Terracotta Army

Terracotta Army

மார்ச் 1974 இல், சீனாவின் வறட்சியால் வறண்டு கிடக்கும் ஷான்சி மாகாணத்தில் கிணறு தோண்டிய விவசாயிகள் குழு, ஒரு களிமண் உருவத்தின் துண்டுகளைக் கண்டெடுத்தனர், இது உலகையே ஆச்சரியப்பட வைத்த மிகப்பெரிய தொல்பொருள் கண்டுபிடிப்புகளில் ஒன்றாகம், இது தான் சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பாக களிமண் சிலைகளாக செய்து, மண்ணில் புதைக்கப்பட்ட டெர்ராகோட்டா வீரர்கள் மற்றும் குதிரைகள் ஆகும் இதன் நோக்கம் அவர்களின் சக்கரவர்த்தியின் மறுமையிலும் அவரை பாதுகாக்க மற்றும் அவரது பேரரசை பராமரிக்க உதவ கட்டப்பட்டது என நம்பப்படுகிறது. Terracotta Army பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

வரலாற்றுப் பின்னணி:

கின்ஷி ஹுவாங் (259-210 கி.மு), இவர் யிங் ஜெங் என்றும் அழைக்கப்பட்டார், இவர் தான் கின் வம்சத்தின் நிறுவனர் மற்றும் சீனாவை ஒன்றிணைத்த முதல் மன்னர் ஆவார். அவரது ஆட்சியில் தான் சட்டங்கள், நாணயங்கள், எடைகள் மற்றும் அளவுகள் ஆகியவற்றின் நிலைத்தன்மை, மற்றும் பரந்த கட்டமைப்புகளை உருவாக்கினார், மேலும் மாபெரும் சீனப் பேரரசை நிறுவியவரும் அவர் தான். அவர் அவரின் மரணத்துக்கு பின்பும் அவரையும் அவரது அரசையும் பாதுகாக்க இந்த Terracotta Army கட்டமைத்தார்.

டெரகோட்டா இராணுவத்தைக் கண்டறிதல்:

டெரகோட்டா படைகள் 1974ஆம் ஆண்டில் சியான் அருகே உள்ள லின்டாங் மாவட்டத்தில் ஒரு இடத்தில், கிணறு தோண்டிய விவசாயிகளால் எதிர்பாராத விதமாக கண்டுபிடிக்கப்பட்டது. தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் விரைவாக இந்தக் கண்டுபிடிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்தனர் மற்றும் பெரிய அளவிலான தோண்டுதல்கள் தொடங்கியன, இதில் ஆயிரக்கணக்கான களிமண் சிலைகள், ஒவ்வொன்றும் தனித்துவமான முறையில் வடிவமைக்கப்பட்டு போர்க்கோலத்தில் நின்றன. இந்த இடம், பெரிய பரந்த நிலப்பரப்பின் ஒரு பகுதியாக உள்ளது, இந்த பகுதி சுமார் 38 சதுர மைல் பரப்பளவைக் கொண்டுள்ளது, படைகள் மன்னரின் கல்லறை அருகே பல பகுதிகளில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது போல் உள்ளது,சிலைகள் அனைத்தும் உயிர் உள்ள மனிதர்களை போல அளவு கொண்டவை, ஆனால் அவற்றின் பாத்திரங்களுக்கு ஏற்ப உயரம் மாறுபடும், தளபதிகள் மிக உயரமானவர்கள்.டெரகோட்டா படைகள் என்பது ஒரு மதிப்பீட்டில் 8,000 வீரர்கள், 130 ரதங்கள் மற்றும் 670 குதிரைகள் கொண்டது, இதை தவிர இசைக்கலைஞர்களின் சிற்பங்களையும் கண்டுபிடித்தனர், இவர்கள் மன்னரின் மரணத்திற்குப் பிறகும் சேவை செய்வதற்கானவர்களாகக் கருதப்படுகிறது, மேலும் குடிமைப் பொது அதிகாரிகள், நிர்வாகிகள் மற்றும் மன்னரின் அரண்மனைப் பணியாளர்களின் சிலைகளும் கண்டுபிடிக்கப்பட்டன, இது கின்ஷி ஹுவாங் மன்னரின் நிர்வாக அமைப்பையும், மரணத்திற்குப் பிறகும் ஆட்சியை நிர்வகிக்க தேவையானதைப் பிரதிபலிக்கிறது. அவர் ஒரு முழு அரசியல் அமைப்பையும் தன்னுடன் எடுத்துச் சென்றதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

