Alienக்கு மனிதன் அனுப்பிய தகவல்

Alienக்கு மனிதன் அனுப்பிய தகவல்

The Arecibo Message என்பது Alienக்கு மனிதன் அனுப்பிய தகவல் ஆகும், வேற்று கிரக நாகரிகங்களுடன் தொடர்புகொள்வதற்கான மனிதகுலத்தின் மிக முக்கியமான முயற்சிகளில் ஒன்றாகும் இது, நமது கிரகம் மற்றும் பிரபஞ்சத்தில் நமது நிலை பற்றிய அத்தியாவசியத் தகவலை வேற்று கிரக வாசிகளுக்கு தெரிவிக்கும் என்ற நம்பிக்கையுடன் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட கவனமாக வடிவமைக்கப்பட்ட சமிக்ஞையாகும். இந்த கட்டுரையானது அரேசிபோ செய்தியின் வரலாறு, அமைப்பு, நோக்கம் மற்றும் தாக்கத்தை ஆராய்கிறது.

வரலாற்று சூழல்:

அரேசிபோ செய்தி நவம்பர் 16, 1974 இல் புவேர்ட்டோ ரிக்கோவில் உள்ள அரேசிபோ ஆய்வகத்திலிருந்து அனுப்பப்பட்டது. அந்த நேரத்தில் அந்த ஆய்வகத்தில் 305 மீட்டர் (1,000 அடி) விட்டம் கொண்ட உலகின் மிகப்பெரிய ரேடியோ தொலைநோக்கி இருந்தது. அரேசிபோ ரேடியோ தொலைநோக்கியின் மறுவடிவமைப்பைக் கொண்டாடும் விழாவின் ஒரு பகுதியாக இந்த செய்தி விண்ணுக்கு அனுப்பப்பட்டது, அரேசிபோ செய்தியின் பரிமாற்றமானது, பிரபலமான டிரேக் சமன்பாட்டிற்கு அறியப்பட்ட, SETI துறையில் முன்னோடியான டாக்டர். ஃபிராங்க் டிரேக் என்பவரால் உருவானது, இது நமது நட்சத்திர மண்டலத்தில் மனிதர்கள் தொடர்பு கொள்ளக்கூடிய வேற்று கிரக நாகரிகங்களின் எண்ணிக்கையை மதிப்பிடுகிறது. புகழ்பெற்ற வானியலாளர் கார்ல் சாகன் மற்றும் பிற விஞ்ஞானிகளை உள்ளடக்கிய ஒரு கூட்டு முயற்சியால் உருவானது இந்த விண்வெளி செய்தி.

Alienக்கு மனிதன் அனுப்பிய தகவல், என்பது மனிதகுலத்தின் தொழில்நுட்ப திறன்களையும், பிரபஞ்சத்தில் உள்ள மற்ற அறிவார்ந்த உயிரினங்களுடன் இணைவதற்கான நமது விருப்பத்தையும் வெளிப்படுத்தும் ஒரு அடையாளச் சைகையாக இருந்தது. செய்தியைப் பெறுவதற்கும் புரிந்து கொள்வதற்குமான வாய்ப்புகள் நம்பமுடியாத அளவிற்கு மெலிதாக இருந்ததாக அறியப்பட்டாலும், பிரபஞ்சத்தில் நாம் தனியாக இருக்கிறோமா?, இல்லையா ? என்பதற்கான பதிலை தேடுவதாக இருந்தது இதன் நோக்கம்.

Arecibo message எங்கு, எப்படி அனுப்பப்பது?

Arecibo message என்பது நவம்பர் 16, 1974 அன்று Puerto Ricoவில் உள்ள Arecibo ஆய்வகத்திலிருந்து அமெரிக்காவின் நாசாவால் விண்ணுக்கு அனுப்பப்பட்ட சக்தி வாய்ந்த வானொலி செய்தியாகும், இது பூமியில் இருந்து சுமார் 25,000 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ள Globular star cluster M13ஐ நோக்கி செலுத்தப்பட்டது, M13 தேர்ந்தெடுக்கப்பட்டது, ஏனெனில் இது ஒரு பெரிய மற்றும் அடர்த்தியான நட்சத்திர கூட்டங்களின் தொகுப்பாகும், ஆதலால் அறிவார்ந்த வேற்று கிரக நாகரிகத்தால் இந்த செய்தி குறுக்கிடப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்பதால் M13 நோக்கி அனுப்பப்பட்டது.

பரந்த தூரத்தைக் கருத்தில் கொண்டு, இந்த செய்தி M13 கிளஸ்டரை அடைய 25,000 ஆண்டுகள் ஆகும், மேலும் எந்தவொரு சாத்தியமான பதிலையும் திரும்பப் பெற இன்னும் 25,000 ஆண்டுகள் ஆகும். அரேசிபோ செய்தியானது வேற்று கிரகத்துடன் ஒரு தொடர்பை ஏற்படுத்தும் ஒரு தீவிர முயற்சியாக ஒருபோதும் பார்க்கப்படவில்லை, மாறாக நமது தொழில்நுட்ப வல்லமை மற்றும் பிரபஞ்சத்தை அடைவதற்கான நமது விருப்பத்தின் நிரூபணமாக இருந்தது.

Arecibo messagல் என்ன இருந்தது?

இந்த message ஆனது ஆயிரத்து அறுநூற்று எழுபத்தொன்பது பைனரி digitகளை கொண்டது, இது grid வடிவில் எழுபத்திமூணு rows, மற்றும் இருபத்தி மூணு columns கொண்டிருந்தது, இந்தச் செய்தியானது, மனிதனின் தொழில்நுட்ப சாதனையின் எளிய விளக்கமாக வடிவமைக்கப்பட்டது மற்றும் அதை இடைமறிக்கும் எந்த வேற்று கிரக தொழில்நுட்பத்தாலும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடியதாக இருந்தது.

Arecibo messageஐ, ஏழு பகுதிகளாக பிரிக்கலாம், இதன் முதல் பகுதியில் நம்பர் ஒன்றில் இருந்து பத்து வரை எழுதப்பட்டிருந்தது, இரண்டாம் பகுதியில், டிஎன்ஏவை உருவாக்கும் தனிமங்களின் அணு எண்கள் அடிப்படையில் ஹைட்ரஜன்,கார்பன்,நைட்ரஜன்,ஆக்ஸிஜன் மற்றும் பாஸ்பரஸ் இடம் பெற்றிருந்தது, அதில் கார்பன்க்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது, மூன்றாம் பகுதியில் டிஎன்ஏ இரட்டைச் சுருளின், அல்லது double helixஇன் எளிமையான வரைபடம் கொடுக்கப்பட்டிருந்தது, நான்காவதாக, ஒரு மனித உருவத்தின் அடிப்படை அவுட்லைன், ஒரு மனிதனின் சராசரி உயரத்துடன் கொடுக்கப்பட்டிருந்தன. அடுத்து பூமிஇன் மக்கள் தொகை, அந்த நேரத்தில் அது 4billion ஆக இருந்தது, அடுத்து நமது சூரிய குடும்பத்தின் வரை படம், பூமி மூன்றாவதாக கொஞ்சம் உயர்த்தி காட்டப்பட்டிருந்தது. இறுதியாக இந்த messageஐ அனுப்பிய Arecibo telescopeஇன் வரைபடம் இருந்தது.

Arecibo messageக்கு வேற்று கிரகவாசிகளிடம் இருந்து பதில் வந்ததா?

ஆச்சர்யம் அளிக்கும் விதமாக இந்த Arecibo messageக்கு வேற்று கிரகவாசிகள் பதிலளிக்கும் விதமாக, 2001இல் இங்கிலாந்தில் ஒரு crop circle உருவாக்கப்பட்டிருந்தது, இதுவும் grid வடிவில் எழுபத்திமூணு rows, மற்றும் இருபத்தி மூணு columns கொண்டிருந்தது, முதல் பகுதியில் நம்பர் ஒன்றில் இருந்து பத்து வரை எழுதப்பட்டிருந்தது, இரண்டாம் பகுதியில் வித்தியாசமாக கார்பன்க்கு பதிலாக சிலிகானுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது, அவர்களின் DNAயில் ஒரு இணைப்பு அதிகமாக இடம் பெற்றிருந்தன, அடுத்து மனிதர்களின் உருவத்துக்கு பதில் வேற்று கிரகவாசிகளின் படம் இடம் பெற்றிருந்தது,அவர்களின் மக்கள் தொகை இருபத்தொன்று பில்லியன் எனவும், அடுத்ததாக அவர்களின் சூரிய குடும்பம், அதில் மூன்று,நாலு,ஐந்து என மூன்று planetகளும், ஐந்தாவது planetல் நான்கு planetகள் சேர்ந்து இருப்பது போல் வித்தியாசமாக காட்டபட்டிருந்தன. இறுதியாக இந்த messageஐ அனுப்ப பயன்பட்ட telescope வரையப்பட்டிருந்தன.

ஆனால் இந்த crop circle வேற்று கிரக வாசிகளால் அனுப்பப்பட்ட பதில் என அறிவியலாளர்கள் நம்பவில்லை, காரணம், அது நாம் அனுப்பியது போன்ற ஒரு வானொலி செய்தி அல்ல அது ஒரு crop circle ஆகும், வேற்றுகிரகவாசிகள் ஏன் வானொலி செய்தியை அனுப்பவில்லை நாம் செய்தது போல், ஆதலால் அதன் நம்பக தன்மை கேள்வி குறியானது.

தொடர்ச்சியான மற்ற முயற்சிகள்:

அரேசிபோ செய்தியின் மரபு SETI துறையில் தொடர்ந்து செல்வாக்கு செலுத்துகிறது மற்றும் வேற்று கிரக வாசிகளுடன் தொடர்புகொள்வதில் உள்ள சவால்கள் பற்றிய நமது பரந்த புரிதலை உணர வைத்தது, இது ஒரு முன்னோடி முயற்சியாகும், இது நட்சத்திரங்களைச் சென்றடைவதற்கான எதிர்கால முயற்சிகளுக்கு ஒரு நல்ல அடித்தளம் அமைத்தது.

அரேசிபோ செய்தி அனுப்பப்பட்டதிலிருந்து, 1977ஆம் ஆண்டில் வாயேஜர் விண்கலத்தில் ஏவப்பட்ட வாயேஜர் கோல்டன் ரெக்கார்ட்ஸ் உட்பட விண்வெளிக்கு செய்திகளை அனுப்புவதற்கான பிற முயற்சிகள் தொடர்ந்தது, இந்தப் முயற்சிகளில் பூமியிலிருந்து பல்வேறு ஒலிகள், படங்கள் மற்றும் இசை இணைக்கப்பட்டு இருந்தது. நமது கிரகத்தில் மனித கலாச்சாரம் மற்றும் வாழ்க்கையின் விரிவான ஸ்னாப்ஷாட்டை புரிந்து கொள்ள ஏதுவாக எளிமையாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

வரம்புகளும், பாதிப்பும்:

சிலர், இதைப் பற்றிய விமர்சனங்களை முன் வைக்கும் போது. மனிதர்கள் உருவாக்கிய எண்களையும், சித்திரங்களையும் வேற்று கிரக வாசிகள் எப்படி புரிந்து கொள்வார்கள் என்பதில் சந்தேகம் உள்ளது என கூறினார்கள், மேலும், நம்மை வேற்று கிரக வாசிகளுக்கு வெளிப்படுத்துவது நமது பாதுகாப்புக்கு ஏற்றதா என்பதில் கவலைகளை வெளிப்படுத்தினார்கள், ஏனெனில் இதன் மூலம் வினோதமான aliens பூமியை தாக்க கூடும் என பயப்பட்டனர்.

இதன் மூலம் வேற்று கிரகவாசிகள் நம்மை தாக்க முடியுமா?

நாம் அதைப்பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. வேற்று கிரக வாசிகள் இந்த செய்தியை உண்மையில் கண்டறியப்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. ஹெர்குலிஸில் உள்ள கிரேட் கிளஸ்டர், மெஸ்ஸியர் 13 என்று அழைக்கப்படும் சுமார் 3,00,000 நட்சத்திரங்களின் குழுவை நோக்கி ஒரு குறுகிய கற்றை மடடுமே விண்ணுக்கு செலுத்தப்பட்டது, நமது விண்மீன் மண்டலமான பால்வெளியில் 25,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் குளோபுலர் கிளஸ்டர் உள்ளது, ஒளியின் வேகத்தில் நகரும், இந்த செய்தியானது இதுவரை, அதன் மொத்த தூரத்தில் ஆயிரத்தில் ஒரு பங்கு தூரம் அல்லது சுமார் 147 டிரில்லியன் மைல்கள் மட்டுமே பயணித்துள்ளது. மேலும் நமது சூரிய குடும்பத்திற்கு அருகில் நட்சத்திரங்கள் உள்ளன, ஆனால் அவை எதுவும் இந்த செய்தி செல்லும் பாதையில் இல்லை, ஆதலால் இதனால் ஏற்படும் பாதிக்கு மிக மிக குறைவு என்பது தான் உண்மை.

Alienக்கு மனிதன் அனுப்பிய தகவல் என்ற இந்த Article உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம், மேலும் உங்கள் ஆதரவை வேண்டுகிறோம்.

அடுத்த பதிவு, கீழே Link கொடுக்கப்பட்டுள்ளது

Crop Circleன் ஆச்சரியப்படவைக்கும் அழகும் அதன் மர்மங்களும்

இத்துடன் எங்கள் youtube channel link கொடுக்கப்பட்டுள்ளது, அதை பார்த்து உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.

 

 

 

 

 

 

 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply