் சூரிய கோயிலை கூறுவதுண்டு, இந்த கோயில் திரிகலிங்கர்கள் பிரிவைச் சேர்ந்த முதலாம் நரசிம்ம தேவனால், பதிமூன்றாம் நூற்றாண்டில் ஒரிசாவில் கட்டப்பட்டது. ஏழு குதிரைகள் பூட்டி, பனிரெண்டு ஜோடி சக்கரங்களை கொண்ட தேரில் சூரியன் எழுந்தருள்வது போல தேர் வடிவில் இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது. ஏழு குதிரைகள் வாரத்தின் ஏழு நாட்களையும், பன்னிரண்டு சக்கரங்கள் இந்து நாட்காட்டியின் பன்னிரண்டு மாதங்களைக் குறிக்கும், சூரிய ஒளியானது மூலவரின் சிலை மீது படும் வகையிலும் கோயிலைக் கட்டியிருக்கிறார்கள், தேரின் சக்கரங்கள் ஒவ்வொன்றும் ஒன்பது அடி, ஒன்பது அங்குலம் என்ற கணக்கில் எட்டு பெரிய ஆரைகளும், பெரிய ஆரைகளுக்கு இடையில் எட்டு சிறிய ஆரைகளும் இருக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது. ஒரு சக்கரம் ஒரு முழு நாளை குறிக்கும்.பெரிய எட்டு ஆரைகள் ஒரு நாளின் இருபத்தி நாலு மணிநேரத்தை எட்டு ஆகப் பிரிக்கும். அதாவது ஒரு ஆரை மூன்று மணி நேரக்கணக்கு. இடையில் உள்ள சிறிய ஆரை ஒன்றரை மணி நேரக் கணக்கு.ஒரு பெரிய ஆரைக்கும் ஒரு சிறிய ஆரைக்கும் இடையில் முப்பது முத்துப்போன்ற அமைப்புகள் உள்ளது. ஒவ்வொரு முத்தும் மூன்று நிமிட அளவுகளைக் கொண்டது. இதைக் கொண்டு ஒரு நாளின் நேரத்தை இதில் விழும் சூரிய நிழல் மூலமாகத் துல்லியமாக கணக்கிட முடியும்.
சூரியன் கிழக்கில் உதித்து மேற்கில் மறையும் என்ற விதிப்படி கோனார்க் கோயில் கிழக்கு மேற்கு வாயில்கள்களை கொண்டுள்ளது. இக்கோயிலில் மூன்று சூரியபகவான் சிலைகள் உள்ளன. முதல் உதய சூரியன், இரண்டாவது பிற்பகல் சூரியன், மற்றும் மூன்றாவது, சூரிய அஸ்தமனத்தின் போது, இது நுழைவு வாயிலுக்கு அருகில் அமைந்துள்ளது யானையை தாக்கும் சிங்கமாக செதுக்கப்பட்டுள்ளது, இந்த சிலைகள் அனைத்தும் ஒரே கல்லில் செய்யப்பட்டவை மற்றும் கிட்டத்தட்ட இருபத்தி எட்டு டன் எடை கொண்டவை.
இந்த கோவிலின் மிகவும் கவர்ச்சிகரமான அம்சங்களில் ஒன்று, அதன் கட்டுமானத்தில் காந்தங்களைப் பயன்படுத்தியதால் சூரியன் சிலை காற்றில் எப்போதும் தொங்கி கொண்டிருக்கும். இது எப்படி நடந்தது என்பது பல ஆண்டுகளாக மர்மமாக இருந்தது. பல வல்லுநர்கள் லோடெஸ்டோன் என்று அழைக்கப்படும் ஐம்பத்திரெண்டு டன் எடையுள்ள கல் இந்த கோவிலுக்குள் நிறுவப்பட்டு ஒரு இயற்கை காந்தமாக செயல்பட்டதாக நம்புகின்றனர். பின்னர் போர்ச்சுகீசியர் காலத்தில் லோடெஸ்டோன் கல் அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது, ஆனால் இந்த கல் யாரால் அகற்றப்பட்டது, இந்த சூரியனின் சிலை எப்படி காற்றில் தொங்கி கொண்டிருந்தது என்பது மர்மமாக தான் உள்ளது, மேலும் கிருஷ்ணரின் மகன் சம்பா என்பவர் இக்கோயிலை எழுப்பினார் என்றும் கூற படுகிறது. இந்தியாவில் உள்ள டாப் 5 Mysterious Temples களில் இது ஒன்று.