இதுவரை, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 20 சதுர மைல் வளாகத்தை கண்டுபிடித்துள்ளனர், இதில் சுமார் 8,000 டெர்ராகோட்டா வீரர்கள், ஏராளமான குதிரைகள் மற்றும் ரதங்கள், பேரரசரின் கல்லறையைக் குறிக்கும் ஒரு பிரமிட் மேடு, ஒரு அரண்மனை, அலுவலகங்கள், கடை வீடுகள் மற்றும் தொழுவங்களின் எச்சங்கள் உள்ளன. 6,000 வீரர்களைக் கொண்ட பெரிய குழியைத் தவிர, இரண்டாவது குழியில் குதிரைப்படை மற்றும் காலாட்படை பிரிவுகளும், மூன்றில் உயர் அதிகாரிகள் மற்றும் தேர்களும் காணப்பட்டன. நான்காவது குழி காலியாக இருந்தது, இது பேரரசர் இறந்த நேரத்தில் புதைகுழி முடிக்கப்படாமல் விடப்பட்டதாகக் கூறுகிறது.

உருவாக்கம் மற்றும் கைவினை நுட்பம்:

டெரகோட்டா படைகளை உருவாக்குதல் மிகப்பெரிய பணியாக இருந்தது, இது மதிப்பீட்டில் 7,00,000 தொழிலாளர்கள் மற்றும் கைவினைஞர்களால் பல ஆண்டுகளாக செய்யப்பட்டது. சின்னங்கள் உள்ளூர் மண்ணினால் செய்யப்பட்டன, இது அச்சாகவும், நெருப்பில் வறுத்தும், பிறகு பகுதி பகுதியாக சேர்க்கப்பட்டது. கைவினை நுட்பம் மிகுந்த சிரத்தையுடன் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது, சிற்பங்களின் கவசங்கள், ஆயுதங்கள், மற்றும் அவர்களின் காலணி வரிக்குறிப்புகளில் கூட விவரக்குறிப்புகளை கூர்மையாக கவனித்து வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இந்த சின்னங்கள் பளபளப்பான வண்ணத்தில் இருந்தன, ஆனால் பெரும்பாலான வண்ணம் காலப்போக்கில் மங்கியது அல்லது தோல் உதிர்ந்து விட்டது, தோண்டிய பிறகு காற்றுக்கு வெளிப்படுவதால்.

நோக்கம் மற்றும் முக்கியத்துவம்:

டெரகோட்டா படைகளின் முக்கிய நோக்கம் கின்ஷி ஹுவாங் மன்னரை மரணத்திற்கு பிறகு பாதுகாக்கும் படையணியாகச் செயல்படுவதற்காகவேயாகும், அடுத்த உலகில் அவரது ஆட்சியை உறுதிசெய்யும் வகையில் மன்னரின் படை வீரர்களையும், அவரது ஆட்சியின் முக்கிய பிரதானிகளையும் அவருடன் அழைத்து செல்வது போல இது அமைந்துள்ளது, உண்மையில் மன்னரது மறுமையிலும் அவரைப் பாதுகாப்பதே டெரகோட்டா படைகளை கட்டமைத்ததன் முக்கிய நோக்கம் ஆகும்.

Terracotta Army புதைக்கப்பட்ட குழிகளை அகழ்வாராய்ச்சி செய்தபோது, ​​தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் போர் அச்சுகள், வில், அம்புக்குறிகள் மற்றும் ஈட்டிகள் உட்பட சுமார் 40,000 வெண்கல ஆயுதங்களைக் கண்டுபிடித்துள்ளனர். 2,000 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட, இந்த ஆயுதங்கள், பண்டைய சீன உலோகவியலின் அதிநவீனத்தை வெளிப்படுத்துகிறது இது 1937-ல் ஜெர்மனியிலும், 1950-ல் அமெரிக்காவிலும் முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்ட நவீன நுட்பமான ஆயுதங்களை போல் குரோம் முலாம் பூசப்பட்டு, மிகச் சிறப்பாகப் பாதுகாக்கப்பட்டுள்ளன. இது கின் காலத்தின் உற்பத்தி நுட்பம் மற்றும் இராணுவ தயாரிப்பின் நுட்பத்தை விளக்குகிறது.

சீனாவின் வரலாற்றில் முக்கியத்துவம்:

டெரகோட்டா படைகள் கின்ஷி ஹுவாங் மன்னரின் அதிகாரம் மற்றும் விருப்பத்தின் சான்றாக மட்டும் அல்லாமல், கின் வம்சத்தின் இராணுவம், கலாச்சாரம் மற்றும் தொழில்நுட்ப பண்புகளை வெளிப்படுத்துகிறது. மன்னர் நாடு முழுவதும் ஒருங்கிணைக்கப்பட்ட ஆட்சி முறையை காட்டுகிறது. இது பண்டைய சீன மக்களின் மரணத்திற்குப் பிறகான வாழ்க்கை நம்பிக்கைகள் மற்றும் முறைமை குறித்த நம்பிக்கைகளை பிரதிபலிக்கிறது.

பேரரசரின் கல்லறை இன்னும் தோண்டப்படவில்லை:

கண்டுபிடிக்கப்பட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகும், பேரரசர் கின் கல்லறையில் 1 சதவீதத்திற்கும் குறைவாகவே தோண்டப்பட்டுள்ளது. அதற்கான காரணம், பண்டைய நூல்கள் விவரிக்கும் பாதரச ஆறுகள் போன்ற சாத்தியமான பொக்கிஷங்கள் உட்பட, மிகவும் மதிப்புமிக்க மற்றும் நுட்பமான கலைப்பொருட்கள் கல்லறையில் இருப்பதாக நம்பப்படுகிறது. கல்லறையைத் திறப்பது காற்று மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்களின் வெளிப்பாடு காரணமாக இந்த கலைப்பொருட்களுக்கு மாற்ற முடியாத சேதத்தை ஏற்படுத்தும், ஆதலால் கல்லறையில் இருக்கும் பொருள்களை சரியான முறையில் பாதுகாக்க முடியாமல் போகலாம், மேலும் இதில் பண்டைய சுவடிகள் கூறிய கொடிய பாம்புகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது, இது பெரும் ஆபத்தை உருவாக்கலாம்,வரலாற்று நிபுணர்கள், தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சீன அரசு ஆகியோரிடையே கல்லறையை எப்போது மற்றும் எப்படித் திறக்க வேண்டும் என்பதில் பரந்த அளவிலான விவாதம் நடை பெற்றது, பலர் தொழில்நுட்பம் மற்றும் பாது காப்பு முறைகள் நன்கு வளர்ச்சியடையும் வரை காத்திருக்க வேண்டும் என நம்புகிறார்கள்.

2005ஆம் ஆண்டில், சீன தொல்பொருள் ஆராய்ச்சியாளர் டுவான் சிங்போ தலைமையிலான குழு பாதரசத்திற்காக மண் புதைகுழியில் இருந்து 4,000 மாதிரிகளை சோதித்தது; அதன் முடிவு அனைத்தும் Positiveவாக இருந்தன எனவே கல்லறையை தோண்டலாமா, அதன் உள்ளடக்கங்களையும் அந்த இடத்தில் பணிபுரியும் நபர்களையும் சிறந்த முறையில் பாதுகாக்க என்ன முறைகளைப் பயன்படுத்த வேண்டும் என்பது பற்றிய விவாதம் தொடர்கிறது.

உலகளாவிய அங்கீகாரம் மற்றும் UNESCO உலக பாரம்பரிய இடம்:

1987ஆம் ஆண்டில், முதல் கின் மன்னரின் மரணாலயம், அதில் டெரகோட்டா படைகள் உட்பட, யுனெஸ்கோ உலக பாரம்பரிய இடமாக அறிவிக்கப்பட்டது. இந்த அங்கீகாரம் உலகளாவிய முக்கியத்துவத்தை காட்டுகிறது, இச்சம்பவம் ஒப்பற்ற கலாச்சார சாதனையாகவும் முக்கிய சுற்றுலா இடமாகவும் அங்கீகரிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பயணிகள், சீனாவின் மிகப்பெரிய பாரம்பரியத்தை காண சியான் நகரம் வருகை தருகிறார்கள்.

பாதுகாப்பில் சவால்கள்:

டெரகோட்டா படைகளின் முக்கிய சவால்களில் ஒன்று பாதுகாப்பு ஆகும். சின்னங்களின் அசல் வண்ணங்கள் பெரும்பாலும் தோண்டிய பிறகு காற்றிற்கு வெளிப்படுவதால் மங்கிவிட்டன. மேலும், இந்த இடம் சுற்றுச்சூழல் மற்றும் மனிதர்களால் ஏற்படும் பாதிப்புக்கு ஆளாகும் வாய்ப்பு உள்ளது, இருப்பினும் இதை பாதுகாக்கும் முயற்சிகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன.

Terracotta Armyஐ கட்டமைத்த Qin Shi Huangயின் அருஞ்செயல்கள்:

சீனாவின் ஒருங்கிணைப்பு:

Qin Shi Huang, கி.மு. 221-ல் சீனாவை ஒருங்கிணைத்தார், பல்வேறு பிரதேசங்களை அவரது அரசின் கீழ் கொண்டுவந்தார், இது பரந்த சீனாவின் இன்றைய உருவாக்கத்திற்கு அடிப்படையை அமைத்து கொடுத்தது.

புதுமையான முறைமைகள்:

அவரது ஆட்சியை வலுப்படுத்த Qin Shi Huang எடைகள், அளவுகள், நாணயம், எழுத்துமுறை போன்றவைகளை முறைப்படுத்தினார், இவைகள் வணிகம், தொடர்பு, நிர்வாகம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியன.

சட்டப்பாதுகாப்பு மற்றும் மத்தியமயமாக்கல்:

அறிமுகப்படுத்தினார். மத்திய மன்றத்தில் அனைத்து அதிகாரங்களையும் ஒருங்கிணைத்து, மாகாணங்களின் தன்னாட்சி அதிகாரத்தை குறைத்து, அனைத்து அதிகாரத்தையும் மத்திய மன்றத்தில் குவித்தார்.

கட்டிடத் திட்டங்கள்:

பேரரசர் மாபெரும் கட்டிடத் திட்டங்களை தொடங்கினார், இதில் மிகப் பிரபலமானது சீனப் பெரிய சுவர். இது கிட்டத்தட்ட மிங் காலத்தில் கட்டப்பட்டது என்றாலும், Qin Shi Huang-ன் முயற்சிகள் இதற்கான அடிப்படையை அமைத்தன. மேலும், வீதிகளின் பெரும் நெடுவழி மற்றும் பிரமாண்டமான மாளிகையை கட்டும் பணியில் ஈடுபட்டார்.
1974-ல் கண்டறியப்பட்ட களி மண்ணால் செய்யப்பட்ட படையணி, Qin Shi Huang-ன் பெருமையும், மறைவிற்குப் பின் வாழ்க்கையில் அவரது நம்பிக்கையையும் காட்டுகின்றன. ஆயிரக்கணக்கான வீரர்கள், குதிரைகள், வண்டிகள் போன்றவை அவரை பாதுகாக்கப் அவருடன் புதைக்கப்பட்டன.

கொடுங்கோலன் ஆட்சி:

அவரது பெரிய சாதனைகள் போலவே, Qin Shi Huang-ன் ஆட்சி மிகவும் கொடூரமாகவும் இருந்தது. நூல்களை எரித்தல் மற்றும் அறிஞர்களை கொன்றல் போன்றவை இதற்கு உதாரணம். அவரது கடுமையான கொள்கைகள் மற்றும் அடக்குமுறைகள் சீன வம்சத்தின் விரைவான வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தன.

அவரது ஆட்சி, ஒருங்கிணைப்பும் புதுமைகளும், ஒடுக்குமுறையும் கொடூரமும் கொண்டது. அவரது ஆட்சியின் தாக்கம் சீன வரலாற்றில் ஆழமாக பதிந்துள்ளது, நல்லதும், கெட்டதுமான பல விளைவுகளுடன் மாறிவந்துள்ளது.

சுருக்கமாக சொல்லவேண்டும் எனில், மண்ணால் செய்யப்பட்ட இந்த களி மண் படையணி நேரடியாக மரணத்திற்கு பின்பான வாழ்க்கையைக் கையாள முடியாது என்றாலும், அது மறுமையில் பேரரசர் பாதுகாப்பு மற்றும் அதிகாரத்தை தொடர்ந்து பெற வேண்டும் என்ற கலாச்சார மற்றும் மத நம்பிக்கையை பிரதிபலிப்பதை நாம் அறியலாம். இந்த களி மண் படையணி அன்றைய சீனர்களின் ஆழ்ந்த after life நம்பிக்கையை காட்டுகிறது, அதாவது மரணத்திற்கு பின்பும் ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு மனித சக்தி, வளம், மற்றும் பாதுகாப்பு தொடர்ந்து தேவை என காட்டுகிறது.

இந்த Article உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம், மேலும் உங்கள் ஆதரவை வேண்டுகிறோம்.

அடுத்த பதிவு, கீழே Link கொடுக்கப்பட்டுள்ளது.

உலகை அதிரவைத்த ஏலியன் சந்திப்புகள்

இத்துடன் எங்கள் youtube channel link கொடுக்கப்பட்டுள்ளது, அதை பார்த்து உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.

 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply