April பதினைந்து,ஆயிரத்து தொள்ளாயிரத்து பனிரெண்டு,இரவு பதினொன்று நாற்பது,அட்லாண்டிக் பெருங்கடல், நிலவே இல்லாத கடும் இருட்டு,அந்த நேரத்தில் உலகில் மனிதனால் உருவாக்கப்பட்ட பெரிய கப்பல்,மூழ்கவே மூழ்காது என உறுதி அளிக்கப்பட்ட டைட்டானிக்,பனி பாறையில் மோதி அடுத்து என்ன ஆகும் என தெரியாமல் நடு கடலில் நின்று கொண்டிருந்தது,வாருங்கள் டைட்டானிக்கிற்கு என்ன ஆனது என பார்க்கலாம்.
White Star Lineன் Titanic:
April பத்து,ஆயிரத்து தொள்ளாயிரத்து பனிரெண்டு, RMS Titanic,இங்கிலாந்தின் சௌதாம்ப்டன் துறைமுகத்தில் கம்பிரமாக தனது முதல் பயணத்தை தொடங்க நின்று கொண்டிருந்தது,உலகின் மிகவும் ஆடம்பர கப்பலாக வர்ணிக்கப்படும் டைட்டானிக் இப்போதுள்ள எந்த நவீன வசதிகழும் இல்லாத அந்த காலத்தில் மிகவும் பிரம்மாண்டமாகவும்,ஏராளமான வசதிகள் உடையதாகவும் கட்டப்பட்டிருந்தது,தனது முதல் பயணத்தின் போதே உலகின் மிதக்கும் மிகப்பெரிய கப்பல் என்ற பெயரை பெற்று கடல் ராணி என அழைக்கப்பட்டது,இந்த கப்பல் White Star Line என்ற கம்பெனிக்காக Thomas Andrews என்கிற navel architectஆல் அயர்லாந்தில் உள்ள Harland and Wolff என்கிற கப்பல் கட்டும் கம்பெனியால் கட்டப்பட்டது.
இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் White Star Line மற்றும் Cunard என இரண்டு கப்பல் கம்பெனிகளுக்கிடையில் கடும் போட்டி நிலவியது,அதிலும் Cunard அண்மையில் அறிமுகப்படுத்திய Mauretania மற்றும் Lusitania என்ற இரண்டு கப்பல்கள்,அதன் ஆடம்பரத்திற்கும் வேகத்திற்கும் நற்பெயரை பெற்றிருந்தது,குறிப்பாக Mauretania அட்லாண்டிக் பெருங்கடலை மிக வேகமாக கடந்ததற்காக blue ribbon பெற்றிருந்தது,ஆயிரத்து எண்ணூற்று முப்பத்தொன்பதாம் ஆண்டு தொடங்கி,அட்லாண்டிக் பெருங்கடலை மிக வேகமாக கடக்கும் கப்பலுக்கு இந்த மரியாதை வழங்கப்பட்டது,இதனால் போட்டியில் பின் தங்கியிருந்த White Star Line கப்பலின்,chief executive J.Bruce Ismay,ஒலிம்பிக்,டைட்டானிக்,பிரிட்டானிக் என மூன்று பிரம்மாண்டமான மற்றும் ஆடம்பரமான கப்பல்களை கட்டும் முடிவை எடுத்தார்.இந்த மூன்று கப்பல்களும் இதுவரை உலகில் உருவாக்கப்பட்ட கப்பல்களிலே பெரிதாகவும், ஆடம்பரத்தின் உச்சமாகவும் இருக்கவேண்டும் என அவர் நினைத்தார்.
March ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்பதில்,அயர்லாந்தின் பெல்ஃபாஸ்டில் உள்ள மிகப்பெரிய ஹார்லேண்ட் மற்றும் வோல்ஃப் கப்பல் கட்டும் தளத்தில், டைட்டானிக்கை கட்டும் பணி தொடங்கி,தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் இடைவிடாது நடந்தது,மே முப்பத்து ஒன்று,ஆயிரத்து தொள்ளாயிரத்து பதினொன்றில்,மனிதனால் உருவாக்கப்பட்ட,உலகின் மிகப்பெரிய titanic கப்பல் சறுக்கல் பாதைகளில் இறங்கி பெல்ஃபாஸ்டில் உள்ள லகான் நதிக்குள் சென்றது,இருபத்தி இரண்டு டன் சோப்பும் கொழுந்தும் ஸ்லிப்வேயில் லகான் நதியில் கப்பல் செல்லும் வழியை உயவூட்டுவதற்காக பரப்பப்பட்டது.இதை பார்க்க மட்டுமே அந்த நேரம் ஒரு லட்சம் மக்கள் திரண்டிருந்தனர்,கப்பலின் hull உடனடியாக ஒரு பெரிய கப்பல்துறைக்கு இழுத்துச் செல்லப்பட்டது,அங்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அடுத்த ஒரு வருடத்தின் பெரும்பகுதியை கப்பலின் தளங்களைக் கட்டுவதற்கும்,அதன் ஆடம்பரமான உட்புறங்களைக் கட்டுவதற்கும் மற்றும் இருபத்து ஒன்பது ராட்சத கொதிகலன்களை நிறுவுவதற்கும் செலவிட்டார்கள்.கப்பலை கட்டும் போது ஏற்பட்ட விபத்தில் ஆறு பேர் இறந்தனர்,டைட்டானிக் அதன் சோதனை ஓட்டங்களை முடித்து தனது முதல் பயணத்திற்கு தயாராகி கொண்டிருந்தது.
Titanicன் அழகும் ஆடம்பரமும்:
இந்த கப்பல் எண்ணூற்று எண்பத்திரண்டு அடி நீளமும்,தொண்ணூற்று இரண்டு அடி அகலமும்,விண்ணை முட்டும் நூற்று எழுபத்தைந்து அடி உயரமும் உடையது,மற்றும் இதன் எடை நாற்பத்தாறாயிரத்து முந்நூற்று இருபத்தெட்டு டன்னும் ஆகும்,பிரம்மாண்டத்தின் உச்சமாக இருந்த இந்த கப்பலில் மொத்தம் பத்து அடுக்குகள் இருந்தன,உலகின் முதன்முறையாக telephone வசதியுடன்,மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த நவீன கப்பலாக இருந்தது,அதன் நீராவி எஞ்சின்களை இயக்குவதற்கு ஒரு நாளைக்கு அறுநூறு டன் நிலக்கரி தேவைப்பட்டது,டைட்டானிக் சமகால seven star ஹோட்டல்களைப் போலவே மிகவும் பிரமாண்டமாகவும் ஆடம்பரமாகவும் அமைக்கப்பட்டிருந்தது,பயணிகள் கப்பலில் இருப்பதை விட ஒரு மிதக்கும் ஹோட்டலில் இருப்பதைப் போன்ற தோற்றத்தை வெளிப்படுத்துவதே இதன் நோக்கமாக இருந்தது,முதல் வகுப்பு பயணிகளுக்காக ஆழமான நீச்சல் குளம்,உடற்பயிற்சி கூடம், ஸ்குவாஷ் மைதானம் மற்றும் விக்டோரியன் பாணி துருக்கிய குளியல்,சூடான அறை,மிதமான அறை,குளிரூட்டும் அறை மற்றும் இரண்டு மசாஜ் அறை,நீராவி அறை மற்றும் மின்சார குளியல் ஆகியவை இருந்தன.முதல் வகுப்பு பயணிகள் அறைகள் அனைவரும் விரும்பும்படியும் மற்றும் ஆடம்பரமாக அலங்கரிக்கப்பட்டிருந்தன,இதை தவிர வெர்சாய்ஸ் அரண்மனையின் பாணியில் ஒரு ஓய்வு அறை,ஒரு பெரிய வரவேற்பு அறை,ஆண்கள் புகைபிடிக்கும் அறை, வாசிப்பு மற்றும் எழுதும் அறை ஆகியவை அடங்கும்,மேலும் சொகுசான உணவருந்தும் இடம்,அதைத்தவிர வராண்டா கஃபே ஒன்றும் இருந்தது,அங்கு தேநீர் மற்றும் லேசான சிற்றுண்டிகள் வழங்கப்பட்டன,இங்கு கடலின் பிரமாண்டமான காட்சிகளை பார்த்துகொன்டே உணவு உண்ண முடியும்,இங்கு பயன்படுத்தப் பட்ட பொருட்கள் சாமானியர்கள் கனவிலும் நினைத்துக் பார்க்க முடியாததாக இருந்தது
இரண்டாம் வகுப்பு பயணிகளுக்கு முதல் வகுப்பு பயணிகளை விட குறைவான அளவில் வசதி செய்யப்பட்டிருந்தது,டைட்டானிக் கப்பலில் உள்ள மூன்றாம் வகுப்பு பயணிகளுக்கான வசதிகள்,முதல் அல்லது இரண்டாம் வகுப்பு போல் ஆடம்பரமாக இல்லை,ஆனால் அந்த நேரத்தில் இருந்த மற்ற பல கப்பல்களை விட மிகச்சிறந்ததாக இருந்தது.டைட்டானிக்கின் மிகவும் தனித்துவமான அழகுக்கு அழகு சேர்க்கும் அம்சங்களில் ஒன்று, முதல் வகுப்பு படிக்கட்டு ஆகும்,இது கிராண்ட் ஸ்டேர்கேஸ் அல்லது கிராண்ட் ஸ்டேர்வே என்று அழைக்கப்படுகிறது.திடமான ஆங்கில ஓக் மரத்தால் கட்டப்பட்ட வளைந்த வளைவு,மேலும் கப்பலின் மேல் படகு தளத்திலிருந்து E டெக்கிற்கு இடையில் கப்பலின் ஏழு தளங்கள் வழியாக கீழே இறங்கியது,இது ஒரு குவிமாடம் செய்யப்பட்ட இரும்பு மற்றும் கண்ணாடியால் மூடப்பட்டிருந்தது,இதன் அழகு பார்ப்போரை ஆச்சரியப்பட வைத்தது.
கப்பலில் பயணித்தவர்கள்:
டைட்டானிக்கின் முழு பெயர் RMS டைட்டானிக்,RMS என்பது ராயல் மெயில் ஷிப் என்பதாகும், இது ஒரு பயணிகள் கப்பல் என்றாலும், கணிசமான அளவு சரக்குகளையும் கொண்டு சென்றது.RMS என்ற பெயரின் கீழ், அமெரிக்க தபால் அலுவலகத் துறையுடன் இணைந்து பல டன் பொருட்கள் மற்றும் கடிதங்கள் கொண்டு செல்லவும் பயன்படுத்தப்பட்டது, இது மூன்று அமெரிக்கர்கள் மற்றும் இரண்டு பிரிட்டிஷ்காரர்களால் நிர்வகிக்கப்பட்டது, மூவாயிரத்து நானூற்று இருபத்து மூன்று சாக்கு மூட்டைகளில் எடுத்துச் செல்லப்பட்ட ஏழு மில்லியன் கடிதங்களை கையாண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்த பிரமாண்ட கப்பல் மணிக்கு நாற்பத்தி மூன்று Kilo meter வேகம் வரை செல்லும் திறன் உடையது, இந்த கப்பலின் முதல் பயணத்தின் போது இரண்டாயிரத்து இருநூற்று இருபத்து நான்கு பயணிகள் பயணித்தனர், ஆனால் இந்த கப்பலில் மூவாயிரத்து முந்நூற்று முப்பத்தொன்பது பேர் பயணிக்க முடியும், இதில் முதல் வகுப்பில் பயணித்த பெரும்பாலானவர்கள் அந்த காலத்தில், பெரும் கோடீஸ்வரர்கள், இதை தவிர கப்பலை வடிவமைத்த Thomas Andrews, white star lineன் நிர்வாக இயக்குனர் J.Bruce Ismayயும் அடங்கும், டைட்டானிக்கின் உரிமையாளர் ஜே.பி.மோர்கன் முதல் பயணத்தில் பயணிக்க திட்டமிட்டிருந்தார் ஆனால் கடைசி நிமிடத்தில் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது.
Titanicன் கட்டுமானமும், முதல் பயணமும்:
இந்த கப்பலை பற்றி விளம்பரப்படுத்தும் போது,இது மூழ்கவே மூழ்காது.கடவுளால் கூட இதை மூழ்கடிக்க முடியாது என்று கூறப்பட்டது,பொறியியல் அடிப்படையில் பார்த்தால்,இந்த வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட முதல் கப்பல் இது.இதில் பதினாறு நீர்ப்புகா கம்பார்ட்மென்ட்டுகள் கட்டப்பட்டன.அதாவது, இதில் ஒரு அறையில் தண்ணீர் நிரம்பினாலும்,அது மற்ற அறையை மூழ்கடிக்க முடியாது,ஆனால் டைட்டானிக்கின் மேல் ஓட்டின் ஒரு பகுதி ஒன்றரை இன்ச் தடிமானம் கொண்ட ஸ்டீல் தகடுகளால் செய்யப்பட்டது,அந்த ஸ்டீல் தகடுகள் இரும்பு ரிவெட்டுகள் மூலம் ஒன்றாக இணைக்கப்பட்டிருந்தது,குளிர்ந்த பனி நிரம்பிய அண்டார்டிக் பெரும்கடலில் இந்த இரும்பு ரிவெட்டுகள் எளிதில் துருபிடிக்கும் அல்லது கெட்டுப்போகும் தன்மை கொண்டது,ஸ்டீல் தகடுகளின் மிக சிறிய இயக்கம்,அதாவது ஐந்து milli meter நகர்ந்தால் கூட இந்த ரிவெட்டுகள் கழண்டுவிடலாம்,இது கப்பல்,ஐஸ் கட்டி அல்லது ஏதாவது ஒன்றில் மோதும் போது தான் பிரச்சினையை கொடுக்கிறது,டைட்டானிக் மூழ்கியதின் முக்கிய பங்கு இந்த இரும்பு ரிவெட்டுகளுக்கு உண்டு.டைட்டானிக்கில் ஆபத்து காலத்தில் பயணிகள் தப்பிக்க அறுபத்து நான்கு wooden lifeboats கொண்டு செல்ல வசதிகள் செய்யப்பட்டிருந்தது,ஆனால் கப்பல் எக்காரணம் கொண்டும் மூள்கவே மூழ்காது என்ற நம்பிக்கையில் இருபது lifeboats மட்டுமே எடுத்துச்செல்லப்பட்டது,டைட்டானிக்கின் கன்னிப் பயணத்திற்குத் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் இங்கிலாந்தை சேர்ந்த அறுபத்திரெண்டு வயது கேப்டன் எட்வர்ட் ஜான் ஸ்மித் ஆவார்,இவர் மிகவும் அனுபவம் மற்றும் திறமை வாய்ந்தவர்,இந்த பயணத்துடன் அவர் ஓய்வு பெறுவதாக இருந்தது,millionaire captain என்ற செல்ல பெயரும் அவருக்கு உண்டு.
இங்கிலாந்தின் சௌதாம்ப்டன் துறைமுகத்தில் நின்றிருந்த டைட்டானிக்கிற்கு அணி அணியாக பயணிகள் வர தொடங்கினர், ஏழைகள் முதல் கோடிஸ்வரர்கள் வரை கப்பலில் ஏற தொடங்கினர், கப்பலை பார்க்கவும் பயணிகளை வழி அனுப்பி வைக்கவும் பெரும் திரளாக மக்கள் கூடி இருந்தனர், காலையிலே கப்பல் கேப்டன் வந்து விட்டார், கப்பலை சுற்றி பார்த்து திருப்தி அடைந்த அவர் டைட்டானிக்கின் கன்னி பயணத்தை ஆரம்பித்தார், ஆனால் துரதிருஷ்டவசமாக அதற்கு சற்று முன்பு பணி நீக்கம் செய்யப்பட்ட கப்பலின் second officer mr blair தனது உடமைகளை எடுத்துச் செல்லும் போது கப்பலின் binocular வைக்கப்பட்டிருக்கும் அறையின் சாவியையும் அவருக்கு தெரியாமல் எடுத்து சென்று விட்டார், இது பின்பு விபத்துக்கான முக்கியமான காரணியாக இருக்க போகிறது என்பது அவருக்கோ அல்லது கப்பல் ஊழியர்களுக்கோ தெரியாமல் போனது துரதிர்ஷ்டவசமானது.
அட்லாண்டிக் பெரும்கடலில் சீறி பாய்ந்த titanic:
டைட்டானிக் இரண்டாயிரத்து இருநூற்று இருபத்து நான்கு பயணிகளுடன் அமெரிக்காவின் நியூ யார்க் நோக்கி தனது முதல் பயணத்தை ஆரம்பித்தது, பிரான்ஸ் மற்றும் அயர்லாந்தில் இருந்து கூடுதல் பயணிகளை ஏற்றி கொண்டு அட்லாண்டிக் பெரும்கடல் வழியாக நியூ யார்க் நோக்கி நகர ஆரம்பித்தது, கேப்டன் ஸ்மித் அட்லாண்டிக் பெருங்கடலில் மீதி இருக்கும் மூன்று ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை ஆறு நாட்களில் கடக்க வேண்டும் என திட்டம் வைத்து இருந்தார், அதன் படி கப்பல் ஒரு மணி நேரத்திற்கு இருபத்தி இரண்டு மைல் வேகத்தில் செல்ல வேண்டும், கப்பலில் ஆடலும் பாடலும் ஆரம்பித்தது, பயணிகள் மகிழிச்சியில் திளைத்தனர், பல மூன்றாம் நிலை பயணிகள் அமெரிக்காவில் தங்களுக்கு புது வாழ்வு அமைய போகிறது என்ற மகிழிச்சியில் இருந்தனர், அனுபவம் வாய்ந்த கேப்டன் ஸ்மித் கப்பல் பனிப்பாறைகளில் மோதி விட கூடாது என்பதற்காக கப்பலை தெற்குப் பாதையில் செலுத்திக்கொண்டிருந்தார், இது அந்தக் காலத்திற்கான வழக்கமான நடைமுறையாக இருந்தது.
வழக்கத்திற்கு மாறான அதிக பனிப்பாறைகள்:
ஆயிரத்து தொள்ளாயிரத்து பன்னிரெண்டில் கிரீன்லாந்த் பனிப்பாறைகளில் இருந்து அதிக எண்ணிக்கையிலான பனிப்பாறைகள் உடைந்து அட்லாண்டிக் பெருங்கடலில் மிதக்க ஆரம்பித்தது,அது வடக்கு நோக்கி நகர்ந்து பின்பு இந்த பனிப்பாறைகள் Labrador Current மூலம் தெற்கே நோக்கி இழுத்து கொண்டு செல்லப்படுகின்றன,இந்த பனிப்பாறைகளின் பெரும்பகுதி நீருக்குள் இருக்கும் ஆனால் வெறும் பத்து சதவீதம் தான் நீருக்கு வெளியில் தெரியும், டைட்டானிக்யை விட பத்து மடங்கு பெரிய ஒரு பனிப்பாறையில் தான் டைட்டானிக் மோதியது,இந்த காலத்தில் இப்படி பெரிய பனி பாறைகளை கண்டறிய Radar,Sonar Systems,Infrared Sensors மற்றும் பல நவீன கருவிகள் பயன்படுத்தப்படுகிறது,ஆனால் அந்த காலத்தில் இதை கண்டறிய நவீன கருவிகள் எதுவும் இல்லை,அதுவும் பனி பொழியும் இருளில் இதை காண்பது மிகவும் கடினமானது,இதை அருகாமையில் செல்லும் கப்பல்களின் ice warning எச்சரிக்கைகள் மூலமாகவும்,கப்பலில் இருக்கும் lookouts மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம்,lookouts என்பது கப்பலின் முன்பு தூண் போல உயரமாக இருக்கும் ஒன்றில் இருவர் அமர்ந்து இருப்பார்,அமர்ந்து இருக்கும் பகுதியை crow’s நெஸ்ட் என்பார்கள்,இங்கிருந்து தொலைவில் ஏதேனும் பனி பாறைகள் தெரிகிறதா என பார்த்து கொண்டே வருவார்கள்,அப்படி தெரிந்தால் உடனே கப்பலின் கேப்டனிடம் தெரிவிப்பார்கள்,இவர்களிடம் எப்போதும் binacular இருக்கும்,ஆனால் டைட்டானிக் புறப்படும் போது கப்பலின் second officer mr.blair கப்பலின் binocular வைக்கப்பட்டிருக்கும் அறையின் சாவியையும் தெரியாமல் எடுத்து சென்று விட்டார்,ஆதலால் டைட்டானிக்கின் lookoutகள் அந்த பனி பொழியும் இருளில் வெறும் கண்ணில் பார்க்கும் துரதிருஷ்ட நிலையில் இருந்தார்கள்.
April பதினான்கு,காலை ஒன்பது மணி,டைட்டானிக் அட்லாண்டிக் பெரும்கடலின் பாதி தூரத்தை கடந்திருந்தது,பிற கப்பல்களிடம் இருந்து பனி பாறைகள் பற்றிய warnings வர தொடங்கி இருந்தது,senior wireless operator jack phillips அவைகளை சேகரித்து கேப்டன் ஸ்மித்திடம் கொண்டு சேர்த்தார்,உடனே கேப்டன் ஸ்மித் கப்பலை பாதுகாப்பாக தெற்கு நோக்கி நகர உத்தரவிட்டார் ஆனால் கப்பலின் வேகத்தை குறைக்கவில்லை,பொதுவாக தெற்கு நோக்கி செல்வது பாதுகாப்பானது ஆனால் ஆயிரத்து தொள்ளாயிரத்து பன்னிரெண்டில் அதிகமான பனி பாறைகள் தெற்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது,அன்று மட்டும் சுமார் ஐந்து ice warning மெசேஜ் வந்திருந்தது, கப்பலின் அதி வேகம் மற்றும் அட்லாண்டிக் பெரும்கடலின் அசாதாரணமான அமைதி எதோ நடக்க போகிறது என கூறுவது போல் இருந்தது.
இதன் தொடர்ச்சி அடுத்த பகுதியில் தொடரும்.
அடுத்த பகுதிக்கான Link
இந்த Article உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம், மேலும் உங்கள் ஆதரவை வேண்டுகிறோம்.
இத்துடன் எங்கள் youtube channel link கொடுக்கப்பட்டுள்ளது, அதை பார்த்து உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.