தஞ்சை பெரிய கோவில்
தமிழர்களின் பெருமையான இந்த ஆலயம் சோழ சாம்ராஜ்யம் உச்சத்தில் இருக்கும் போது அதன் மன்னன் ராஜ ராஜ சோழனால் கிபி 1003இல் இருந்து 1010இல் கட்டப்பட்டது, இந்த கோவில் தஞ்சைப் பெருவுடையார் கோயில், இராசராசேச்சரம், பிரகதீசுவரர் கோயில் என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. கோயிலின் கருவறையில் உள்ள லிங்கத்தின் உயரம் பனிரெண்டு அடி, இது தமிழ் உயிரெழுத்துக்களின் எண்ணிக்கைக்கு சமம், லிங்க பீடத்தின் உயரம் பதினெட்டு அடி, இது தமிழ் மெய் எழுத்துக்களுக்கு சமம், கோயில் கோபுரத்தின் உயரம் இருநூற்றி பதினாறு அடி, இது உயிர் மெய் எழுத்துக்களின் எண்ணிக்கைக்கு சமம். கோயிலின் கருவறையில் உள்ள லிங்கத்திற்கும் நந்திக்கும் இடையே உள்ள தூரம் இருநூற்றி நாப்பத்தியேழு அடிகள், இது மொத்த தமிழ் எழுத்துக்களின் எண்ணிக்கைக்கு சமம். கோயிலின் நந்தியை உருவாக்க ஒரே ஒரு கல் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த சிலை சுமார் இருபது டன் எடையை கொண்டது.
இந்த கோவில் சுமார் ஒரு லட்சத்து முப்பதாயிரம்(1,30,000) டன் எடை கொண்ட கிரானைட் கற்களை பயன்படுத்தி கட்டப்பட்டது. கோவிலின் 60 கிலோ மீட்டர் சுற்றளவில் ஒரு கிரானைட் குவாரி கூட இருந்ததற்கான ஆதாரத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது வரலாற்று ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. அதாவது இந்தக் கற்கள் கோயில் கட்டுவதற்காகக் தொலைவில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. உண்மையில் இது ஒரு நம்ப முடியாத கடினமான பணி.
பிரகதீஸ்வர கோவிலின் மிகவும் திகைப்பூட்டும் அம்சம் 80 டன் எடையுள்ள அதன் பிரம்மாண்டமான குவிமாடம் ஆகும். இந்த கல் எப்படி கோவிலின் குவி மாடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது என்று சரியாக யாராலும் கூற முடிய வில்லை. பிரகதீஸ்வரர் கோவிலில் உள்ள மிகவும் புதிரான மர்மங்களில் ஒன்று கோபுரம் உயரமாக இருந்தபோதிலும், கோவிலின் நிழல் தரையில் விழவில்லை, இது பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.
ஸ்ரீ வீரபத்ரா கோவில் அல்லது Lepakshi கோவில்
Lepakshi புடவைகள் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள், இவைகள் பெங்களூரில் இருந்து சுமார் 120 கிமீ தொலைவில் உள்ள வீரபத்ரா கோயில் என்று அழைக்கப்படும், கோவிலின் தூண்களின் நேர்த்தியான சிற்ப ஓவியங்களில் இருந்து எடுக்கப்பட்டுள்ள அற்புதமான வடிவமைப்புகள் ஆகும். ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், லேபக்ஷி கிராமத்தில் வீரபத்ரர் கோவில் உள்ளது.
Lepakshi கோவிலில் உள்ள ஒரு பெரிய மர்மம், காற்றில் தொங்கும் தூண் எவ்வாறு கட்டப்பட்டது அல்லது செதுக்கப்பட்டது என்பதுதான், மற்ற 69 தூண்கள் மேற்கூரையை தாங்கி நிற்கும் அதே வேளையில், ஒரு மூலை தூண் மட்டும் கோவில் தரையை தொடவே இல்லை. கோவிலின் தளத்திற்கும் தூணின் அடிப்பகுதிக்கும் இடையில் ஒரு சிறிய இடைவெளி உள்ளது மற்றும் ஒரு பக்கத்திலிருந்து மறுபுறம் ஒரு துண்டு போன்ற மெல்லிய பொருட்களை நீங்கள் அனுப்பலாம், இது எப்படி என்பது புதிராக தன உள்ளது.
இந்த கோவிலில் ஒரு பெரிய கால் தடம் காணப்படுகிறது, அதில் எப்போதும் நீரின் தன்மை அறியப்படுகிறது, இது சீதா தேவியின் காலடி தடம் என்றும் கூறப்படுகிறது.
ஸ்ரீ பத்மநாப சுவாமி கோவில்
வரலாற்று பதிவுகள் மற்றும் புராணங்களின்படி, கோவிலின் ஆரம்பம் கி.பி எட்டாம் நூற்றாண்டிற்கு முந்தையது, அந்த நேரத்தில் தென்னிந்தியாவின் முக்கிய ஆளும் வம்சங்களில் ஒன்றான சேர வம்சத்தால் கோயில் கட்டப்பட்டது என்று நம்பப்படுகிறது. 18ஆம் நூற்றாண்டில் மன்னர் மார்த்தாண்ட வர்மாவின் ஆட்சியின் கீழ் பல சீர் திருத்தங்கள் இந்த கோவிலில் நிகழ்ந்தன.இக்கோவிலின் பிரதான தெய்வமாக மகாவிஷ்ணு போற்றப்படுகிறார். இக்கோவில் மகாவிஷ்ணுவின் நூற்றி எட்டு திவ்யதேசங்களில் ஒன்றாகும்.
பத்பநாபசுவாமி கோவிலில் உள்ள அனந்தபத்மநாபனின் சிலை மூலிகைகள், ரெசின் மற்றும் மணல் கலவையை கொண்ட கடுசர்க்கரா எனும் அஷ்டபந்தன கலவையால் பிரதிஷ்டை செய்யப்பட்டது, கோயிலின் மூலவர் நேபாளத்தில் காந்தகி ஆற்றில் இருந்து கொண்டு வரப்பட்ட 12,008 சாளக்கிராம கற்களால் செய்யப்பட்டுள்ளது. சாள கிராம கற்கள் மிகவும் புனிதமான கற்களாகும்.இங்கு ஒரு ஆண்டை குறிக்கும் விதத்தில் 365 தூண்கள் இந்த கோயிலில் காணப்படுகிறது.
பத்மநாபசுவாமி கோவில் தான் உலகிலேயே பணக்கார கோவிலாக விளங்குகிறது, பத்மநாபசுவாமி கோவிலில் ஏ முதல் எஃப் வரை மொத்தம் 6 அறைகள் உள்ளன. இந்த அறைகள் பூமிக்கு அடியில் 5 அடி ஆழத்தில் உள்ளன. இதுவரை 1990 ம் ஆண்டில் 2 முறையும், 2002ம் ஆண்டு 5 முறைகளும் மட்டுமே இந்த ரகசிய பெட்டகங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் இவற்றில் பி அறை மட்டும் இதுவரை திறக்கப்பட்டது கிடையாது,வெறும் ஐந்து அறைகளில் காணப்படும் பொக்கிஷங்களின் மதிப்பிடப்பட்ட மதிப்பு சுமார் $22 பில்லியன் ஆகும்.
இதுவரை திறக்கப்படாமல் இருக்கும் பி அறையின் சுவர் தங்கத்தால் ஆனதாக சொல்லப்படுகிறது. இந்த அறையை திறப்பதற்கு திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் அனுமதி வழங்க மறுத்து விட்டனர், பி அறை 3 கதவுகளை கொண்டு பாதுகாக்கப்படுகிறது, 3 ஆவது கதவில் இரண்டு பெரிய பாம்புகள் செதுக்கப்பட்டுள்ளன. யாரும் இதற்கு அருகில் வரக் கூடாது என்பதை எச்சரிக்கும் அடையாளங்கள் ஆகும் . இந்த பி அறை, மன்னர் மார்த்தாண்ட வர்மன் காலத்தில் தலைசிறந்த வேத மந்திரங்கள் தெரிந்த புரோகிதர்களால் நாக பாச மந்திரங்கள் ஓதி பாதுகாக்கப்பட்டு, மூடி வைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. தலைசிறந்த புரோகிதர்களின் உதவியுடன் சக்தி வாய்ந்த மந்திரங்கள் ஓதி மட்டுமே இந்த சாபத்தை நீக்க முடியும் என சொல்லப்படுகிறது. இந்தியாவில் உள்ள டாப் 5 Mysterious Temples களில் இது ஒன்று.
கைலாசா கோவில்
எல்லோரா குகையில் உள்ள கைலாஷ் கோயில் அல்லது குகை எண் 16 பண்டைய இந்திய கட்டிடக்கலை, மற்றும் கலையின் குறிப்பிடத்தக்க தலைசிறந்த படைப்பாகும். இந்தியாவின் மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் மாவட்டத்தில் அமைந்துள்ளது, சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோவில், பெரியதொரு மலையைக் குடைந்து உருவாக்கப்பட்டுள்ளன, இது 276 அடி நீளமும், 154 அடி அகலமும் உடையது, பாறையின் உச்சியிலிருந்து தொடங்கி கீழ்நோக்கி செதுக்கப்பட்ட ஒரே கோயில் இதுவே, கோவிலை உண்மையில் கட்டியது யார் அல்லது அது எப்போது கட்டப்பட்டது என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை.
வரலாற்றாசிரியர்கள் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, இந்த கோவிலை உருவாக்கும் போது சுமார் 400,000 டன் பாறைகள் இங்கிருந்து அகற்றப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த அளவு கனமான பாறைகள் அதைச் சுற்றியுள்ள எந்த இடத்திலும் காணப்படவில்லை, வெட்டப்பட்ட இந்த பாறை துண்டுகள் எங்கே பயன்படுத்தப்பட்டது அல்லது கொட்டப்பட்டது என்பது இன்னும் விடை தெரியாத மர்மமாகவே உள்ளது.
இது ஒரு பாறையை மேலிருந்து கீழாக வெட்டி உருவாக்கப்படுவதால், ஒவ்வொரு வடிவமைப்பும், அளவீடும் மிகத் துல்லியமாகத் திட்டமிடப்பட்டது, ஏனெனில் அது தவறாக வெட்டப்பட்டால் கூடுதல் கல்லையோ அல்லது பாறைத் துண்டுகளையோ சேர்த்து அதை மாற்ற வாய்ப்பில்லை. இந்த கோயில் முழுவதும் ஒரே ஒரு பாறையால் ஆனது. எந்த ஒரு இடத்திலும் ஒரு சிறிய பாறை துண்டு கூட இணைக்கப்படவில்லை. இது கற்பனை கூட செய்யமுடியாத துல்லியமான வேலைப்பாடுகள், அது எப்படி சாத்தியமானது என்பது தான் மர்மமாக உள்ளது.
சில ஆராய்ச்சியாளர்கள் இந்த குகைகளின் கீழ் ஒரு பெரிய நிலத்தடி நாகரிகம் இருப்பதாக வலுவாக கூறுகின்றனர், எல்லோரா குகைகளில் பல ஆழமான சுரங்கங்களும் குறுகிய பாதைகளும் உள்ளன. அவை வெளியில் இருந்து பார்க்க முடியும், ஆனால் 10 அடி அல்லது அதற்குப் பிறகு அவை மனிதனால் நுழைய முடியாத அளவுக்கு குறுகியதாக இருக்கும், இத்தகைய சுரங்கங்கள் மற்றும் குறுகிய பாதைகளின் நோக்கம் என்ன?, மரம்மமாகத் தான் உள்ளது.
மழைநீரை சேகரிப்பதற்கும், உபரி நீரை வடிகால் வழியாக அனுப்புவதற்கும் முழுமையான வடிகால் அமைப்பு இந்த கோயிலில் உள்ளது. ஒவ்வொரு சிறிய விவரமும் உன்னிப்பாக சிந்திக்கப்பட்டதாகத் தெரிகிறது ,மேலும் கோவிலின் சுவர்களில் பல்வேறு வகையான எழுத்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளன, இன்றுவரை அவற்றை யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை.
இந்த Article உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம், மேலும் உங்கள் ஆதரவை வேண்டுகிறோம்.
அடுத்த பதிவு, கீழே Link கொடுக்கப்பட்டுள்ளது.
உலகின் பணக்கார அரச குடும்பங்கள்
இத்துடன் எங்கள் youtube channel link கொடுக்கப்பட்டுள்ளது, அதை பார்த்து உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.